பசுமை பத்திரங்கள் மூலம் ரூ.16,000 கோடி திரட்ட அரசு திட்டம்!

By YS TEAM TAMIL
October 01, 2022, Updated on : Sat Oct 01 2022 07:01:32 GMT+0000
பசுமை பத்திரங்கள் மூலம் ரூ.16,000 கோடி திரட்ட அரசு திட்டம்!
மத்திய அரசு திட்டமிட்டிருந்ததைவிட பத்தாயிரம் கோடி குறைவாக கடன் வாங்க உள்ள நிலையில், பசுமை பத்திரங்கள் வாயிலாக 16,000 கோடி திரட்ட உள்ளது.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

மத்திய அரசு ஏற்கனவே திட்டமிட்டிருந்ததைவிட பத்தாயிரம் கோடி குறைவாக கடன் வாயிலாக நிதி திரட்ட உள்ளது. அதிகரிக்கும் வருவாய் காரணமாக, நிதி பற்றாக்குறை இலக்கை நிறைவேற்றுவதை நோக்கி அரசு முன்னேறி வருவதை இது உணர்த்துகிறது.


அரசின் கடன் திட்டத்தில் முதல் முறையாக ரூ.16,000 கோடி அளவிற்கான பசுமை பத்திரங்கள் இடம் பெற உள்ளன. கடந்த பட்ஜெட்டில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கான திட்டத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

நிதி

இந்த நிதியை குறிப்பிட்ட பசுமை திட்டங்களுக்காக அரசு ஒதுக்க திட்டமிட்டுள்ளது. வரும் மாதங்களில் இந்த நிதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.


சிங்கப்பூர், தென்கொரியா போன்ற நாடுகள் ஏற்கனவே பசுமை பத்திரங்களை (Green Bonds) வெளியிடத் துவங்கியுள்ளன. இந்தியாவும் இப்போது இந்தப் பட்டியலில் இணைய உள்ளது. பசுமை பத்திரங்கள் சர்வதேச முதலீலாளர்களுக்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பசுமை பத்திரங்கள் வெளியிடுவதற்கு முன், இதற்குத் தேவையான நெறிமுறைகளை நிறைவேற்றுவதற்கான உள்கட்டமைப்பை அரசு உண்டாக்க வேண்டும். பசுமை பத்திரங்கள் நிதி, சுற்றுச்சூழல் நலன் மற்றும் நீடித்த வளர்ச்சி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்பட வேண்டும்.


முன்னதாக அரசு இந்த ஆண்டு ரூ.14.3 லட்சம் கோடி கடனாக திரட்ட திட்டமிட்டிருந்தது. தற்போது இது ரூ.14.2 லட்சம் கோடியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ரிசர்வ் வங்கி, கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றுக்கான அட்டவனையை வெளியிட்டுள்ளது. நிதியாண்டின் இரண்டாம் பாதியில் ரூ.5.9 லட்சம் கோடி கடனாக திரட்டப்பட உள்ளது. செப்டம்பர் வரையான அரையாண்டு காலத்தில் இது ரூ.8.3 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


செய்தி- டைம்ஸ் ஆப் இந்தியா


Edited by Induja Raghunathan