இணையத்தை கலக்கும் 'இல்யூஷன் பிரியாணி' - அடுப்பில்லாமல், நெருப்பில்லாமல் தயாராகும் அதிசயம்!
டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்படும் இல்யூஷன் பிரியாணி சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி உணவுப்பிரியர்களை கவர்ந்திழுத்து வருகிறது.
டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்படும் 'இல்யூஷன் பிரியாணி' சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி உணவுப்பிரியர்களை கவர்ந்திழுத்து வருகிறது.
இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் என எதைத் திறந்தாலும் விதவிதமான உணவுகள் பற்றிய புதுப்புது வீடியோக்கள் இணையத்தில் லைக்குகளைக் குவித்து வருகின்றன. மேஜி ஐஸ்கிரீம், பீட்சா தோசை உள்ளிட்ட உணவுகள் இணையத்தை கலக்கி வந்தன. தற்போது அந்த வரிசையில் பிரபல உணவகம் ஒன்றின் ஸ்பெஷலான ’இல்யூஷன் பிரியாணி’ இடம் பிடித்துள்ளது.
டெல்லி கஃபே ஸ்பெஷல் பிரியாணி:
இந்தியர்களின் பிரியாணி மோகம் குறித்து சொல்லித் தான் தெரிய வேண்டும் என்றில்லை. ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, ஜோமேட்டோ இரண்டும் போட்டி, போட்டுக்கொண்டு வெளியிடும் ஆர்டர் பட்டியலில் ஆண்டுதோறும் பிரியாணி முதலிடம் பிடித்து வருகிறது.
தம் பிரியாணி, சிக்கன் பிரியாணி, தந்தூரி பிரியாணி, மண்சட்டி பிரியாணி என ஏகப்பட்ட வகைகளில் பிரியாணி அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது டெல்லியில் உள்ள கனாட் பிளேஸில் உள்ள ஃபார்ஸி ஓட்டலில் விற்பனை செய்யப்படும் ‘இல்யூஷன் பிரியாணி’ தனிக்கவனம் பிடித்துள்ளது.
காரணம் இந்த ஓட்டலில் பரிமாறப்படும் பிரியாணி மேஜிக் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதுதொடர்பாக சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் வீடியோ இணையவாசிகளை “எப்புறா...” என யோசிக்க வைத்துள்ளது.
இல்யூஷன் பிரியாணி:
டெல்லி ஃபுட் நெஸ்ட் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்படுள்ள வீடியோவில், சர்வர் கையில் ஒரு ஜாடி போன்ற பாத்திரத்தை டேபிள் மீது வைக்கிறார். அதற்குள் பிரியாணி அரிசி, மசாலா பொருட்கள், புதினா, முழு முட்டை ஆகியவற்றை போட்டு, இரண்டு குலுக்கு குலுக்குகிறார்.
அதன் பின்னர், அந்த ஜாடியை திறந்தால் சுடச்சுட, மணமும் சுவையும் நிறைந்த பிரியாணி வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது. அடுப்பும் இல்லாமல், நெருப்பும் இல்லாமல் தந்திரம் மூலம் தயாரிக்கப்படும் இந்த பிரியாணிக்கு நெட்டிசன்கள் “இல்யூஷன் பிரியாணி” என பெயர் வைத்துள்ளனர்.
625 ரூபாய் மதிப்புள்ள இந்த பிரியாணி ஏராளமான வாடிக்கையாளர்களிடம் இருந்து பைவ் ஸ்டார் ரேட்டிங் வாங்கி குவித்துள்ளது.
இணையத்தில் வைரலாகி வரும் இந்த இல்யூஷன் பிரியாணி வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பலவகையான கமெண்ட்களை பகிர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, “ஐதராபாத் வாசிகள் பலரும், என்ன தான் இருந்தாலும் எங்க ஐதராபாத் பிரியாணி போல் வருமா?” என பெருமையாக பதிவிட்டு வருகின்றனர்.
அதேபோல், ஒவ்வொருவரும் அவங்களின் கற்பனைப்படி அந்த பிரியாணி மாயமாக எப்படி உருவாகியிருக்கும் என்று பதிவிட்டு வருகின்றனர்.
இறந்தவரின் சவப்பெட்டி முன் சிரிப்புடன் உறவினர்கள்’ - வைரல் போட்டோ பின்னணி!