இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த இளம் ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள்!

By Kani Mozhi
September 23, 2022, Updated on : Fri Sep 23 2022 10:00:03 GMT+0000
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த இளம் ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள்!
பிசிக்ஸ் வாலாவின் அலக் பாண்டே, ஜெப்டோவின் கைவல்யா வோஹ்ரா ஆகியோர் ஹுருன் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 2022-ல் இணைந்துள்ளனர்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த ஸ்டார்ட்-அப்’கள் 'பிசிக்ஸ் வாலா', 'ஜெப்டோ' - நிறுவனர்களின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?


Physics Wallah-வின் அலக் பாண்டே, Zepto-வின் கைவல்யா வோஹ்ரா ஆகியோர் ஹுருன் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 2022-ல் இணைந்துள்ளனர்.

billionaire startups

பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த ஸ்டார்டப் நிறுவனர்கள்

ஐஐஎஃப்எல் வெல்த் ஹுரூன் நிறுவனம் 2022 இந்திய செல்வந்தர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் கெளதம் அதானியும், அவரது சகோதரர் வினோத் அதானி 6வது இடத்திலும் உள்ளார்.


இந்தியாவில் இந்த ஆண்டு 79 சதவீத ஸ்டார்அப் நிறுவனர்கள் புதிதாக உருவாகியுள்ளனர். இந்த சதவிகிதம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 54% ஆக அதிகரித்துள்ளது. 2022ம் ஆண்டில் முதல் முறையாக 1,000 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் தனிநபர் சொத்து வைத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 1,100 ஆக உயர்ந்துள்ளது.


இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் $5-ட்ரில்லியன் மதிப்பை எட்டுவதற்கு முதல் தலைமுறை தொழில்முனைவோரின் பங்கு முக்கியப் பங்காற்றியுள்ளதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


இந்த பட்டியலில் 'பிசிக்ஸ் வாலா' என்ற பிரபல எஜிடெக் ஸ்டார்ட் அப் நிறுவனரான அலக் பாண்டே மற்றும் அவரது இணை நிறுவனர் பிரதீக் பூப் ஆகியோர் இருவரும் ரூ.4,000 கோடி சொத்துக்களுடன் 300வது இடத்தில் உள்ளனர்.


ஜெப்டோ இளம் நிறுவனர்கள்:

2020 ஆம் ஆண்டு, ஆதித் பாலிச்சாவுடன் இணைந்து 19 வயதான வோஹ்ரா, நிறுவிய ஜெப்டோ நிறுவனத்தின் மதிப்பு 50 சதவீதம் உயர்ந்ததன் மூலமாக, சொத்து மதிப்பு 1000 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் முதல் இளம் இந்திய பில்லியனர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.


ஐஐஎஃப்எல் வெல்த் ஹுரூன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ஜெப்டோவின் 20 வயதான இணை நிறுவனர் ஆதித் பாலிச்சாவும் இடம் பிடித்துள்ளார்.

Rich list

பிசிக்ஸ் வாலா சொத்து மதிப்பு:

பிசிக்ஸ் வாலா நிறுவனத்தின் இணை நிறுவனர்களான அலக் பாண்டே, பிரதீக் மகேஸ்வரி இருவரும் ஐஐஎஃப்எல் வெல்த் ஹுரூன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதன் முறையாக இடம் பிடித்துள்ளனர். இந்த அறிக்கையின் படி,

அலக் பாண்டே 4 ஆயிரம் கோடி சொத்துடன் 1,103 நபர்கள் அடங்கிய தனிநபர்கள் பட்டியலில் 399வது இடத்தை பிடித்துள்ளார்.

கொரோனா தொற்று நோயின் போது நிறுவப்பட்ட எஜுடெக் நிறுவனமான பிசிக்ஸ் வாலா கடந்த ஜூன் மாதத்தில் 100 மில்லியன் அளவிற்கு நிதி திரட்டியது.

Rich list

பணக்கார பெண்மணி:

இ-காமர்ஸ் தளமான Nykaa ஃபால்குனி நாயர், பயோடெக் தலைவரான கிரண் மஜும்தார்-ஷாவை பின்னுக்குத் தள்ளி, சுயமாக உருவாக்கிய இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கடந்த நவம்பர் மாதம் பட்டியலிடப்பட்ட Nykaaவின் பங்குகள் 40 சதவீதம் வரை சரிந்திருந்தாலும், ஃபால்குனி நாயரின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு 345 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

பைஜூஸ் நிறுவனர் சொத்து மதிப்பு:

உலகின் பிரபலமான எஜூடெக் நிறுவனமான பைஜூஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பைஜு ரவீந்திரனின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு 26 சதவீதம் அதிகரித்து, ரூ. 30,600 கோடியாக உயர்ந்துள்ளது.


அதே போல், க்ரெட்டின் (CRED) நிறுவனர் குணால் ஷாவின் சொத்து மதிப்பும் 3 மடங்காக அதிகரித்துள்ளது. ஃபின்டெக் யூனிகார்னான பேடிஎம் (Paytm) நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவின் சொத்து மதிப்பு 74 சதவீதம் சரிந்து ரூ.4,900 கோடியாக உள்ளது. Paytm இன் பங்கு விலை கடந்த ஆண்டு நவம்பரில் பட்டியலிடப்பட்டதில் இருந்து 60 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது.