Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

அடுத்த 1 ஆண்டில் 25,000 புதியவர்களை வேலையில் அமர்த்த இன்போசிஸ் திட்டம்!

அடுத்த 12 மாதங்களில் நிரப்ப ஏற்பாடு!

அடுத்த 1 ஆண்டில் 25,000 புதியவர்களை வேலையில் அமர்த்த இன்போசிஸ் திட்டம்!

Thursday April 15, 2021 , 2 min Read

அடுத்த 12 மாதங்களில் 25,000 புதியவர்களை வேலைக்கு அமர்த்த இன்போசிஸ் திட்டமிட்டுள்ளது. இன்போசிஸ் கடந்த 12 மாதங்களில் சுமார் 21,000 பேர்களை புதிதாக வேலைக்கு அமர்த்தியது.


இந்த பணியமர்த்தல் நடவடிக்கையை 20% அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள இன்போசிஸ் தலைமை இயக்க அதிகாரி (சிஓஓ) யுபி பிரவீன் ராவ் என்பவர்,

"இந்த ஆண்டு 21,000 புதிய ஊழியர்களைச் சேர்த்துள்ளோம். மேலும் வரும் ஆண்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இது போன்ற 25,000க்கும் அதிகமானவர்களை வேலைக்கு எடுக்க இருக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கடந்த ஆண்டு இன்போசிஸ் பணியில் இணைந்த 21,000 புதியவர்களில், 19,000 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில், 24,000 புதியவர்களையும் வெளிநாடுகளில் இருந்து 1,000 பேர்களையும் மட்டுமே எடுக்க திட்டமிட்டுள்ளது இன்போசிஸ்.

Infosys

இது இன்போசிஸ் தேடும் புதியவர்களின் எண்ணிக்கையில் 26.3% உயர்வு ஆகும். இருப்பினும், ஜனவரி முதல் மார்ச் மாதங்களுக்கு இடையில் இன்போசிஸ் ஊழியர்கள் வேலையே விட்டு நின்றது 15.2% ஆக மாறியிருக்கிறது. இது முந்தைய காலாண்டைவிட ஐந்து சதவீதம் அதிகரிப்பு ஆகும்.


இது தொடர்பாக பேசியுள்ள பிரவீன் ராவ்,

”வலுவான டிமான்ட் சூழல் உருவாகி இருப்பதால், தற்போது தேய்வு நிலை சற்று முன்னேறியுள்ளது. எனினும், எங்கள் பணியாளர் ஈடுபாட்டு முயற்சிகள், திறமை உறுதி செய்வதற்கான பயிற்சித் திறன்கள் குறித்து நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம், இதன் மூலம் தடையற்ற செயல்படுத்தல் சாத்தியம்" என்றுள்ளார்.
இன்போசிஸ்

இதற்கிடையே, தற்போது இன்போசிஸ் பணியாளர்களை வீட்டிலிருந்து மற்றும் அலுவலகத்தில் இருந்து பணிபுரியும் வகையில் ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளது. இது தற்போதையை நிலைமை மட்டுமே. ஆனால் COVID-19 தொற்றுநோய் தளர்ந்தவுடன் ஊழியர்கள் அலுவலகங்களில் இருக்க வேண்டியிருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

“சமூக மூலதனத்தில் ஈடுபடவேண்டிய அவசியம் தற்போது நிலவி வருவதால் அதில் கவனம் செலுத்துகிறோம். அதில், மீண்டும் ஊழியர்கள் அலுவலகம் வந்து பணிபுரிவதற்கான வழிகளை செய்வதும் அடங்கும்,” என்று இன்போசிஸ் அதிகாரி சலீல் பரேக் என்பவர் கூறியிருக்கிறார்.

தகவல் உதவி: பிசினஸ் இன்சைடர் | தொகுப்பு: மலையரசு