அமெரிக்க நிறுவனத்தில் ரூ.5,000 கோடி மதிப்பு வைத்திருக்கும் இந்தியர்: யார் இந்த சுரோஜித் சாட்டர்ஜி?

Coinbase நிறுவனங்களுடன் இணைந்த இந்தியர்!
3 CLAPS
0

முன்னாள் கூகுள் நிறுவன நிர்வாகி இந்தியாவைச் சேர்ந்த சுரோஜித் சாட்டர்ஜி. இவர் பிப்ரவரி 2020ல் தலைமை தயாரிப்பு மேலாளராக மிகப் பெரிய அமெரிக்க கிரிப்டோ பரிமாற்ற நிறுவனமான Coinbase Global-ல் சேர்ந்தார். இதில் சேர்ந்த வெறும் 15 மாதங்களில், சாட்டர்ஜியின் Coinbase பங்கு சுமார் 180.8 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 1,500 கோடி மதிப்புடையதாகக் கருதப்படுகிறது.

ப்ளூம்பெர்க் கூற்றுப்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவர் 465.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 3,500 கோடி) மதிப்புள்ள பங்குகளை பெற இருக்கிறார். இந்த சாட்டர்ஜி ஐ.ஐ.டி கரக்பூரில் பட்டம் பெற்ற பட்டதாரி. இவர் இங்கு பி.எஸ்.சி படித்தவர்.

இதற்கிடையே, இந்த 180.8 மில்லியன் டாலர்கள் உடன் Coinbase நிறுவனர்களான பிரையன் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பிரெட் எர்சம் ஆகியோருடன் உள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, இவர்களின் பங்குகளின் மதிப்பு 16 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும்.

Coinbase பங்குகள் 381 டாலருக்கு விற்கப்பட்டன. இது 100 பில்லியன் டாலர் மதிப்பீட்டைக் கொடுத்தது.

இதற்கிடையே, சாட்டர்ஜி மூன்று ஆண்டுகள் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet Inc-க்கில் பணிபுரிந்து வந்தார். கடந்த பிப்ரவரியில் Coinbase-ல் இணைந்துகொண்டார். அதற்கு முன்னர் இந்திய இ-காமர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட்டில் மொபைல் தேடல் விளம்பரங்கள் மற்றும் ஆட்ஸென்ஸிற்கான தயாரிப்பு மற்றும் விநியோகத்திற்கு தலைமை தாங்கினார். பெங்களூரை தளமாகக் கொண்ட நிறுவனத்தில் அவரது அனுபவம் ஆம்ஸ்ட்ராங்கை கவர்ந்தது.

இதனையடுத்தே ஆம்ஸ்ட்ராங்; சாட்டர்ஜியை தன்னுடன் இணைத்துக்கொண்டார்,

“அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில் ஒருவர் மட்டுமே வாழ்ந்த, பணிபுரிந்த, அல்லது பரிவர்த்தனை செய்தபோது, எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கான வாய்ப்பின் அளவைப் புரிந்துகொள்வது கடினம்" என்று சாட்டர்ஜி நியமனத்துக்கு முன் பதிவிட்டு அவரை வரவேற்றார். 

Latest

Updates from around the world