10ம் வகுப்புக்கு மேல் பள்ளி செல்லாத அனிஷ், இந்தியாவின் 100வது Unicorn உருவாக்கியது எப்படி?

நிதிநுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனம் ஓபன், இணை நிறுவனர் அனிஷ் அச்சுதன், இணையம் தொடர்பான விஷயங்களில் இருந்த ஆர்வம், வீட்டை விட்டு வெளியேறியது, ரெயில் நிலையத்தில் தங்கியிருந்தது, ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்கியது பற்றி எல்லாம் பகிர்ந்து கொண்டார்.
0 CLAPS
0

இந்த ஆண்டு மே மாதம், இந்திய ஸ்டார்ட் அப் சூழலில் 100வது யூனிகார்னாக, பெங்களூருவைச் சேர்ந்த நியோபேங்க் 'Open' உருவானது. இந்நிறுவனம், டி சுற்று மூலம், ஐஐஎப்.எப் நிறுவனம் மற்றும் ஏற்கனவே உள்ள Temasek ஹோல்டிங்ஸ், டைகர் குளோபல் மேனேஜமெண்ட், 3one4 Capital ஆகிய நிறுவனங்களிடம் இருந்து 50 மில்லியன் டாலர் நிதி திரட்டியது.

100X Entrepreneur பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், நிறுவனர் மற்றும் நிகழ்ச்சி நெறியாளர் சித்தார்தா அலுவாலியா, அனிஷிடம் அவரது தொழில்முனைவுப் பயணம் பற்றி பேசினார். கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள சிறிய கிராமத்தில் இருந்து அனிஷின் பயணம் துவங்குகிறது. அவரது தந்தை பொறியாளராகவும், தாய் பள்ளி ஆசிரியராகவும் இருந்தார்.

பத்திரிகையாளராக வேண்டும் எனும் விருப்பம் கொண்டிருந்த அனிஷ், ஏழாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது இணையத்தால் ஈர்க்கப்பட்டு இணையதளங்களை உருவாக்கத் துவங்கினார். ஹாட்மெயிலை உருவாக்கிய சபீர் பாட்டியாவின் கதை ஊக்கம் அளித்ததாக கூறுகிறார்.

“இணையத்தின் வாய்ப்புகள் குறித்து, குறிப்பாக டாட்காம்கள் குறித்து ஈர்க்கப்பட்டேன். ஏனெனில், ஊடகத்துறையில் செயல்படும் எண்ணத்துடன் இது தொடர்பு கொண்டிருந்தது,” என்கிறார் அவர்.

2001ல், அனிஷ் வீட்டை விட்டு வெளியேறினார். திருவனந்தபுரம் வந்தவர், 11வது மற்றும் 12வது படிப்பை முடிக்காமலே iFuturz Technologies எனும் நிறுவனத்தைத் துவக்கினார்.

மூன்று ஆண்டுகளுக்கு ரயில் நிலையம் மற்றும் கோயில்களில் தங்கியிருந்து, கல்லூரி மாணவர்களான இணை நிறுவனர்களுடன் இணைந்து Indiafirst என்ற ஸ்டார்ட் அப்பை துவக்கினார். இந்த நிறுவனம் பின்னர் ஊடக குழுமத்தால் வாங்கப்பட்டது.

அதன் பிறகு, ‘Open' நிறுவனத்தை துவக்கும் வரை அவர் வெற்றி, தோல்விகளை சுவைத்திருக்கிறார். Cashnxt எனும் மொபைல் பேமெண்ட் நிறுவனத்தைத் துவக்கினார். லத்தீன் அமெரிக்க நிறுவனம் Prepaid Masters இதை வாங்கியது. பின்னர், துவக்கிய என்.எப்.சி சார்ந்த Neartivity நிறுவனம் சரியாக அமையவில்லை.

இதன் பிறகு, பேயூ நிறுவனத்தில் பணியாற்றியவர், Zwitch எனும் சொந்த பேமெண்ட் கேட்வே நிறுவனத்தை துவக்கினார். சிட்ரஸ் நிறுவனம் இதை விலைக்கு வாங்கியது. சிட்ரஸ்பே நிறுவனத்தில் இருந்த போது, அந்நிறுவனம் பேயூ நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. பேயூ நிறுவனத்தில் இணைந்த அனிஷ் 2017ல் ’ஓபன்’ நிறுவனத்தை துவக்கினார்.

சிறு தொழில்கள்

வர்த்தக வங்கிச்சேவை மற்றும் நிதிச்சேவைகள் தனித்தனியே இருந்ததால் சிக்கலாக அமைந்ததாக அனிஷ் கூறுகிறார்.

இன்று ஒரு தொழில்முனைவோராக, நான் பல்வேறு சாதனங்களை பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த அமைப்புகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொள்ளக்கூடியது அல்ல.

”உதாரணமாக, பேமெண்ட் கேட்வேயிடம் இருந்து பணம் வந்தாலும், இந்த பணம் வந்தது குறித்து வங்கிக் கணக்கை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்” என்கிறார்.

Open; வங்கி, சிறுதொழில்களுக்கான வர்த்தக வங்கிச்சேவை, வர்த்தகங்கள் சொந்த நியோவங்கி துவக்கும் மேடை மற்றும் பேமெண்ட் உள்கட்டமைப்பு Zwitch ஆகியவற்றை வழங்குகிறது,

2019ல், ஒரு லட்சம் சிறு தொழில் நிறுவனங்கள் ஓபன் மேடையை பயன்படுத்தத் துவங்கியிருந்தன. ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர் தொகை பரிவர்த்தனை செய்யப்பட்டது. இந்த பிரிவில் நியோபேங்க் நிறுவனங்கள் தாக்கு பிடிக்குமா என்று விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் இது நிகழ்ந்தது,

இந்த யூனிகார்ன் நிறுவனம் தற்போது 2.3 மில்லியன் சிறு தொழில்களை தனது மேடையில் கொண்டுள்ளது. 30 பில்லியன் டாலர் பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறது.

அனிஷ் சர்வதேச அளவிலான நிதிநுட்ப நிறுவனத்தை உருவாக்க விரும்புகிறார். அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஒரே மேடையில் கொண்டு வரும் வகையில், வங்கிச்சேவை மீது முழுமையான நிதி அடுக்கை நிறுவனம் உருவாக்கி வருகிறது.

தற்போதைய பொருளாதார தேக்கநிலை வளர்ச்சி வாய்ப்பாக அமையலாம் என்கிறார் அவர்.

“தேக்க நிலையே வர்த்தகம் துவங்க சரியான நேரம் என கருதுகிறேன். ஏனெனில், அடுத்த 12 அல்லது 24 மாதங்களுக்கு, செய்திகளில் அடிபடும் பிரிவுகளில் ஈடுபடுவதற்கு பதில் பெரிய நிறுவனங்கள் வருவாய் ஈட்டும் சேவைகளிலேயே கவனம் செலுத்தும்,” என்கிறார் அனிஷ்.

பாட்காஸ்டை கேட்க:

ஆங்கிலத்தில்: டென்சின் நோர்சோம் தமிழில்: சைபர் சிம்மன்

Latest

Updates from around the world