FAU-G; இந்தியாவின் (PUBG) கேம் விரைவில் அறிமுகம்!

By YS TEAM TAMIL|7th Sep 2020
இந்திய அரசால் PUBG விளையாட்டு செயலி தடை செய்யப்பட்ட நிலையில், தொழில்முனைவோர் விஷால் கொண்டால் மற்றும் நடிகர் அக்ஷய் குமார், FAU-G எனும் இந்திய வீடியோ கேமை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தனர்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

PUBG விளையாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், வீடியோகேம் பிரியர்களை மகிழ்விக்கும் வகையில், இந்தியாவிலேயே உருவாக்கப்படும் பியர்லஸ் அண்ட் யுனைடெட் கார்ட்ஸ் (FAU-G ) விளையாட்டை பெங்களூருவைச் சேர்ந்த nCore Games நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்நிறுவனம் தொழில்முனைவோர் விஷான் கோண்டாலை இணை நிறுவனராக கொண்டுள்ளது. பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் இதன் வழிகாட்டியாக உள்ளார். இந்த கேம் மூலம் கிடைக்கும் வருவாயில் 20 சதவீதம், உள்துறை அமைச்சகத்தால் இந்திய ஆயுதப்படையினருக்காக நடத்தப்படும் பாரத் கே வீர் டிரஸ்ட் அரங்காவல் அமைப்புக்குச் செல்லும்.


FAU-G கேம், மிதமான ஆன்லைன் ஷூட்டிங் கேமாக இருக்கும் என்றும், முதல் கட்ட கேம், கல்வான் பள்ளத்தாக்கதை பின்னணியாகக் கொண்டதாக அக்டோபரில் அறிமுகம் ஆகும் என்றும், அடுத்த கட்ட கேம்கள் தொடர்ந்து வெளியாகும் என்றும் nCore நிறுவனம் தெரிவித்துள்ளது.

"உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் இந்திய பாதுகாப்புப் படையினர் சந்தித்த நிஜ சூழல்களை இந்த விளையாட்டு கொண்டிருக்கும். இதில் பங்கேற்குபவர்கள், ஐந்து பேர் குழுவாக இணைந்து செயல்பட்டு எதிரிகளை அழிக்கலாம்,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்திய இளைஞர்களுக்கு வீடியோ கேம் முக்கியப் பொழுதுபோக்கு வகையாக அமைந்துள்ளது. FAU-G கேம் மூலம், அவர்கள் நம்முடைய வீரர்களின் தியாகம் பற்றியும் தெரிந்து கொள்வார்கள். தியாகிகள் குடும்பத்திற்கும் உதவும் எண்ணம் பெறுவார்கள். இதன் மூலம் நம் ஒவ்வொருவரும், பிரதமர் மோடியின் ஆத்மநிர்பார் தொலைநோக்கிற்கு பங்களிக்கலாம்,” என்று நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

அண்மையில் PUBG விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, இந்தியா கேம் உருவாக்குனர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும் இந்திய அரசும் இந்தியாவில் உருவாக்கப்படும் செயலிகளை ஊக்குவிப்பதால், புதுமையான செயலிகளும் உருவாகின்றன.

“பிரதமர் மோடி அழைப்பை ஏற்று, உலகத்தரம் வாய்ந்த கேமை உலகிற்கு அளிப்பது பெருமையாக இருக்கிறது. இந்த விளையாட்டு, மெய்நிகர் உலகில் தீமைகளை அழிக்க உதவுவதோடு, நம்முடைய தியாகிகளுக்கு உதவுதன் மூலம் தேசத்திற்கும் பங்களிப்பு செலுத்த வழி செய்யும்,” என்று nCore Games நிறுவனர் விஷால் கோண்டால் கூறியுள்ளார்.

இந்நிறுவனம் மொபைல் மற்றும் இண்டரியாக்டிவ் கேம்களில் கவனம் செலுத்தி வருகிறது. சர்வதேச கேமிங் ஸ்டூடியோக்களுடனும் இணைந்து செயல்பட்டுளது.


"nCore நிறுவனம் அனுபவம் மிக்க குழுவைக் கொண்டிருப்பதாகவும், இந்தியர்கள் விளையாடும் போது தொடர்பு படுத்திக்கொள்ளக்கூடிய விளையாட்டுகளை உருவாக்க விரிவாக்கம் செய்து வருவதாகவும்,” இணை நிறுவனர் தயாநிதி எம்.ஜி. தெரிவித்துள்ளார்.


ஆங்கிலத்தில்: சோஹினி மிட்டர்