'சர்வதேச ஆண்கள் தினம்' சொல்லும் சேதி என்ன?

By YS TEAM TAMIL|19th Nov 2020
உலகம், சர்வதேச ஆண்கள் தினத்தை கொண்டாடும் நிலையில், ஆண் தன்மை தொடர்பான நச்சான எண்ணங்களை மாற்றிக்கொள்வது பற்றி யோசிக்க வேண்டும். நேர்நிறையான ஆண் தன்மையை உருவாக்குவது பற்றி அறிந்து கொள்வோம்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

சமத்துவத்திற்கான முடிவில்லாத போராட்டத்தில், ஆணாதிக்கம் மற்றும் அதன் விளைவான கருத்துகள் பெண்களுக்கு மட்டும் அல்ல, ஆண்களுக்கும் தீங்கானது என்பதை பலரும் உணர்வதில்லை.


“பையன்கள் அழுவதில்லை...”

“ஆண்கள் பிக்ங் நிறம் பயன்படுத்துவதில்லை”

“ஆண் பிள்ளைகள் பொம்மைகளுடன் விளையாடுவதில்லை”

“பையன்கள் பையன்களாக இருக்க வேண்டும்”


இப்படி தொடர்ந்து இது போன்ற கருத்துகள் தொடர்ந்து சொல்லப்படுகின்றன. ஆனால் இதே ஆண்கள் பின்னாளில் சிக்கலான தன்மை கொண்டவர்களாக வளர்ந்தால், உலகம் அதைப்பார்த்து வியக்கிறது.


இந்த சர்வதேச ஆண்கள் தினத்தன்று,  இத்தகைய கருத்துகள் ஆண்கள் வளர்ச்சியில் எப்படி தாக்கம் செலுத்துகிறது என்றும், நச்சு ஆண் தன்மை திணிக்கும் பாலின பாத்திரங்களில் இருந்து ஒவ்வொரு பையனும் விடுபடுவதற்கான வழிகள் என்ன என்பதையும் பார்க்கலாம்.

ஆண்கள்

நச்சு ஆண் தன்மை?

கலாச்சாரப் பழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் எப்படி பாலினம் சார்ந்த பாத்திரங்களை வலியுறுத்தி. ஆண்கள் தங்கள் அனுபவங்கள் மற்றும் உணர்வுகளை நேர்மையான, வெளிப்படையான வழிகளில் வெளிப்படுத்தத் தடையாக இருக்கின்றன என்பதை உணர்த்த நச்சு ஆண் தன்மை எனும் பதம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் காரணமாக, ஆண் பிள்ளைகள் ஆண் தன்மை தவிர வேறு எதற்கும் இடம் அளிக்கக் கூடாது எனும் தவறான புரிந்தலுடன் வளர்கின்றனர்.


ஒருவர் பயன்படுத்தும் மொழி முக்கியமானது. ஏனெனில், மேலே சொல்லப்பட்டது போன்ற கருத்துகள், உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் செய்தியை இளம் நெஞ்சங்களுக்குச் சொல்கின்றன. இது அவமானத்தை ஒரு ஊக்கமாக பயன்படுத்தி, அதன் மூலம் பிரச்சனைக்குறிய அணுகுமுறையை மூர்கமாக வெளிப்படுத்தி நியாயப்படுத்த வழி வகுக்கிறது.

ஆண் பசங்க அப்படி தான் இருப்பார்கள் என்று சொல்லி நியாயப்படுத்துவதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பேற்கச் செய்தால், நாம் நேர்நிறையான ஆண் தன்மை நோக்கி முன்னேறலாம்.

பெற்றோர்களும், சமூகமும் முதலில் செய்ய வேண்டியது என்னவெனில், எல்லோரும் சார்பு தன்மை மற்றும் கலாச்சாரப் பழக்கங்கள் ஆழப்பதிய வளர்ந்திருக்கின்றனர் என்பதை ஒப்புக்கொள்வதாகும். மேலும் இந்த சார்பு தன்மைகளில் தான் பிரச்சனை இருக்கிறது என்பதையும் உணர வேண்டும்.

நேர்நிறை ஆண் தன்மை எப்படி இருக்கும்?

தொடர்புகள், அக்கரை மற்றும் தகவல் தொடர்பு கொள்வதில் சிக்கல்கள் உடைய உணர்வு நோக்கில் கட்டுப்பாடுகளைக் கொண்ட தனிநபர்களாக உருவாவதற்கு பதில், நேர்நிறை ஆண் தன்மை கொண்ட ஆண்மகன் இவற்றை எல்லாம் விரும்பிச் செய்வார். ஏனெனில், உணர்வுகளை வெளிப்படுத்துவது மனித தன்மையானது என்பதையும், மென்மை என்பது பலவீனமானது அல்ல என்பதையும் அவர்கள் அறிவார்கள்.


ஆண்மகனாக இருப்பது என்றால் என்ன என்பதையும், உணர்வுகளில் இருந்து தப்பி ஓடுவது அல்ல அது என்பதையும், ஆண்களும், பெண்களும் புரிந்து கொண்டால், தன் மீது இயல்பாக உணரும் ஆண்களை பெறலாம். மூர்கத்தனத்தால் நிரப்ப வேண்டிய எந்த உணர்வு வெற்றிடமும் இருக்காது.


ஆண்கள் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பேற்க நேர்நிறை ஆண் தன்மை வழி செய்கிறது. தவறுகளுக்குப் பொறுப்பேற்று மற்ற ஆண்களும் அவ்வாறு இருக்கச்செய்ய வழி செய்கிறது. சுயபரிசோதனை செய்து கொள்வதன் மூலம் ஆண்கள், தங்கள் செயல்களில் உள்ள தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்வார்கள். மேலும், மற்ற ஆண்களின் பிரச்சனையான அணுகுமுறையை சுட்டிக்காட்டவும் தயங்க மாட்டார்கள்.

சுதந்திரமும், பொறுப்பும்

இவை எல்லாம், புரிதல், கற்றுக்கொள்வதற்கான திறந்த மனம் மற்றும் நச்சு அணுகுமுறை தொடர்பான அனுபவங்களை காது கொடுத்து கேட்கச்செய்யும். இதன் மூலம், நேரடி அனுபவம் இல்லாத விஷயங்களை ஆண் பார்வையில் விளக்கும் முயற்சியையும் கைவிட வைக்கும்.


இது கற்றுக்கொள்வதை சார்ந்தது என்பது போலவே, எல்லோரும் நம்ப வைக்கப்பட்ட சில விஷங்களைக் கற்றுக்கொண்டதில் இருந்து விலகுவதும் தான். ஏனெனில் இந்த ஆணதிக்க கருத்துகள் எல்லா இடங்களிலும் ஆழ வேரூன்றி இருக்கின்றன.

ஆண்கள் என அடையாளம் காட்டிக்கொள்ளும் அனைவரையும் ஏற்றுக்கொள்வது மற்றும் பாலினம் என்பது ஒரு நிரப்பிறிகை என்பதை, ஆண் தன்மை என நாம் நினைப்பதற்கு பொருத்தமாக இல்லாததால் ஒருவர் ஆணாக இல்லாமல் போய்விட மாட்டார் என்பதை ஏற்றுக்கொள்வதும் தான் நேர்நிறை ஆண் தன்மையின் மிகப்பெரிய பலனாகும்.  

ஒரு ஆண் அழலாம், பிங்க் நிறம் அணியலாம், இதன் பின்னும் ஆணாக இருக்கலாம்.

நாம் நினைக்கும் என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம் என பெண்களுக்குக் கற்றுத்தரும் நிலையை அடைந்துள்ளது போல, ஆண்களுக்கும் இதே போன்ற உணர்வு மற்றும் கருத்து சுதந்திரத்தை அளிக்க வேண்டும்.


ஆங்கில கட்டுரையாளர்: மாலினி அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்