‘50% பணியில் உள்ள பெண்கள் கூடுதல் மன அழுத்தத்தில் உள்ளனர்’ - ஆய்வு முடிவு

பணியாற்றும் பெண்களில் 47 சதவீதத்தினர் மன உளைச்சல் அல்லது மன அழுத்ததிற்கு உள்ளாகி இருப்பதாக லிங்க்டுஇன் ஆய்வு தெரிவிக்கிறது.
0 CLAPS
0

தொழில்முறை வலைப்பின்னல் நிறுவனமான லிங்க்டுஇன் நடத்திய ஆய்வில், பணிபுரியும் இந்திய பெண்களில் 50 சதவீதத்தினர் கொரோனா தொற்று தொடர்பான மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கிறது.

கொரோனா தொடர்பான மன உளைச்சல் அல்லது மன அழுத்தம் பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பதாக 47% பணிபுரியும் பெண்கள் தெரிவித்திருப்பதால், இந்தத் தொற்று பணியாற்றும் பெண்களின் மனநலத்தை பாதித்திருக்கிறது என LinkedIn தெரிவித்துள்ளது.

ஆண்களைப் பொருத்தவரை இந்த எண்ணிக்கை 38 சதவீதமாக இருபது, இந்த சோதனையான காலத்தில் பெண்கள் அதிக இன்னலுக்கு உள்ளாகியிருப்பதை உணர்த்துகிறது.

இந்திய பணியாளர்களின் நம்பிக்கை அளவை வெளிப்படுத்தும், லிங்க்டுஇன் கான்பிடன்ஸ் இண்டக்ஸ் பட்டியலை அண்மையில் வெளியிட்டது.

இந்தியாவில் உள்ள 2,254 தொழில்முறை பணியாளர்கள் மத்தியில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 3 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வு, பணிபுரியும் இந்திய பெண்கள் மற்றும் அம்மாக்கள் மீதான தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. பிரிசாலன்ஸர்கள் தங்கள் நிதி நிலை குறித்து எச்சரிக்கையான நம்பிக்கை கொண்டிருப்பதையும் உணர்த்துகிறது.  

கொரோனா காலத்த்தில் குழந்தை வளர்ப்பின் சாவால்களையும் இந்த ஆய்வு உணர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த நம்பிக்கை குறியீடு அதிகரித்து வருவதையும் ஆய்வு தெரிவிக்கிறது.

  • பணியாற்றும் பெண்களில் மூன்றில் ஒருவர் முழுநேரமாக குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் நிலையில் இருப்பதால், வீட்டில் இருந்தே பணியாற்றுவது கடினமாக அமைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பணியாற்றும் அம்மாக்களில் 44 சதவீதத்தினர், ஆண்களை விட இரு மடங்கு அளவில், குழந்தைகளின் நலனுக்காக பணி நேரத்தையும் கடந்து பணி செய்ய வேண்டியிருக்கிறது,” என அறிக்கை தெரிவிக்கிறது.
  • 20 சதவீத பணியாற்றும் அம்மாக்கள் மட்டுமே, குழந்தைகள் நலனுக்காக குடும்ப உறுப்பினரின் ஆதரவை பெற முடிகிறது. ஆண்களில் இது 32 சதவீதமாக இருக்கிறது.
  • பணியாற்றும் அம்மாக்களில் 46 சதவீதத்தினர் பணியை முடிக்க இரவு நெடுநேரம் பணியாற்றுகின்றனர்.
  • 42 சதவீதத்தினர் பிள்ளைகள் படிப்பில் தங்களால் கவனம் செலுத்த முடியவில்லை எனக் கூறியுள்ளனர்.

பிரிலான்சர்களில் நான்கில் ஒருவர் தங்கள் வருமானம் அதிகரிக்கும் என நம்பிகை தெரிவித்துள்ளனர். மூன்றில் ஒருவர் அடுத்த ஆறு மாதங்களில் தங்கள் முதலீடு அதிகரிக்கும் என நம்பிக்கைக் கொண்டுள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

செய்தி- பிடிஐ

Latest

Updates from around the world