Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

கொரோனா தாக்கத்தால் மாறியிருக்கும் இந்திய நுகர்வோரின் வாங்கும் பழக்கம்!

கொரோனா அச்சம், மக்களின் வாங்கும் பழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய நிறுவன கடைகளை விட மளிகைக் கடைகள் அதிக விற்பனையை கண்டுள்ளன.

கொரோனா தாக்கத்தால் மாறியிருக்கும் இந்திய நுகர்வோரின் வாங்கும் பழக்கம்!

Saturday March 28, 2020 , 4 min Read

பிரதமர் நரேந்திர மோடி, 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்ததுமே இந்தியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு, மளிகைப் பொருட்களை வாங்கக் கூட்டமாக குவிந்தனர்.


இந்தியாவில் கொரோனா பாதிப்புத் தொடர்பாக, மார்ச் இரண்டாம் வாரத்திலிருந்து, தகவல் வரத்துங்கிய நிலையில், மக்கள் அத்தியவாசியப் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள துவங்கிவிட்டனர். இரு வார காலத்தில் மக்களின் வாங்கும் பழக்கத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

buying

கொரோனா பாதிப்பு அன்றாட வாழ்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நம்முடைய வாங்கும் பழக்கம் மற்றும் விநியோக முறையில் இதன் தாக்கம் தொடர்பான தகவல்கள் தெரிய வரத்துவங்கியுள்ளன.


கொரோனா தாக்கம் காரணமாக, பேக்கேஜ் செய்த உணவுகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் வீட்டு நல பொருட்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது. இது விநியோக அமைப்பின் மீதும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களுக்கு சரக்கு வாகனங்கள் செல்ல அரசு அனுமதிக்காவிட்டால், பற்றாக்குறை உண்டாகும் வாய்ப்புள்ளது.


சில்லறை விற்பனைக் கடைகள், மளிகைக் கடைகள் திறந்திருக்கும் என அரசு அறிவித்திருந்தாலும், அரசு மற்றும் காவல்துறையிடையே போதிய சரியான தகவல் தொடர்பு இல்லாததால், காவல்துறையினர் அனைத்து சில்லறை விற்பனை கடைகளையும் மூடி வருகின்றனர்.


மேலும் அரசு அத்தியாவசியப் பொருட்கள் எவை என்று வரையறை செய்யாததாலும், பேக்கேஜ் உணவுப் பிரிவில் உள்ள பிராண்ட்கள் ஆலையையும் காவல் துறை மூடி வருகிறது.

"குடும்ப வர்த்தகத்தால் நடத்தப்படும் தனிக்கடைகள், நவீன கடைகளை விட அதிகம் விற்பனை செய்கின்றன. மார்ச் 15 வரை சிறிய கடைகள் மீது அதிக தாக்கம் இல்லை. பணியாட்கள் மீது அதிக சுமை இருக்கிறது. வரும் நாட்களில் ஆட்கள் வேலைக்கு வருவதும் குறையும்,” என்கிறார் மொபிசி டெக்னாலஜிஸ் இணை நிறுவனர் லலீது பைசி (Lalit Bhise).

நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் பிராண்ட்கள், விநியோக அமைப்பை உருவாக்க உதவி வரும் சில்லறை விற்பனை தொழில்நுட்ப நிறுவனமான மொபிசி டெக்னாலஜிஸ், சென்னை, பெங்களூரு, தில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கான நுகர்வுப் பழக்க தரவுகளை பகிர்ந்து கொண்டுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களுக்கான தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளது.

"விநியோகம் டிஜிட்டல்மயமாக இதுவே சிறந்த தருணம். பேக்கேஜ் உணவு, தனிநபர் ஆரோக்கியம் மற்றும் வீட்டு நலன் பொருட்கள் அதிகம் விற்பனை ஆகும்,” என்கிறார் லலீத்.

சில்லறை வர்த்தக நிறுவனங்கள், செயலிகள் மூலம் ஆர்டர் செய்கின்றன. உதாரணமாக, மொபிசி வழங்கும் டிஸ்டிமேன் செயலி, மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் பொருட்களை ஆர்டர் செய்ய மற்றும் பிராண்ட்கள் 24 மணி நேரத்தில் சரக்குகளை கையிருப்பு வைக்கவும் வழி செய்கிறது.


மொபிசி டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து யுவர்ஸ்டோரி, விற்பனை மற்றும் பொருட்கள் மீது கொரோனா தாக்கத்தை அறிய 8 நகரங்கள் மற்றும் 300 பிராண்ட்கள் தொடர்பான தகவல்களை திரட்டியுள்ளது.

தற்போதைய நிலை

மார்ச் 23 வரை எந்த ஊரடங்கும் இல்லை என்றாலும், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான செய்திகள் வெளியாகத் துவங்கியதுமே மக்கள் பீதியில் பொருட்களை வாங்கத் துவங்கிவிட்டனர். கைக் கழுவுவதற்கான சானிடைசர் பற்றாக்குறையில் இருந்து இது துவங்கியது.


இந்தியாவின் முதல் அடுக்கு நகரங்களில், தனிநபர் சுகாதாரம், உடனடி உணவு, குழந்தை நலப் பொருட்கள் ஆகியவற்றின் விற்பனை 40 சதவீதம் அதிகரித்தது.

விற்பனை

கையிருப்பு தீரும் என்ற அச்சத்தில், சில்லறை விற்பனை அளவில் சிறிது பீதி நிலவியது. மார்ச் 2வது வாரத்தில் ஒட்டுமொத்த விற்பனை 100% அதிகமானது. கிராக்கி உள்ள அனைத்து பிரிவுகளும் விற்றுத்தீர்ந்தது. குறிப்பாக, குழந்தைகள் நலப்பொருட்கள், உடனடி உணவுகள், பால் பொருட்கள் காலியாகின.  

“சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பிராண்ட்கள் இடையே போட்டி நிலவியது. சில்லறை விற்பனையாளர்கள் சிறிய பிராண்ட்களிடம் பேரம் பேசி, அவற்றின் ஸ்டாக்குகளை தள்ளிவிட்டனர். கையிருப்பு இல்லை என்பதை தவிர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது/ பிராண்ட்கள் மற்றும் விற்பனையாளர்கள் அதிக மதிப்பை பெறும் நிலையில், அதிகம் விற்கும் பொருட்களில் இடத்திற்கான போட்டியும் நிலவுகிறது,” என்கிறார் லலீத்.

"அவர்கள் அச்சுறுத்தும் நிலையில் உள்ளனர். முக்கியக் கணக்குகளை கவனிக்கும் வகையில், பிராண்ட்கள் விற்பனையாளர்கள் சப்ளை செயினை மாற்றி அமைத்து வருகின்றனர். ஆண்டு விற்பனையை அதிகரிப்பதற்கான வாய்ப்பாக இது பார்க்கப்படுகிறது.

‘இதை மக்கள் தொடர்புக்காகவும், நிரந்தரமாக வாங்கும் பழக்கத்தை மாற்றி அமைபதற்காக, தனிநபர் சுகாதாரப்பிரிவில் புதிய பிரிவை உண்டாக்குவதற்கான வாய்ப்பாகவும் பார்க்கின்றனர்’ என்கிறார் அவர்.

கோவை, மைசூர், விஜயவாடா போன்ற இரண்டாம் அடுக்கு நகரங்களில், குழந்தைகள் நலப் பொருட்கள், தனிநபர் சுகாதாரப் பொருட்கள், விற்பனை அதிகரித்திருப்பதாக மொபிசி தெரிவிக்கிறது.  

வாங்கும் முறையில் மாற்றம்

சமூகத் தொலைவு நடவடிக்கையால், சப்ளை செயினுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடையை சமாளிப்பது தான் பெரிய சவலாக இருக்கிறது. பணியாளர்கள் பலர் வீடுகளுக்கு சென்றுவிட்ட நிலையில், அழுகும் பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  


சில்லறை விற்பனை நிலைய பணியாளர்கள் பீதியடைந்திருப்பதாகவும், கடைகள் அடைக்கப்படலாம் என அஞ்சப்படுவதாகவும் மொபிசி தெரிவிக்கிறது. நுகர்வோர் பழக்கத்திலும் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மின்னணு மளிகைக் கடைகளுக்கு பலரும் மாறி வருகின்றனர். தனிநபர் சுகாதாரப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

 

ஹேர் ஆயில் போன்ற பொருட்களில் விற்பனை பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பிரிவில் மக்கள் குறைந்த விலைப் பொருட்களை நாடலாம்.

முதல் இரண்டு வாரங்களில் உப்பான ஸ்னாக்ஸ் மற்றும் மினரல் வாட்டர் அதிகம் வாங்கப்பட்டாலும், மக்கள் உள்ளூர் பிராண்ட்களை நாடினர்.  

டிடெர்ஜண்ட்கள், தேயிலை, சாஸ்கள் போன்றவற்றின் விற்பனை தேக்கம் அடையலாம். குழந்தைகள் உணவு, ஷாம்பு, பழரசம், சாக்லெட் போன்ற பொருட்களின் விற்பனை தாக்குப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்ப ஏற்பு

வரும் காலாண்டுகளில் பிராண்ட்கள் சிறிய விற்பனை நிலையங்களை டிஜிட்டலுக்கு மாற வலியுறுத்தும் நிலை இருக்கும். நுகர்வோர் பொருள் நிறுவனங்கள், ஸ்மார்ட் டிவி மற்றும் இணைய ஒளிபரப்பு விளம்பரங்களில் கவனம் செலுத்தலாம்.


பல பொருட்கள் மற்றும் பிரிவுகளுக்கானத் தேவை அதிகரிக்கும் போது, விற்பனையாளர் சார்ந்த மாதிரியை விட செயலி சார்ந்த விற்பனை மாதிரிக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று மொபிசி தெரிவிக்கிறது. எனவே தொழில்நுட்ப சார்பு அதிகரிக்கும்.

பேமெண்ட்

பேமெண்ட் மற்றும் கடன்களுக்கு டிட்டல் செயலிகள் பயன்பாடும் அதிகரிக்கும். விற்பனையாளர்கள் பிரண்ட் பிரதிநிதிகளுக்கு ஜிபே அல்லது போன்பே மூலம் பணம் செலுத்த அவர்களும் விநியோகிஸ்தர்களுக்கு இதே முறையில் பணம் செலுத்தாலம்.


அதிக விற்பனை காரணமாக ரொக்கப்புழக்கம் அதிகரித்து, விற்பனையாளர்கள் முன்கூட்டியே வாங்குவது சாத்தியமாகும்.  


விற்பனையாளர்களுக்கான கடன் வசதி முக்கியமாகலாம். தற்போது கடன் காலம் அளிக்கப்படுவதில்லை. அனைத்து விற்பனையும் கேஷ் அண்ட் கேரி முறையில் நடைபெறுகிறது. எந்த மொத்த விற்பனையாளரும், சில்லறை விற்பனையாளர்களுக்கான கடன் சுழற்சியை அதிகரிக்கவில்லை. பிராண்ட்களும் கூட, கடன் சுழற்சி 10 நாளாக இருப்பதை விரும்புகின்றன.


ஆங்கிலத்தில்: விஷால் கிருஷ்ணா | தமிழில்: சைபர்சிம்மன்