Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

முதியோர், குழந்தைகள், உடல்நலக் குறைபாடுள்ளோர் ரயில் பயணத்தை தவிர்க்க வேண்டுகோள்!

உடல்நலப் பிரச்சனை உள்ளவர்கள் அவசியம் இருந்தால் தவிர ரயில் பயணத்தை தவிர்க்க ரயில்வேத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முதியோர், குழந்தைகள், உடல்நலக் குறைபாடுள்ளோர் ரயில் பயணத்தை தவிர்க்க வேண்டுகோள்!

Saturday May 30, 2020 , 1 min Read

பயணிகளுக்கு ரயில்வே அமைச்சகம் விடுத்துள்ள வேண்டுகோள்:


புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்வதை உறுதி செய்ய, நாடு முழுவதும், ஷ்ரமிக் சிறப்பு ரயில்களை ரயில்வேத்துறை தினந்தோறும் இயக்கி கொண்டிருக்கிறது.


இந்த சேவையைப் பெறும் சிலர், ஏற்கனவே உடல்நல பாதிப்புகளுடன் இருப்பதும், இது கோவிட்-19 தொற்று சமயத்தில் அவர்கள் சந்திக்கும் அபாயத்தை அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த உடல்நல பாதிப்புடன் பயணம் செய்த சிலர், ரயில் பயணத்தின் போது இறந்த சில துயரமான சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

1

எளிதில் பாதிக்கக் கூடியவர்களை கோவிட்-19லிருந்து பாதுகாக்க, மத்திய உள்துறை அமைச்சகம் 17.05.2020 அன்று பிறப்பித்த உத்தரவுப்படி (எண் 40-3/2020-DM-I(A)),

உடல்நலப் பிரச்சனை உள்ளவர்கள் (உதாரணத்துக்கு – உயர் ரத்தழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், புற்றுநோய், எதிர்ப்புச்சக்தி குறைந்த நிலையில் உள்ளவர்கள்), கருவுற்ற தாய்மார்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகியோர், அவசியம் இருந்தால் தவிர ரயில் பயணத்தை தவிர்க்கும்படி ரயில்வேத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுக்கிறது.

பயணம் செய்ய வேண்டியுள்ளவர்களுக்காக, நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ரயில் சேவை வழங்குவதை உறுதி செய்ய, இந்திய ரயில்வே பரிவார் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், பயணிகளின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியம். அதனால், இந்த விஷயத்தில் எங்களுக்கு அனைத்து மக்களின் ஒத்துழைப்பும் தேவை.


ஏதாவது பிரச்னை அல்லது அவசர உதவி தேவைப்பட்டால், உங்கள் ரயில்வே பரிவாரை தொடர்பு கொள்ள தயவு செய்து தயங்க வேண்டாம். நாங்கள் எப்போதும் உங்களுக்கு உதவுவோம். (உதவி எண்கள் – 139 & 138)


தகவல்: பிஐபி