Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

இந்தியாவின் முதல் விண்வெளி சுற்றுலா பயணி: ரூ.1.8 கோடி செலவு செய்யும் கேரள தொழில் முனைவர்!

ரூ.1.8 கோடி செலவில் விண்வெளி சுற்றுலா!

இந்தியாவின் முதல் விண்வெளி சுற்றுலா பயணி: ரூ.1.8 கோடி செலவு செய்யும் கேரள தொழில் முனைவர்!

Thursday August 12, 2021 , 3 min Read

விண்வெளிப் பயணங்கள் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. வழக்கமாக ஆய்வுக்காக மேற்கொண்ட விண்வெளிப் பயணங்கள் தற்போது சுற்றுலாவாக மாறத் தொடங்கியுள்ளன. இதற்கு அடித்தளம் அமைத்தவர்கள் கோடீஸ்வரர்கள் மற்றும் ஜெஃப் பெசோஸ் மற்றும் ரிச்சர்ட் பிரான்சன்.


இந்த இருவரும் தங்கள் விண்வெளி விமான நிறுவனங்கள் மூலம் தனிப்பட்ட பயணங்களை மேற்கொண்டனர். இவர்களின் முயற்சியால் தனிநபர்கள் இப்போது விண்வெளி சுற்றுப்பயணம் கூட செய்யலாம் என்ற அளவுக்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன.


இந்தநிலையில், ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலடிக் விண்வெளி நிறுவனத்தின் அடுத்த பயணத்தில் இந்தியர் ஒருவர் இடம்பெறலாம் எனக்கூறப்படுகிறது. கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட சந்தோஷ் ஜார்ஜ் குளங்கரா என்ற இந்தியர் முதல்முறையாக விர்ஜின் கேலடிக் விண்வெளி நிறுவனத்தின் அடுத்த பயணத்தின் மூலம் விண்வெளிக்கு செல்ல இருக்கிறார்.


2007 ஆம் ஆண்டிலேயே பிரான்சின் விர்ஜின் கேலடிக் மூலம் கட்டண விண்வெளி சுற்றுலாப் பயணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியராக அறியப்படுபவர் சந்தோஷ் ஜார்ஜ் குளங்கரா.

சந்தோஷ்

ரிச்சர்ட் பிரான்சன் உடன் சந்தோஷ் ஜார்ஜ் குளங்கரா

விர்ஜின் நிறுவனம் அவரை அடுத்த பயணத்தில் அழைத்துச் செல்லும் என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. ஆனால், கடந்த மாதம் பெசோஸ் மற்றும் பிரான்சனின் விண்வெளிப் பயணங்களுக்குப் பிறகு அது விரைவில் நடக்கும் என்று சந்தோஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 49 வயதாகும் சந்தோஷ், கேரளாவைச் சேர்ந்த தொழில்முனைவோர்.


இவர் சஃபாரி என்ற டிவியின் நிறுவனர் ஆவார். இந்த டிவி சேனல் பயணம் மற்றும் ஆய்வுக்கான ஒரு தனித்துவமான சேனல். இதே சந்தோஷ் இப்போது கேரள மாநில திட்டமிடல் வாரியத்தின் பகுதிநேர உறுப்பினராகவும் இருக்கிறார்.


சோலோ ட்ராலவராக இருக்கும் சந்தோஷ் இதுவரை 130 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் முடித்திருக்கும், குளங்கரா லேபர் இந்தியா பப்ளிகேஷன்ஸ் என்று நிறுவனத்தை நிறுவி, இதழ்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிட்டு வந்தார்.


1997 ஆம் ஆண்டில், குளங்கரா தனது முதல் சோலோ பயணத்தைத் தொடங்கினார். இந்தப் பயணம் ஆவணப்படுத்தப்பட்டு ஆரம்பத்தில் ஆசியநெட் சேனலில் ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து சபாரி டிவியை நிறுவி நடத்தி வருகிறார்.

சந்தோஷ்

இதற்கிடையே, விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் மூலமாக விண்வெளி பயணம் செய்வதற்காக ரூ.1.8 கோடியை செலுத்த இருக்கிறார். பயிற்சி செலவுகள் மற்றும் பிற செலவுகள் தவிர பயணத்துக்கான டிக்கெட் கட்டணம் மட்டுமே இந்தத் தொகை வசூலிக்கப்படுகிறது. இந்த தொகை குறித்து பேசியுள்ள சந்தோஷ்,

“இது பெரிய தொகை அல்ல. இது ஒருவரின் கண்ணோட்டத்தைப் பற்றியது. இது ஒரு பெரிய தொகை போல் தோன்றலாம். ஆனால் அனுபவத்திற்கும் வரலாற்று முக்கியத்துவத்திற்கும் மதிப்புள்ளது. விண்வெளிச் சுற்றுலா முற்றிலும் எதிர்கால வணிகமாகும். இது மனிதர்களுக்கு அடுத்த பெரிய விஷயமாக மாறும்,” என்கிறார்.

அதுபோல, விண்வெளிச் சுற்றுலா என்பது எதிர்காலத்திற்கான முதலீடு. பூமியில் உள்ள வளங்கள் இங்குள்ள அனைத்து மனிதர்களையும் தக்கவைக்க போதுமானதாக இல்லாத ஒரு எதிர்காலத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். விண்வெளி மற்றும் பிற கிரகங்களுக்கு பயணம் செய்வதில் அனுபவம் வாய்ந்த நிறுவனம் இருந்தால் ஆய்வுகள் செய்யும் திறன், அந்த சூழ்நிலையிலிருந்து அவர்கள் பயனடைய மாட்டார்களா?. மற்ற கிரகங்களின் காலனித்துவம் மற்றும் விண்வெளி சுற்றுலா போன்ற முயற்சிகளை நான் முன்கூட்டியே பார்க்கிறேன், என்றுள்ளார்.


தொடர்ந்து அவர் இந்த விண்வெளி சுற்றுப்பயணத் திட்டம் எவ்வாறு தனக்குள் தொடங்கியது எப்படி என்பது தொடர்பாகவும் பேசியிருக்கிறார்.

“நான் 2005 இல் இங்கிலாந்தில் ஒரு ரயிலில் பயணம் செய்தேன். அப்போது மற்றொரு பயணி விட்டுச் சென்ற செய்தித்தாளில் ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். ரிச்சர்ட் பிரான்சன் தனது நிறுவனத்தின் விண்வெளி பயணத்தில் சேர மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்த விளம்பரம் அதில் இருந்தது. நான் ஏற்கனவே ப்ரான்ஸனைப் பற்றி அறிந்திருந்தேன். அவர் பற்றிய பெரும் அபிமானம் கொண்டிருந்தேன். நான் உடனடியாக ஆர்வமாக இருந்தேன். நான் அந்த செய்தித்தாளை என்னுடன் எடுத்துக்கொண்டு வீடு திரும்பிய பிறகு, பிரான்சனின் நிறுவனத்திற்கு ஒரு மெயில் அனுப்பினேன்.

சந்தோஷ்

நான் எனது பயணப் பின்னணியை அவர்களிடம் சொன்னேன், நான் பயண ஆவணப் படங்களை செய்பவன் என்று விளக்கி இருந்தேன். சில தொலைப்பேசி நேர்காணல்கள் இருந்தன.


அவர்களுடன் ஒரு ஊடகவியலாளர் இருப்பதில் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததாகத் தோன்றியது. ஆனால் விண்வெளிப் பயணத்தில் சேர எனக்கு இந்திய அரசின் அனுமதி தேவை என்பதால் சில அதிகாரத்துவத் தடைகள் இருந்தன. இறுதியாக, நான் 2007ல் இந்தியாவில் இருந்து முதல் விண்வெளி சுற்றுலாப் பயணியாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தேன்.

இதுவரை நான் சென்றதிலேயே இது மிகவும் விலையுயர்ந்த பயணமாக இருக்கும். பயிற்சிக்கான செலவுகள் மற்றும் இதர செலவுகள் தவிர பயணத்திற்காக நான் ரூ.1.8 கோடி செலவிடுகிறேன். இந்த பயணத்துக்கு பிறகு நான் முதல் இந்திய விண்வெளி சுற்றுலாப் பயணியாக வருவேன் என்று எனக்குத் தெரியும்," என்று பேசியிருக்கிறார்.


தகவல் உதவி- indianexpress | தமிழில்: மலையரசு