பதிப்புகளில்
நியூஸ் வியூஸ்

India-Pak கிரிக்கெட் போட்டி: 100 கோடி விளம்பர வருவாயை அள்ளப் போகும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

ரசிகர்கள் மத்தியில் எக்கசக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் மேட்ச் ஒளிப்பரப்பில் வரும் விளம்பரங்கள் மூலம் அதிக வருவாயை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

cyber simman
14th Jun 2019
15+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

கிரிக்கெட் விளையாட்டை பொருத்தவரை உலகக் கோப்பையை விட பெரிய அரங்கு இருக்க முடியாது. உலகக் கோப்பை என்று வரும் போது, இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதலைவிட அதிக ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக்கூடிய போட்டி வேறு இல்லை.

இப்படி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், இந்தியா-பாகிஸ்தான் மோதல் வரும் ஞாயிறு அன்று நடைபெறும் நிலையில், அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்த போட்டி மூலம் ரூ.100 கோடி விளம்பர வருவாயை ஈட்ட இருப்பதாக மிண்ட் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

கிரிக்கெட் உலகில் எப்போதுமே, இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அண்மைக் காலங்களில் அரசியல் காரணங்களினால், இரு நாடுகளும் நேரடி போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வரும் நிலையில், தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் வரும் 16ம் தேதி மோதுகின்றன.

India Match

பட உதவி: hindustan Times

ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் நடைப்பெற உள்ள இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பை போட்டிகளிலேயே இந்த போட்டிக்குத் தான் அதிக அளவிலான டிக்கெட் எதிர்பார்ப்பு நிலவியதாக முந்தைய செய்திகள் தெரிவிக்கும் நிலையில், தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியிலும் இந்த போட்டி இதுவரை இல்லாத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பு ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்சுக்கு விளம்பர வருவாயை அளித்திதர உள்ளது. உலகக் கோப்பை போட்டி காலத்தில் மொத்தம் 5,500 நொடி விளம்பர வாய்ப்பை கைவசம் வைத்துள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா-பாக் போட்டி மூலம் ரூ.100 கோடி ஈட்ட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

உலகக் கோப்பை போட்டிகளின் போது 10 நொடி விளம்பரங்களுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ரூ.16 முதல் ரூ.18 லட்சம் கட்டணம் வசூலிக்கிறது. இந்தியா –பாகிஸ்தான் போட்டியை பொருத்தவரை, கடைசி நேர பதிவிற்கு இந்த கட்டணம் ரூ.25 லட்சம் வரை அதிகரித்திருப்பதாக ’மிண்ட்’ செய்தி தெரிவிக்கிறது.

இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளுக்கும் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருந்தாலும், இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு இது உச்சத்தில் இருக்கிறது. எனவே, வர்த்தக நிறுவனங்களும் இந்த போட்டியின் போது விளம்பரம் செய்ய அதிக பணத்தை கொட்டத் தயாராக உள்ளன.

உலகக் கோப்பை போட்டிகளுக்கான விளம்பர இடம் தொகுப்பாக விற்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான அதிக விளம்பர இடம் மிச்சமில்லாத நிலையில், எஞ்சியுள்ள இடம் 10 நொடிக்கு ரூ.25 லட்சம் எனும் கட்டணத்தை பெற்றுத் தரக்கூடியதாக கருதப்படுகிறது. இது 40 முதல் 50 சதவீதம் அதிகமாகும்.

உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா தொடர்ச்சியாக பாகிஸ்தானை வென்று வருவதும் இந்த மோதலுக்கான எதிர்பார்ப்பை அதிகரித்திருப்பதாக விளம்பர வல்லுனர்கள் கூறுகின்றனர்.

போன்பே, ஒன்பிளஸ், உபெர், டிரீம் 11, ஹேவெல்ஸ், எம்.ஆர்.எப், கோகோ கோலா, அமேசான் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தனது விளம்பர தொகுப்பில் பெற்றுள்ளது.15+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags