‘சமூக அதிகாரம் அளிக்கும் போதே செயற்கை நுண்ணறிவு வெற்றி பெறும்’ - ரவி சங்கர் பிரசாத்

By YS TEAM TAMIL|14th Oct 2020
இண்டெல் இந்தியா நிறுவனம் நடத்திய, All.ai 2020 மெய்நிகர் மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சூழலில் நம்பிக்கையை உருவாக்குவது முக்கியம் என்றார்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) சாமானிய இந்தியர்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் எனில், அது எவ்வித சார்பும் இல்லாமல் அமைய வேண்டும் என மத்திய சட்டம், நீதி, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு- தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.


செயற்கை நுண்ணறிவு, துறையில் புதிய எல்லைகள் சாத்தியாமவதை அங்கீகரித்த அமைச்சர், எந்த அளவுக்கு சமூக அதிகாரம் அளித்தலுக்கு உதவுகிறது என்பதன் அடிப்படையிலேயே செயற்கை நுண்ணறிவுக்கான ஆளவுகோள் அமையும் என்றார்.


இண்டெல் இந்தியா நிறுவனம் நடத்திய, ஐந்து நாள் All.ai 2020 மெய்நிகர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினர். மனித குலத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை உருவாக்க இந்தியாவுக்கு உள்ள வாய்ப்புகள் பற்றி விவாதிக்க இந்த மாநாடு நடைபெற்றது.  

உலகலாவிய மற்றும் உள்ளூர் இடையே தொடர்பு இருக்க வேண்டும் என வலியுறுத்திய ரவி சங்கர் பிரசாத்,  “செயற்கை நுண்ணறிவு எவ்விதமான சார்பும் இல்லாமல் இருக்க இந்த தொடர்பு முக்கியம் என்றார்.

தரவுகள் சூழல்

தரவுகளை முறையாக கையாள்வது குறித்தும் அமைச்சர் பேசினார். “இந்தியர்களின் தரவுகளை பாதுகாக்க, நன்கறியப்பட்ட தர நிர்ணயங்களை உருவாக்குவது அவசியம். அல்கோரிதம் தான் அடித்தளம் என்பதால் அவற்றில் வெளிப்படைத் தன்மை தேவை. செயற்கை நுண்ணறிவு அல்கோரதமில் நம்பிக்கை அம்சம் இருப்பது அவசியம்” என்று கூறினார்.


நேர்மையான மற்றும் நம்பிக்கையான தரவுகள் சூழலை உருவாக்குவது பற்றியும் வலியுறுத்தினார்.

”பயனர்கள் தரவுகள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என அவர்களிடம் தெரிவிக்கப்பட வேண்டும். சம்மதம் பெறுவது துவங்கி, பயன்பாடு, பாதுகாப்பு என எல்லாவற்றிலும் ஒரு கண்ணியம் தேவை. சாமானிய இந்தியர்களின் தனியுரிமையை மதிப்பு மிகவும் முக்கியம். செயற்கை நுண்ணறிவை வளர்க்க நாம் இந்த அடிப்படைகளை வலியுறுத்துகிறோம்,” என்று கூறினார்.

தற்போது நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனையில் இருக்கும் தரவுகள் பாதுகாப்புச் சட்டம் இந்த திசையில் அமைவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அறம் அவசியம்

மனித மனதிற்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவை கருதலாமா எனும் விவாதம் தொடர்ந்தாலும், மனித மனதின் ஆதார அம்சங்களான மனசாட்சி, அறம் ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவு கவனிக்காமல் இருக்கக் கூடாது என்றார்.


செயற்கை நுண்ணறிவை ஆயுதமாக்குவதை தீவிரமாக எதிர்த்த அமைச்சர், சமூக அதிகாரமளித்தலுக்கு இது பயன்படுத்தப்பட வேண்டும் என்றார். இயந்திரங்கள் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான பாலமாக செயற்கை நுண்ணறிவு அமைவதன் மூலம் இது சாத்தியம் என்றும் கூறினார்.


செயற்கை நுண்ணறிவு வேலை வாய்ப்புகளை பறிக்கும் எனும் அச்சம் குறித்தும் பேசினார்.

“ஒரு சில வேலைவாய்ப்புகள் பறிபோனாலும், செயற்கை நுண்ணறிவு சூழலால் வேலைவாய்ப்பு பெருகும் என்பதை தெளிவாக புரிய வைக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவின் எல்லையில்லா சாத்தியங்கள் குறித்தும் சுட்டிக்காட்டிய அமைச்சர் இதில் உள்ள சவால்களையும் அறிய வேண்டும் என்றார்.


“தகவல் தொழில்நுட்ப அமைச்சராக செயற்கை நுண்ணறிவு எனக்கு ஊக்கம் அளிக்கிறது. ஆனால் சட்ட அமைச்சர் எனும் முறையில் டிரைவர் இல்லாத கார் எனக்கு கவலை அளிக்கிறது. டிரைவர் இல்லாத காரில் விபத்து எற்பட்டால் யார் பொறுப்பு என்பது கேள்வி,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி, விவசாயம்  

முன்னதாக தனது உரையில், இந்திய டிஜிட்டல் பயணம் உலக அளவில் அங்கீகரிக்கப்படுவதை பற்றி குறிப்பிட்டார். “சராசரி இந்தியர்களுக்கு தொழில்நுட்பம் மூலம் அதிகாரம் அளிக்க, டிஜிட்டல் இடைவெளியை குறைக்க, சாமானிய இந்தியர்கள் வாழ்க்கையை மாற்றுவதில் பிரதமர் ஈடுபாடு கொண்டுள்ளார்,” என்று கூறினார்.


டிஜிட்டல் இந்தியா திட்டம் பற்றி குறிப்பிட்டவர் இதே கோட்பாடு செயற்கை நுண்ணறிவுக்கும் பொருந்தும் என்றார்.

“சாமானிய மக்கள் தாக்கத்தை உணரும் வரை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை பெறும்வரை இது வெற்றி பெற்றதாக கருத முடியாது. உள்ளூரில் உருவாக்கப்பட்ட, வளர்ச்சி அம்சம் கொண்ட தொழில்நுட்பம் மூலம் இதை அடைய வேண்டும்.”

ஏழைகள் வாழ்வில், ஆரோக்கியம், நோய்க்கூறு அறிதல், விவசாயம் ஆகிய துறைகளில் செயற்கை நுண்ணறிவு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றார்.


யுவர்ஸ்டோரி குழு

Get access to select LIVE keynotes and exhibits at TechSparks 2020. In the 11th edition of TechSparks, we bring you best from the startup world to help you scale & succeed. Join now! #TechSparksFromHome

Latest

Updates from around the world