பதிப்புகளில்
நியூஸ் வியூஸ்

’யூடியூப்’-ன் மிகப்பெரிய பார்வையாளர் பரப்பாக விளங்கும் இந்தியா...

4ஜி இணைய வசதி மாதம் 2 டாலருக்கு குறைவாக இருப்பதால், இந்தியர்கள் இணையத்திலும், வீடியோ பார்ப்பது, ஷாப்பிங் செய்வதிலும் அதிக நேரம் செலவிடுகின்றனர் என ஆப் ஆனி அறிக்கை சொல்கிறது.

YS TEAM TAMIL
8th Feb 2019
7+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

அண்மையில், வால்ஸ்டிரீட் ஜர்னல், இந்தியர்கள் கடந்த 3 ஆண்டுகளில் தங்கள் ஸ்மார்ட்போனில் அணுகிய வீடியோக்களின் அளவு 10 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தது. இது 2018 ல் இந்தியாவை யூடியூப்பின் மிகப்பெரிய பார்வையாளர் பரப்பாக ஆக்கியிருக்கிறது என, செயலிகளை கவனிகும் ’ஆப் ஆனி’ நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னணி ஐந்து ஸ்டீரிமிங் செயலிகளில் இந்தியர்கள் மொத்தமாக 47 பில்லியன் மணி நேரத்தை செலவிட்டு முதலிடம் பிடித்துள்ளனர். பிரேசில் 22 பில்லியன் மணி நேரத்துடன் இரண்டாவது இடம் வகிக்கிறது.

இந்த நிலை எப்படி உண்டானது? ஒரு காரணம் என்னவெனில் நாடு முழுவதும் 4ஜி இணைய வசதியின் கட்டணம் மாதம் 2 டாலருக்கும் குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியர்கள் செயலிகளில் அதிக நேரம் செலவிடுகின்றனர். மாதந்தோறும் டவுண்லோடு செய்யப்படும் செயலிகள் எண்ணிக்கையில் தென்கொரியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மற்ற நாடுகள் மாதம் 100 செயலிகளை டவுண்லோடு செய்யும் நிலையில் இந்தியாவில் இது 68 செயலிகளாக இருக்கிறது.  

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையில், 280 மில்லியன் வாடிக்கையாளர்கள் மாதம் சராசரியாக 10.8 ஜிபி மதிப்பு டேட்டாவை பயன்படுத்துவதாக தெரிவித்திருந்தது. 

அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலத்தில் 864 கோடி மதிப்புள்ள டேட்டா ஜியோ நெட்வொர்க்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இந்தியர்கள் சராசரியாக 2.5 மணி நேரத்தை தங்கள் போனில் செலவிடுகின்றனர். இந்தோனேசியாவில் இது 4 மணி நேரமாக உள்ளது.

செயலிகள்

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற சேவைகள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப தங்கள் சேவையை மாற்றி அமைத்து வருவதும் இந்தியாவில் இணைய பயன்பாடு அதிகரிக்க ஒரு காரணமாகும். இந்நிறுவனங்கள் உள்ளூர் உள்ளடக்கத்தில் முதலீடு செய்து வருகின்றன.

ஆப் ஆனி அறிக்கை உணவு மற்றும் பாணங்கள் செயலிகள் இந்தியாவில் 120 சதவீத வளர்ச்சி இருப்பதாக தெரிவிக்கிறது. உணவு டெலிவரி சேவை செயலிகள் இதற்கு முக்கியக் காரணமாக உள்ளன. ஸ்மார்ட்போன்கள் டிஜிட்டல் மற்றும் நிஜ உலகை இணைக்கும் சாதனமாக உள்ளன.  

2018, ல் இந்தியர்கள் உலகிலேயே அதிகமாக 100 பில்லியன் செஷன்களை ஷாப்பிங்கில் செலவிட்டுள்ளனர். அமெரிக்காவிலேயே இது 60 பில்லியன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மேலும் நிதி நுட்ப செயலிகள் பயன்பாட்டிலும் இந்தியர்கள் முன்னிலை வகிக்கின்றனர். சமூக தொடர்பு செயலிகளையும் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இந்தப் பிரிவில் 110 பில்லியன் மணி நேரத்தை செலவிட்டுள்ளனர்.

வாட்ஸ் அப் இதில் முன்னிலை வகிக்கிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் அடுத்த இடங்களில் உள்ளன.

ஆக, ஒவ்வொரு முதலீட்டாளர்களும் இந்தியாவில் அடுத்த 500 மில்லியன் வாடிக்கையாளர்கள் பற்றி பேசுவதில் வியப்பில்லை. புதிய வாய்ப்புகள் கொண்ட புதிய சந்தை தொழில்முனைவோர் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான ஊக்கமாக அமைகிறது. எனவே, மொபைலில் தான் எதிர்காலம் உள்ளது எனலாம்.

ஆங்கில கட்டுரையாளர்: விஷால் கிருஷ்ணா | தமிழில்; சைபர்சிம்மன்

7+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags