தந்தையானார் இந்திய அணி கேப்டன் விராட்: தாய், சேய் நலம் என ட்வீட்!

- +0
- +0
விராட் கோலி - அனுஷ்கா தம்பதியினருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், இந்த தம்பதியும், அவர்களது குடும்பத்தினரும், இருவரின் ரசிகர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறார்கள்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா ஷர்மாவை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். முக்கியமான கிரிக்கெட் போட்டிகளில் கோலி, அனுஷ்கா ஷர்மாவை உடன் அழைத்து செல்வது வழக்கம். அந்த நேரத்தில் களத்திலிருந்து சதமடிக்கும் கோலி, பார்வையாளர் பகுதியிலிருக்கும் அனுஷ்கா ஷர்மாவை பார்த்து, ஃப்ளயிங் கிஸ் கொடுப்பது போன்ற வீடியோக்கள் இருவருக்குமிடையேயான அன்பு, நெருக்கத்தை வெளிக்காட்டியது.

மேட் ஃபார் ஈச் அதர் என்ற சொல்லுக்கு பொருந்தக்கூடியவர்கள் என்றெல்லாம் அவர்களது ரசிகர்கள் இருவரையும் கொண்டாடித்தீர்ப்பர். அனுஷ்கா ஷர்மா கருத்தரித்த நிலையில், கோலி உதவியுடன் அவர் யோகா செய்யும் புகைப்படம் செம வைரலானது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் குழந்தை பிறக்க இருந்த காரணத்தினால் கோலி ஆஸ்திரேலிய தொடரிலிருந்து இந்தியா திரும்பியிருந்தார்.
"நாங்கள் இருவரும் மெய்சிலிர்ந்து இந்த செய்தியை உங்களுடன் பகிர்கிறோம். இன்று மதியம் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் எங்களது நன்றி. உங்களது அன்பு, ஆசீர்வாதம், வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளும் நன்றி. எனது மனைவி அனுஷ்காவும், குழந்தையும் நலமாக உள்ளனர்.
மிகவும் மகிழ்ச்சியுடன் எங்களது வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறோம். இந்த நேரத்தில் எங்களது பிரைவஸிக்கு நீங்கள் மதிப்பு கொடுப்பீர்கள் என நம்புகிறோம்,” என கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இருவரின் ரசிகர்களும் சமூகவலைதளங்களில் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
- +0
- +0