Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

கொரோனா ஊரடங்கால் சில்லறை வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!

சில்லறை வர்த்தகத்தை நம்பி இருக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களின் வருங்காலம் பற்றியும், தொழில் பாதிப்பால் அரசாங்கத்தின் ஆதரவை நாடும் இந்திய சில்லறை வர்த்தகத் தலைவர்கள் கூறுவது என்ன?

கொரோனா ஊரடங்கால் சில்லறை வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!

Saturday April 25, 2020 , 4 min Read

இந்திய சில்லறை வர்த்தகர்களின் ஒருங்கிணைந்த குரலான இந்திய ரீடெய்லர்ஸ் சங்கம், (RAI- Retailers Association of India) அதன் தேசிய கவுன்சிலின் முக்கிய உறுப்பினர்கள் பிரதிநிதியாகக் கொண்டு, சில்லறைத் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டது.


கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க தொழில் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை ஆதரிக்க, இச்சங்கம் சில வழிகளைப் பரிந்துரைத்துள்ளது. சில்லறை வர்த்தகத் தொழில்துறையைத் தக்கவைக்க உதவுமாறு அரசாங்கத்திடம் மேற்கொள்ளப்பட்டுள்ள வேண்டுகோள்களில்,

வலுவான கொள்கை மற்றும் ஊதியங்களுக்கான ஆதரவு வடிவத்தில் நிதி தலையீடுகள்; அசல் மற்றும் வட்டிகளை செலுத்துவதில் இருந்து விலக்கு மற்றும் பணி மூலதன வடிவத்தில் ஆதரவு ஆகியவைகள் உட்பட்டுள்ளன.
shopping mall closed

சில்லறை வர்த்தகங்கள் சார்பில் RAI அரசாங்கத்திடம் கேட்பது:


  • ப்ளூ காலர் ஊழியர்களின் ஊதியத்தில் 50% வரை ஊதிய மானியங்கள் மூலம் 25000 ரூபாய் வரை அல்லது குறைந்தபட்ச ஊதியங்கள், எது அதிகமோ அது வழங்கப்பட வேண்டும்.
  • சம்பளம் மற்றும் ஊதியங்களை சரியான நேரத்தில் வழங்க, 25% கூடுதல் மூலதன கடன்கள் வழங்குதல்.
  • குறைந்த வட்டியில் விற்பனைக்கு 2-3 மாதங்கள் மற்றும் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு 6-9 மாத கால அவகாசத்திற்கு பணி மூலதன கடன்களை வழங்குதல். முந்தைய அனைத்து கடன்களும் இதேபோன்ற விலக்கினைப் பெற வேண்டும்.
  • நுகர்வுகளை அதிகரிப்பதற்கும் பொருளாதாரத்தை மீண்டும் துவக்குவதற்கும் சில்லறை வணிகத்திற்கான ஜி.எஸ்.டி. குறைக்கப்பட வேண்டும்.
  • அனைத்து வகையான சில்லறை விற்பனையையும் பாதுகாப்பான சூழலில் திறப்பதன் மூலம் நுகர்வுக்கு புத்துயிர் அளித்தல்.


சில்லறைத் வர்த்தகத் துறையில், சுமார் 46 மில்லியன் மக்கள் பணியாற்றுகின்றனர், இது 250 மில்லியன் இந்தியர்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது. உணவு மற்றும் அத்தியாவசியங்கள் மொத்தத்தில் 50% பங்களிப்பு செய்கின்றன, அத்தியாவசியமற்றவை 50% க்கு பங்களிக்கின்றன.

அத்தியாவசியமற்ற வர்த்தகங்களைத் திறக்காதது 2-2.5 கோடி ஊழியர்கள் மற்றும் அச்சில்லறை வணிகத்தில் பணிபுரியும் 12.5 கோடி ஊழியர்கள், மற்றும் மொத்த மற்றும் சில்லறை விற்பனையின் மொத்த விநியோகச் சங்கிலியில் பணிபுரியும் கோடிக்கணக்கான இந்தியர்கள் மீது கடுமையான தாக்கத்தை இது ஏற்படுத்தும்.

இந்தியா முற்றிலும் நுகர்வு சார்ந்தது மற்றும் சில்லறை வர்த்தகம் சார்ந்த இடமாகும். சில்லறை விற்பனை திறக்கப்படாவிட்டால், உற்பத்தி, பொழுதுபோக்கு மற்றும் கைவினைஞர்கள் போன்ற துறைகளில் இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

“ரீடெயில் விற்பனையில் ஒரு மில்லியன் வேலைகளை இழந்தால், அது குறைந்தது 5 முதல் 6 மில்லியனுக்கு அதிகமான வாழ்வாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும். சில்லறை வர்த்தகத்தை மூடுவதால் பொருளாதாரத்தில் பெருமளவில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பேசிய, RAI இன் தலைவர் பி.எஸ்.நாகேஷ் கூறினார்.

சில்லறை வர்த்தகத்துக்குள் பரவலான வணிகங்களை பிரதிநிதித்துவப்படுத்திய சில முக்கியத் தொழிலதிபர்கள், அரசாங்கத்திடமிருந்து தங்கள் எதிர்பார்ப்புகளையும், உயிர்வாழ்வதற்கும், புத்துயிர் பெறுவதற்கும், தொழில்துறையை மறுதொடக்கம் செய்து அதன் வழியாகப் பொருளாதாரத்தை மீட்பெடுப்பதற்கும் தேவையானவற்றைப் பரிந்துரைகளாக சமர்ப்பித்துள்ளனர்.


"பொருளாதாரத்தை மீட்க முக்கியமானது பண உற்பத்தியைப் பெருக்குவதாகும். ஏற்றுமதி இந்தியாவிற்கு அவ்வளவு சாதகமாக இல்லாத சூழலில், உள்நாட்டு நுகர்வை மேம்படுத்துவது ஒரு பாதுகாப்பான வழிமுறையாகும். சில்லறை விற்பனையின் பெரும்பகுதி அத்தியாவசியமற்ற பொருட்களில் அமைந்துள்ளது; அத்தியாவசியங்களை நாங்கள் தொடர்ந்து வழங்கும்போது கூட, அதை புதுப்பிக்க வேண்டும்.

“நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கு சுமார் 6-9 மாதங்களுக்கு தொழில் உதவி, நிதி வடிவத்தில் கையிருப்பு தேவைப்படும். பாதுகாப்பான ஷாப்பிங்கை, நவீன சில்லறை விற்பனை மையங்கள் உறுதி செய்யவேண்டிய நிலையில் உள்ளது. சமூக இடைவெளியை உறுதிப்படுத்த மால்கள் சிறந்த நடைமுறைகளைக் கொண்டு வரலாம்; அவை ஷாப்பிங்கிற்குப் பாதுகாப்பான வழியாகவும் இருக்கலாம். இவை அனைத்தையும் செயல்படுத்த, அரசாங்கமும் தொழில்துறையும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இணைந்து பங்காற்ற வேண்டும்,” என்று அரவிந்த் லிமிடெட் நிர்வாக இயக்குநர் குலின் லல்பாய் கூறினார்.

உள்நாட்டு நுகர்வுக்கு ஊக்கமளிக்கும் தேவை குறித்துப் பேசிய, பாட்டா இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் கட்டாரியா கூறுகையில், “சில்லறை விற்பனை உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளின் தரப்படுத்தப்பட்ட திறப்பு குறித்து நாங்கள் அரசாங்கத்தை ஆதரிக்கிறோம். ஆனால் மால்கள் உட்பட அனைத்து நுகர்வு சேனல்களையும் திறப்பது முக்கியம். நுகர்வு அதிகரிக்கும் போது மட்டுமே உற்பத்தி முழு வேகத்தில் நடக்க முடியும். நவீன சில்லறை விற்பனையை நாம் திறக்க வேண்டும். இதனால் பாதணிகளின் தொழிலில் பணியாற்றும் 4.5 மில்லியன் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு வர முடியும்.” என்று கூறினார்.


பீனிக்ஸ் மாலின் நிர்வாக இயக்குனர் அதுல் ருயா, மால்கள் ஹாப்பிங்கிற்குப் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக ஆக்குவது குறித்த தனது கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர்,

முன் முனை இயங்கவில்லை என்றால் தொழில்துறையின் பின் முனை செயல்பட முடியாது. தடைசெய்யப்பட்ட இயக்க நேரம் (குறிப்பாக அதிக நெருக்கடி இல்லாத நேரங்களில்) சமூக இடைவெளி நெறிமுறைகள்; சினிமா அரங்குகளில் காலியாக உள்ள இடங்கள்; உணவகங்களில் வாடிக்கையாளர்களிடையே தடுப்புகள்; நுழைவாயில்களில் கை சுத்திகரிப்பாளர்கள் மற்றும் வெப்பநிலை சோதனைகள்; மற்றும் அனைத்து சில்லறை ஊழியர்களுக்கும் முகமூடிகள் போன்ற நடவடிக்கைகளை நாங்கள் மால்களில் செயல்படுத்த முடியும்; மால்களில் வாடகைதாரர்கள் அனைவரும் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள்; இதுபோன்ற எல்லா விதிகளையும் சிறந்த நடைமுறைகளையும் அவர்கள் கடைப்பிடிப்பார்கள்,” என்று கூறினார்.

சில்லறை விற்பனையின் அனைத்து சேனல்களையும் திறப்பதன் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்திய, ராகுல் மேத்தா, “உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை ஒன்றை விட்டு ஒன்று தனித்தனியாக இயங்க முடியாது. உற்பத்தியைத் துவக்கலாம், ஆனால் சில்லறை விற்பனை அதில் இல்லை என்பது வணிக ரீதியில் அர்த்தமற்றதாகும்.  ஆடைத் தொழிலில் அனைத்து உற்பத்தியிலும் கிட்டத்தட்ட 90 சதவீதம் Msme-க்கள், இந்த பணியாளர்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பெண்கள்.


CMAI ஆல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில்,

98% உறுப்பினர்கள் தங்கள் பணியாளர்களின் நலனில் அக்கறைக் கொண்டுள்ளனர், ஆனால் அவர்களை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்று தெரியவில்லை. 32 சதவீதத்தினருக்கு மட்டுமே ஏப்ரல் மாத சம்பளம் வழங்க நிதி உள்ளது; 8 சதவீதத்தினருக்கு மட்டுமே மே மாத சம்பளம் வழங்க நிதி உள்ளது; ஜூன் மாதத்தில் 5 சதவீதம் மட்டுமே. எங்களுக்கு மூலதன ஆதரவு தேவை; ஊதிய ஆதரவு; மற்றும் அரசாங்கத்தின் ஜிஎஸ்டி ஆதரவு தேவை. சில்லறை ஆடை விற்பனையில் சுமார் 90% மிகவும் அடிப்படை வடிவத்தில் உள்ளது; அவற்றைத் திறப்பது தொழில்துறையின் பிழைப்புக்கு இன்றியமையாதது,” என்று கூறினார்.

உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை பிழைத்திருக்க, ஃபியூச்சர் ரீடெய்ல் சில்லறை நிர்வாக இயக்குனர் ராகேஷ் பியானி, கூட்டாண்மைக்கான தேவையை முன்வைத்தார்,

விநியோக சேவைகள் மற்றும் சந்தை இடங்களுடனான மூலோபாய கூட்டாண்மை, ஊரடங்கு நீக்கப்பட்ட பின்பு, சேவை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஊரடங்கிங் போது மளிகைக் கடைகள் மிக முக்கியமான பங்கைக் கொண்டிருந்தன. வணிகங்களை மூலதனமாக்க அரசாங்கத்தின் ஆதரவைப் பெறாவிட்டால், விநியோக சுழற்சியைத் தொடங்குவது மிகவும் கடினமாகிவிடும்,” என்று கூறினார்.

இறுதியாகப் பேசிய, ​​RAI இன் தலைமை நிர்வாக அதிகாரி குமார் ராஜகோபாலன், “கடந்த சில மாதங்களாக, நாங்கள் அரசாங்கத்திற்கு பல சமர்ப்பிப்புகளைச் செய்துள்ளோம், அவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். அரசாங்கம் மிகவும் ஆதரவளித்து வருகிறது.

தொழில்துறை தனது ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்; எனவே, அரசாங்கமும் நிதி நிறுவனங்களும் ஒன்றிணைந்து, சில்லறைத் தொழில்துறையின் உயிர்வாழ்விற்கும், ஊரடங்கிற்குப் பிந்தைய புத்துயிர் பெறுதலுக்கும் ஒரு அர்த்தமுள்ள தொகுப்பை வழங்குமாறு நாங்கள் கோரியுள்ளோம்,” என்றார்.

RAI தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க குறைந்தபட்சம் 2-3 மாத வருவாய்க்கு உழைக்கும் மூலதன வடிவத்தில் அரசாங்கத்தின் ஆதரவைக் கோரியுள்ளது, மேலும் கடன்களை செலுத்துவதில் 9 மாதங்கள் வரை விலக்கும் கோரப்பட்டுள்ளது. சில்லறை விற்பனையை திறப்பது இது நாட்டின் நுகர்வையும் அதிகரிக்கும்.