ரூ.6000 சொந்த பணம்; ஒலிபெருக்கியில் பாடம்; சுவர்களில் ஓவியம் - பிரமிக்க வைக்கும் ஆசிரியர்!

- +0
- +0
ஜார்கண்டில் உள்ள பங்கதி உத்கிரமிட் மத்திய வித்யாலயாவின் முதல்வர் ஷியாம் கிஷோர் காந்தி. இவர் தனது கிராமத்தில் உள்ள மாணவர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்க பெரும்பாலும் புதுமையான யோசனைகளை கையாளக்கூடியவர். அவரது சமீபத்திய முயற்சி பலரையும் கவரும் வகையில் இருந்தது. கிராமத்தில் உள்ள சுவர்களை பல்வேறு புதுமையான விளக்கப்படங்களுடன் வரைந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு மாணவர்களின் கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அங்ககன்வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட மாணவர்கள் பள்ளிக்குச் சென்று பல மாதங்கள் ஆனதால் தங்கள் கற்றலை மறந்துகொண்டிருக்கின்றனர்.
இதனால், அவர்கள் நினைவுப்படுத்திக்கொள்வதற்கு எளிதாக கிராமத்தில் உள்ள சுவர்களின் ஆங்கிலம் மற்றும் இந்தி எழுத்துக்களால் குழந்தைகளின் கற்றலைத் தொடர, பழங்கள், விலங்குகள் மற்றும் காய்கறிகளின் படங்களை வரைந்துள்ளார்.
ஒரு வருடத்தை இழந்த போதிலும், அங்கன்வாடி மையங்களுக்குச் செல்லாமல் குழந்தைகள் தொடக்கப் பள்ளிகளில் நேரடியாக சேர்க்க உதவுவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என்று அவர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். குழந்தைகள் தங்கள் முந்தைய பாடங்களை நினைவுபடுத்த இந்த ஓவியங்கள் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் காந்தி.
கிராமத்தில் உள்ள சுவர்களின் படங்கள் வரையும் இந்த முறையின் மூலமாக ஆரம்பப் பள்ளி மாணவர்களின் நினைவுச் சக்தியை அதிகரிக்க முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
“அதனால் அவர்கள் தங்கள் கிராமத்தில் தெருக்களில் விளையாடும்போது கூட இந்த படங்களைப் பார்த்து கற்றுக்கொள்வார்கள் வேகமாக நினைவுப்படுத்திக்கொள்ள முடியும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாங்கதியில் உள்ள கதி பாரா தோலாவில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சுவர்களில் இத்தகைய விளக்கப்படங்கள் வரையப்பட்டுள்ளன.
"எனது மாணவர்களின் எதிர்காலத்திற்காக நான் எனது சொந்த பணத்தில் இருந்து இதற்காக வேண்டி தினமும் மொத்தம் ரூ.6,000 முதலீடு செய்ய வேண்டியிருந்தது," என்று அவர் கூறினார்.
கிராமத்தில் மீதமுள்ள எட்டு தோலாக்களில் உள்ள சுவர்களின் படங்களை வரைய உள்ளார் காந்தி. அவரின் இத்தகைய முயற்சி கிராமத்தில் உள்ளூர்வாசிகளால் சிறந்த முயற்சியாக பார்க்கப்பட்டது.
காந்தி தனது மாணவர்களுக்கு உதவ முயற்சி மேற்கொள்வது இது முதன்முறை அல்ல. அவுட்லுக் இந்தியாவில் வெளியான பி.டி.ஐ அறிக்கையின்படி, மேம்படுத்தப்பட்ட நடுநிலைப்பள்ளி அமைந்துள்ள பங்கதி கிராமத்தில், காந்திபல ஒலிபெருக்கிகளை வைத்தார். இந்த ஒலிபெருக்கிகள் மூலம் ஏப்ரல் 16ம் தேதி முதல் மாணவர்களுக்கு தினமும் இரண்டு மணி நேரம் வகுப்புகள் நடத்தினார்.
ஊரடங்கு காலமான இந்த நாட்களின்போது பலரும் ஆன்லைன் வகுப்புகளை நாடிச்சென்ற நிலையில், இப்பகுதி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வது மிகவும் சவாலானது. காரணம் ஸ்மார்ட்போன், இன்டர்நெட் வசதிகள் என எதுவும் அவர்களுக்கு வாய்ப்படவில்லை. இதன்காரணமாக மாணவர்களின் கல்வி தடைபட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் ஆங்காங்கே ஒலிபெருக்கி வைத்து வகுப்புகள் நடத்தியுள்ளார் காந்தி.

மாணவர்கள் கிராமம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் அருகே அமர்ந்து வகுப்புகளில் கலந்து கொண்டனர். மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் இடத்தில் சத்தமாக பேசும் ஆசிரியர்கள் வகுப்பெடுக்கிறார்கள்.
முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 246 மாணவர்கள் உள்ளனர். அவர்களில் 204 பேருக்கு மொபைல் போன்கள் இல்லை என்கிறார் காந்தி. வகுப்புகள் தினமும் காலை 10 மணிக்குத் தொடங்குகின்றன.
"மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அல்லது ஏதேனும் கேள்வி கேட்க விரும்பினால், அவர்கள் தங்கள் கேள்விகளை யாருடைய மொபைல் தொலைபேசியிலிருந்தும் எனக்கு அனுப்பலாம், அடுத்த நாள் அதை நாங்கள் விளக்குகிறோம். இந்த முயற்சி மாணவர்களின் கற்றலை மேம்படுத்துகிறது. மாணவர்கள் பாடங்களை நன்கு புரிந்துகொள்கிறார்கள்,” என்று காந்தி கூறியுள்ளார்.
மாதா, பிதா, குரு என்று சும்மாவா சொன்னார்கள்!
தமிழில்: மலையரசு
- ஆசிரியர்கள்
- ஆசிரியர்
- Jharkand
- painting
- வைரல் ஓவியம்
- ஓவியம்
- education
- இந்திய ஆசிரியர்
- indian teacher
- free education
- +0
- +0