யு-13 டூ ஐபிஎல்: பாலிவுட் பாட்ஷா பெயர்; ரூ.5.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஷாருக்கான் பின்னணி!

- +0
- +0
ஐபிஎல் ஏலம் நடந்து முடிந்திருக்கிறது. இதில் பல வீரர்கள் கோடிகளில் சம்பாதிக்க உள்ளனர். ஏலத்தில் சுவாரஸ்யமாக தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாருக்கானை 5.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது பஞ்சாப் அணி. சமீபத்தில் முடிந்த சையத் முஷ்டக் அலி தொடரில், 220.0 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதலிடம் பிடித்திருந்தார் ஷாருக்கான். அதனால் அவரை டார்கெட் செய்து போட்டியே இல்லாமல் முடித்து பஞ்சாப்.
பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கானின் பெயரிடப்பட்ட இந்த வீரர் தனக்கு பெயரிட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார். அதற்கு முன் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

யு -13 டூ ஐபிஎல்!
"நான் 13 வயதிற்குட்பட்ட நாட்களில் இருந்தே கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன், நான் இதற்குள் நுழைந்தபோது கிரிக்கெட்டிலிருந்து ஒரு வாழ்க்கையை உருவாக்க முடியும் என்று எனக்குத் தெரியும். எனது வயதுக்குட்பட்ட பிரிவில் நிறைய ரன்கள் பெற்றேன். இது எனக்கு உதவியது மற்றும் அடுத்த கட்டத்தில் சிறந்து விளங்க முயற்சித்தது," எனக் கூறும் ஷாருக்கான் ஒரு ஆல்ரவுண்டர்.
அவர் 14 வயதாக இருந்தபோதே ஜூனியர் போட்டியில் சிறந்த ஆல்ரவுண்டர் விருதை வென்றார். அப்போதே கவனம் பெறத் தொடங்கினார். பின்பு கிடைக்கிற வாய்ப்புகளில் எல்லாம் தன் திறமையை வெளிப்படுத்த தமிழ்நாடு அணியில் இடம்கிடைத்தது.
சமீபத்தில் முடிந்த சையத் முஷ்டக் அலி தொடரில், இமாச்சலப் பிரதேசத்திற்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் 19 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்தார் மற்றும் இறுதிப் போட்டியில் ஏழு பந்துகளில் ஆட்டமிழக்காமல் 18 ரன்கள் எடுத்தார், இதில் தமிழகம் பரோடாவை வீழ்த்தி பட்டத்தை வென்றது.
மேலும் ஹிட்டராகவும் சிறப்பாக விளையாடுகிறார். பெரிய அளவில் ஷாட்களை விளையாடுகிறார். இதனால் தான் இவரை போட்டிபோட்டு வாங்கியிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.

இப்போது அவர் பெயர் மேட்டருக்கு வருவோம். இவருக்கு பெயர் வைத்தது இவரின் பெற்றோர்கள் கிடையாது. இவரின் பெரிய அத்தை. ஆம், இவரின் பெரிய அத்தை பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் தீவிர ரசிகராம். அதனால் இவருக்கும் ஷாருக்கான் எனப் பெயர் வைத்திருக்கிறார்.
2019ல் ஒருபேட்டியில் நடிகர் ஷாருக்கானை சந்தித்தால் என்ன பேசுவீர்கள் என்ற கேள்வி கிரிக்கெட் வீரர் ஷாருக்கான் முன்பு வைக்கப்பட்டது. அதற்கு,
“நான் அவரைச் சந்தித்தால் முதலில் பதற்றமடைவேன் என்று நான் நம்புகிறேன், ஆனால் நான் முதலில் உரையாடலை தொடங்க மாட்டேன். ‘என் பெயர் ஷாருக் கான்’ என்று அவர் சொல்வதற்காக நான் காத்திருப்பேன். பின்னர் நான் சொல்வேன்- ‘என் பெயரும் ஷாருக்கான் தான் என்று. இதனால் அவரது எதிர்வினை பார்க்க நான் விரும்புகிறேன்," என்றுள்ளார்.
தகவல் உதவி: thequnit | தொகுப்பு: மலையரசு
- tamilnadu
- ஐபிஎல் கிரிக்கெட்
- IPL Cricket
- ஐபிஎல் போட்டி
- cricket player
- ஐபிஎல் 2021
- IPL 2021
- ஐபிஎல் ஏலம்
- IPl 2021 auction
- Shahrukh khan
- +0
- +0