இன்ஸ்டாவில் தவறை கண்டுபிடித்ததற்கு இந்திய மாணவனுக்கு ரூ.38 லட்சம் பரிசு!

By Kani Mozhi
September 21, 2022, Updated on : Wed Sep 21 2022 05:01:31 GMT+0000
இன்ஸ்டாவில் தவறை கண்டுபிடித்ததற்கு இந்திய மாணவனுக்கு ரூ.38 லட்சம் பரிசு!
இன்ஸ்டாகிராமில் இருந்த தொழில்நுட்ப குறைபாட்டை சுட்டிக்காட்டிய இந்திய மாணவனுக்கு ரூ.38 லட்சம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

இன்ஸ்டாகிராமில் இருந்த தொழில்நுட்ப குறைபாட்டை சுட்டிக்காட்டிய இந்திய மாணவனுக்கு ரூ.38 லட்சம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.


’பக் பவுண்டி’ என்பது ஆன்லைனில் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் எத்திக்கல் ஹேக்கர்கள் இடையே மிகவும் பிரபலமானது. அதாவது, ஆன்லைன் செயலிகள், சேவைகள், இயங்குதளங்களில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகளை சுட்டிக்காட்டக்கூடிய நபர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் லட்சக்கணக்கிலான பணத்தை பரிசாக வழங்கும்.


ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான் என தகவல் தொழில்நுட்பத்தில் ஜாம்பவனாக திகழும் நிறுவனங்கள் கூட பக் பவுண்டி செய்துள்ளன. அதாவது, ஹேக்கர்கள் உள்நுழைவதற்கான குறைபாடுகளை சுட்டிக்காட்டிய நபர்களுக்கு பரிசளித்துள்ளன. தற்போது இந்த வரிசையில் சோசியல் மீடியா தளமான இன்ஸ்டாகிராம் இடம் பிடித்துள்ளது.

ஜெய்ப்பூர் மாணவனுக்கு அடித்த ஜாக்பாட்:

லட்சக்கணக்கான இன்ஸ்டாகிராம் கணக்குகளை ஹேக் செய்யாமல் காப்பாற்றியதற்காக ஜெய்ப்பூர் மாணவருக்கு இன்ஸ்டாகிராம் 38 லட்சம் பரிசு வழங்கியுள்ளது.

Insta

ஜெய்ப்பூரைச் சேர்ந்த மாணவர் நீரஜ் சர்மா, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் சேவையில் இருந்த பிழையை (பக்) கண்டுபிடித்து தெரிவித்ததற்காக அவருக்கு அந்நிறுவனம் 38 லட்சம் ரூபாயை பரிசாக அளித்துள்ளது.


நீரஜ் சர்மா, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவின் முகப்பு படத்தை (Thumbnail)-யை யார் வேண்டுமானாலும் கடவுச்சொல் இல்லாமல் திறந்து மாற்றங்களை செய்யலாம் என்பதையும், இதற்கு குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் பயனரின் ஐ.டி. இருந்தால் மட்டுமே போதும் என்பதையும் கண்டறிந்துள்ளார். இதுகுறித்து சர்மா கூறுகையில்,

"ஃபேஸ்புக் நிறுவனத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராமில் ஒரு பிழை இருந்தது, அதன் மூலம் ரீலின் முகப்புப் படத்தை எந்த கணக்கிலிருந்தும் மாற்றலாம். கணக்கு வைத்திருப்பவரின் கடவுச்சொல் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் அதை மாற்ற கணக்கின் மீடியா ஐடி மட்டுமே தேவை. கடந்த ஆண்டு டிசம்பரில், எனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தவறுகளைக் கண்டறிய ஆரம்பித்தேன். கடின உழைப்புக்குப் பிறகு, ஜனவரி 31 காலை, இன்ஸ்டாகிராமில் (பக்) தவறு இருப்பதை அறிந்தேன், அதன் பிறகு, நான் ஃபேஸ்புக்கிற்கு ஒரு அறிக்கை அனுப்பினேன். மூன்று நாட்களுக்குப் பிறகு அவர்களிடமிருந்து பதில் கிடைத்தது. டெமோவைப் பகிரும்படி என்னிடம் கேட்டனர்,” எனத் தெரிவித்துள்ளார்.
Insta

சர்மா தனது சொந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் சில சிக்கல்களை எதிர்கொண்ட பிறகு, ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் உள்ள பிழைகள் குறித்து மெட்டாவிடம் தெரிவித்தார். நிறுவனம் இந்த சிக்கலை ஒப்புக்கொண்டதோடு, இதனை கண்டுபிடித்து தெரியப்படுத்தியதற்காக அவரை பாராட்டி வெகுமதி அளித்துள்ளது.

வெகுமதியுடன் கிடைத்த போனஸ்:

கடந்த டிசம்பர் மாதம் தொழில்நுட்பக் கோளாறுகளைக் கண்டுபிடிக்க களமிறங்கிய அவர், ஜனவரியில் அதனை கண்டறிந்துள்ளார். இதனையடுத்து, மெட்டா நிறுவனத்திற்கு சர்மா மின்னஞ்சல் மூலமாக தகவல் அனுப்பியுள்ளார்.


சர்மா அளித்த தகவல்களை பரிசோதித்து பார்த்த நிறுவனம், தொழில்நுட்பக் குறைபாடுகள் குறித்த டெமோவை பகிரும் படி கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக முழுமையாக பரிசோதித்த இன்ஸ்டாகிராம் நிறுவனம்,

சர்மா தொழில்நுட்ப குறைபாட்டை கண்டறிந்ததை மே 11ம் தேதி அங்கீகரித்து வெகுமதியாக $45,000 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் இந்திய மதிப்பில் சுமார் 35 லட்சம் ரூபாயையும், இதுவரையிலான தாமதத்திற்கு போனஸாக 4500 அமெரிக்க டாலர்கள் இந்திய மதிப்பில் சுமார் 3 லட்சத்தையும் சேர்த்து 38 லட்சம் ரூபாயை வெகுமதியாக அளித்துள்ளது.

தொகுப்பு - கனிமொழி