முடிவுக்கு வந்தது ஜியோ இலவச அழைப்புகள்...

அதிரடி சலுகைகள், இலவச அழைப்புகள் என வாடிக்கையாளர்களை கவர்ந்த ஜியோ நிறுவனம், முதல் முறையாக குரல் அழைப்புகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.

10th Oct 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

ஜியோ சேவையில் வழங்கப்பட்டு வந்த இலவச அழைப்பு வசதி முடிவுக்கு வந்துள்ளது. இனி, ஜியோ சேவையில் இருந்து ஏர்டெல் உள்ளிட்ட போட்டி நிறுவனங்கள் சேவை எண்களை அழைத்தால், நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் செலுத்த வேண்டும் என ஜியோ அறிவித்துள்ளது. எனினும், இதற்கு நிகரான இலவச டேட்டாவை வாடிக்கையாளர்கள் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.


முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு முன் ரிலையன்ஸ் ஜியோ மூலம் செல்போன் சேவையில அடியெடுத்து வைத்தது. அறிமுகம் ஆகும் போதே, இலவச சிம், அன்லிமிடெட் டேட்டா மற்றும் இலவச அழைப்புகள் என வாடிக்கையாளர்கள் கவர்ந்த ஜியோ, செல்போன் சந்தையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது.

Jio


ஜியோவின் அதிரடி சலுகை உத்திகளுக்கு ஈடு கொடுக்க ஏர்டெல் உள்ளிட்ட போட்டி நிறுவனங்களும் கட்டணங்களைக் குறைக்க வேண்டியிருந்தது. இதனால் சந்தையில் பெரும் போட்டி உண்டானது. அதிரடி சலுகைகள் காரணமாக ரிலையன்ஸ் ஜியோ வேகமாக வளர்ச்சி அடைந்தது.


கடந்த மூன்று ஆண்டுகளாக, இலவச குரல் அழைப்புகளை வழங்கி வந்த ஜியோ நிறுவனம் தற்போது முதல் முறையாக தனது வாடிக்கையாளர்கள் குரல் அழைப்புகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.

இதுவரை ஜியோ வாடிக்கையாளர்கள் டேட்டாவுக்கு மட்டும் கட்டணம் செலுத்தி, இலவச குரல் அழைப்புகளை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலை மாறி, இனி ஏர்டெல் உள்ளிட்ட போட்டி டெலிகாம் நிறுவனங்களின் எண்ணை தொடர்பு கொள்ளும் போது வாடிக்கையாளர்கள் நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் செலுத்த வேண்டும் என ஜியோ அறிவித்துள்ளது.

ஐசியூ கட்டணம்

இந்த அறிவிப்பு மூலம் ஜியோ இலவச அழைப்புகளை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. எனினும், பிற நெட்வொர்க் எண்களை அழைக்கும் போது மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும். ஜியோ எண்களை அழைக்கும் போது, மற்றும் லேன்ட்லைன் எண்களை அழைக்கும் போது கட்டணம் செலுத்த வேண்டாம். அதே போல வாட்ஸ் அப் அழைப்புகளும் இதனால் பாதிக்கப்படாது.


ஜியோவின் இந்த திடீர் அழைப்பிற்குக் காரணம், போட்டி நிறுவனங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய ஐசியூ கட்டணமே ஆகும். பொதுவாக டெலிகாம் நிறுவன வாடிக்கையாளர்கள், மற்ற டெலிகாம் சேவை எண்களை தொடர்பு கொள்ளும் போது, அந்த நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்துகின்றன. இதுவே, இண்டெர்கனெட்க் யூசர் சார்ஜ் (ஐ.சி.யூ) என அழைக்கப்படுகிறது.


இந்த கட்டணம் முதல் நிமிடத்திற்கு 14 பைசாவாக இருந்தது. பின்னர் இது நிமிடத்திற்கு 6 பைசாவாக குறைக்கப்பட்டது. ஜியோ நிறுவனம் ஆரம்பம் முதல் இந்த கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை நீக்க வேண்டும் என டிராய் அமைப்பிடம் வலியுறுத்தி வருகிறது. மற்ற நிறுவனங்கள் இதை உயர்த்த வேண்டும் என கோரி வருகின்றன.

ரிங்டைம் சர்ச்சை

போட்டி நிறுவனங்களுக்கு ஐசியூ கட்டணம் செலுத்த இருப்பதால், ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரிங்டைமை குறைத்தது. அதாவது பிற எண்களை அழைக்கும் போது, மணி ஒலிக்கும் அவகாசத்தை 20 நொடிகளாக குறைத்தது. இதன் மூலம், மறுமுனையில் போன் எடுக்கப்படவில்லை எனில், மிஸ்டு காலாக கருதப்படும்.

தொடர்பு கொண்டவர் மீண்டும் அழைத்து பேசினால், அவரது சேவை நிறுவனம் தான் ஐசியூ கட்டணம் செலுத்த வேண்டும். இதற்காகவே ஜியோ ரிங்டைமை குறைத்ததாக போட்டி நிறுவனங்கள் விமர்சித்து வருகின்றன. ஆனால் ஜியோ நிறுவனம் 20 நொடிகள் தான் சர்வதேச நடைமுறை என வாதிடுகிறது.


இது தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், ஜியோ நிறுவனம் போட்டி நிறுவன எண்களை அழைக்கும் போது தனது வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. அதாவது ஐசியூ கட்டணத்தை இதுவரை செலுத்தி வந்த ஜியோ இனி இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்க தீர்மானித்துள்ளது. இதனால் ஜியோ வாடிகையாளர்கள், ஏர்டெல் உள்ளிட்ட எண்களை அழைக்கும் போது நிமிடத்திற்கு 6 பைசா செலுத்த வேண்டும்.

இது தற்காலிகமானது என ஜியோ அறிவித்துள்ளது. 2020ல் ஐசியூ கட்டணம் பற்றி டிராய் தீர்மானிக்கும் வரை இது தொடரும் என அறிவித்துள்ளது. எனினும், இதற்கு நிகரான டேட்டா வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

சலுகைத் திட்டங்கள்

இலவச அழைப்புகள் முடிவுக்கு வந்திருப்பதால், ஜியோ வாடிக்கையாளர்கள் இனி மாற்று டெலிகாம் எண்களை அழைத்துப் பேச கட்டணம் செலுத்த வேண்டும். இதற்காக, டாப் அப் செய்து கொள்ள வேண்டும் என ஜியோ அறிவித்துள்ளது.


இது தொடர்பாக சலுகைத் திட்டங்களையும் அறிவித்துள்ளது:


10 ரூபாய்- 124 IUC நிமிடங்கள், 1 GB டேட்டா

20 ரூபாய்- 249 IUC நிமிடங்கள், 2 GB டேட்டா

50 ரூபாய்- 656 IUC நிமிடங்கள், 5 GB டேட்டா

100 ரூபாய்- 1,362 IUC நிமிடங்கள், 10 GB டேட்டா

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India