இந்திய கடற்படை பெண் விமானிகள் படைத்துள்ள வரலாற்றுச் சாதனை!

இந்திய கடற்படையைச் சேர்ந்த ஐந்து பெண்கள் அடங்கிய குழு ஒன்று டோர்னர்-228 ரக விமானங்கள் மூலம் அரபிக்கடலில் உளவு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது.
0 CLAPS
0

இந்திய கடற்படையைச் சேர்ந்த பெண்கள் விமானிகள் மட்டுமே கொண்ட குழு ஒன்று அரபிக்கடலில் உளவு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.

பெண் விமானிகள் படைத்த வரலாற்றுச் சாதனை

ஐந்து பெண்கள் அடங்கிய குழு ஒன்று டோர்னர்-228 ரக விமானங்கள் மூலம் அரபிக்கடலில் உளவு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டிருக்கிறது.

லெப்டினெண்ட் கமாண்டர் ஆன்சல் ஷர்மா, லெஃப்டினெண்ட் ஷிவாங்கி, லெஃப்டினெண்ட் அபூர்வா கைத் ஆகிய விமானிகள் மற்றும் டாக்டிகல் & சென்சார் அதிகாரிகள் லெஃப்டினெட் பூஜா பாண்டே மற்றும் பூஜா ஷெகாவத் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் குஜராத்தின் போர்பந்தரில் இருக்கும் இந்திய கடற்படையின் ஐ.என்.ஏ.எஸ்-314 பிரிவைச் சேர்ந்தவர்கள்.

“பல மாதங்களாக விரிவாக பயிற்சியளிக்கப்பட்ட பிறகே இந்த ஐந்து பெண் அதிகாரிகளும் இந்த சாதனையைப் படைத்திருக்கிறார்கள்,” என்று இந்திய கடற்படை அதன் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

பெண்களின் வளர்ச்சிக்கு வாய்ப்பளிப்பதில் இந்திய கடற்படை முன்னோடியாக விளங்குகிறது. இந்திய கடற்படையில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் முன்னெடுப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற நடவடிக்கைகள் பெண் அதிகாரிகள் மென்மேலும் வளர்ச்சியடைவதற்கு உதவும். அதுமட்டுமல்ல, தன்னம்பிக்கையுடன் புதிய பொறுப்புகளை ஏற்கவும் சவால் நிறைந்த வேலைகளில் துணிந்து ஈடுபடவும் வழி வகுக்கும்.

ஆயுதப்படையில் இந்திய கடற்படை மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு சேர்த்து வருகிறது. அந்த வகையில் பெண் அதிகாரிகள் மட்டுமே அடங்கிய குழு உளவு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு சாதனை படைத்திருப்பது பாராட்டத்தக்கது. இவர்கள் படைத்துள்ள வரலாற்று சாதனையானது மேலும் பல பெண்கள் இந்தப் பிரிவுகளில் சேர்ந்து வளர்ச்சியடைய முடியும் என நம்பிக்கையளிக்கிறது.

தமிழில்: ஸ்ரீவித்யா