அறிமுக வீரர் முதல் அனுபவ வீரர் வரை: IPL 2021 ஏல அரங்கில் அப்ளாஸ் அள்ளிய சிஎஸ்கே!

- +0
- +0
இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடருக்கான வீரர்களைத் தேர்வு செய்யும் மினி ஏலம் சென்னையில் முதல் முறையாக நேற்று தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்பார்க்காத வீரர்களை ஏலத்தில் எடுத்து ஆச்சரியப்படுத்தியது.
கேதார் ஜாதவ், முரளி விஜய், ஹர்பஜன் சிங், பியுஷ் சாவ்லா, மோனு சிங், ஷேன் வாட்சன் ஆகியோரை விடுவித்ததன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் வசம் 19 கோடியே 90 லட்சம் ரூபாய் இருந்தது. ஏலத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெலை எடுக்க தீவிரம் காட்டியது. ஆனால் அது கைகூடவில்லை.
ஆனால், சில நாட்களுக்கு முன்பு சேப்பாக்கம் டெஸ்ட்டில் அதிரடி காட்டிய இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொயின் அலியை 7 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அவரது பெயர் ஏலத்தில் அறிவிக்கப்பட்ட நொடி முதல் பஞ்சாப் அணியும், சென்னை கிங்ஸ் அணியும் அவரை வாங்க கடும் போட்டிபோட்டு நிலையில் சென்னை அணி இறுதியில் வென்றது.

அணிக்கு தேர்வு செய்யப்பட உடனே,
“சூப்பர் கிங்ஸுக்கு விளையாடுவதற்காகக் காத்திருக்கிறேன். மிகச் சிறந்த ரசிகர் பட்டாளத்துக்கு மத்தியில் விளையாட எல்லா கிரிக்கெட்டர்களுமே விரும்புவார்கள். டீம் மேட் சாம் கரணும் இருக்கிறார். விரைவில் அணியில் இணைய காத்திருக்கிறேன்," என்று மொயீன் அலி டுவீட் செய்தார்.
இதேபோல், கர்நாடக அணியின் ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்ப கவுதமை ரூ.9.25 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். யாரும் எதிர்பாராத விதமாக புஜாராவை ஏலத்தில் எடுத்தது சென்னை அணி.
50 லட்ச ரூபாய்க்கு புஜாராவை வாங்கியது சூப்பர் கிங்ஸ். இதன்மூலம், 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகளில் விளையாடப் போகிறார் புஜாரா. புஜாராவை ஏலம் எடுத்ததும் மொத்த அரங்கமும் கைதட்டி மரியாதை செலுத்தியது.
ஆந்திராவைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஹரிஷங்கர் ரெட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது. நடந்து முடிந்த சையது முஷ்தாக் அலி தொடரில், 4 போட்டிகளில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார் ஹரிஷங்கர். அவரின் சிறப்பான பெர்பாமென்ஸ் காரணமாக அவரை வாங்கியது சிஎஸ்கே.

இவர்களைப் போலவே, தமிழக கிரிக்கெட் அணியின் ஓப்பனிங் வீரர் ஹரி நிஷாந்தை கடைசியாக வாங்கியது சென்னை அணி. டிஎன்பிஎல் உள்ளிட்ட தொடர்களில் சிறப்பாக விளையாடியதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
- ஐபிஎல் கிரிக்கெட்
- Csk match
- சிஎஸ்கே அணி
- IPL Cricket
- சென்னை சூப்பர் கிங்க்ஸ்
- Chennai Super Kings
- ஐபிஎல் 2021
- IPL 2021
- ஐபிஎல் ஏலம்
- IPl 2021 auction
- +0
- +0