WhatsApp மூலம் சிறு மற்றும் மத்திய வணிகத் தளத்துக்கு உதவும் Jio Haptik அறிமுகம்!

அறிமுகம் செய்த ஜியோ ஹப்டிக்!
0 CLAPS
0

Ai வாடிக்கையாளர் அனுபவ தளமான 'ஜியோ ஹப்டிக் டெக்னாலஜிஸ்', Jio Haptik Technologies' எஸ்.எம்பி-க்கள் வாட்ஸ்அப்பில் தங்கள் முழு வணிகத்தையும் நிர்வகிக்க உதவும் Interakt என்ற செயலியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் SMB மற்றும் MSME பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட Haptik உருவாக்கிய முதல் தயாரிப்பு இதுவாகும். Interakt-ன் மூலம், வணிகம் செய்பவர்கள் தங்கள் தொழிலுக்கென ஒரு பிரத்யேக வாட்ஸ்அப் வணிக எண்ணைப் பெறலாம், அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் தயாரிப்பு தொடர்பான தகவல்கள் வாடிக்கையாளர் பராமரிப்பு, மற்றும் அறிவிப்புகள், உதவி விற்பனை மற்றும் பலவற்றிற்கு தொடர்பு கொள்ள பயன்படுத்த முடியும்.

Interakt அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் வணிக ஏபிஐ மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. வணிக உரிமையாளர்கள் தங்கள் சொந்த வாட்ஸ்அப் வணிக எண்ணைப் பெறுவதற்கும், பகிரப்பட்ட இன்பாக்ஸ் - வெப்சைட் மட்டும் மொபைல் மூலம் உரையாடல்களை நிர்வகிப்பதற்கும், வாடிக்கையாளர்களை அறிவிப்பு நிர்வாகத்துடன் ஈடுபடுத்துவதற்கும், Shopify உடன் பாக்ஸ் இன்டராக்சன் எனப்படும் ஒருங்கிணைப்பை வழங்குவதற்கும் ஒரு கருவியை வழங்குகிறது.

சில மாதங்களுக்கு முன்பு இந்த பயன்பாடு early access எனப்படும் ஆரம்ப அணுகல் முறையில் வெளிவந்தது. இதன்பின் 500-க்கும் மேற்பட்ட வணிகங்கள் இதைப் பயன்படுத்துகின்றன. D2C பிராண்டுகளான ’The Pillow Company, Bare AnatomySuperbottomsFlo MattressSleepy Owl Coffee Priyaasiபோன்றவை இதை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கவை. அடுத்த ஆறு முதல் 12 மாதங்களில் இந்த எண்ணிக்கையை 10 மடங்கு அதிகரிக்க இன்டராக்ட் திட்டமிட்டுள்ளது.

ஹப்டிக்கின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அக்ரித் வைஷ் இது தொடர்பாக பேசுகையில்,

“இந்தியாவில் பிராண்டுகள் மற்றும் சிறு வணிகங்களிலிருந்து நேரடியாக ஷாப்பிங் செய்வதற்கான இயல்புநிலை தளமாக வாட்ஸ்அப் உள்ளது. இருப்பினும், இந்த தொடர்புகளை நிர்வகிப்பது வணிகங்களுக்கு சவாலாக இருக்கும். வாட்ஸ்அப் அத்தகைய பரிவர்த்தனைகளுக்கான மிகப்பெரிய சேனலாக மாறும், இணையத்தை விட பெரியதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே தான் வணிகப் பொருளாதாரத்திற்கு அதிகாரம் அளிக்க நாங்கள் இன்டராக்டை உருவாக்கியுள்ளோம்," என்றுள்ளார்.

இதனிடையே, ஆண்ட்ராய்ட்/ஐஓஎஸ் ஆப் ஸ்டோர்கள் மற்றும் ஷாப்பிஃபை ஆப் ஸ்டோரில் உள்ள ஷாப்பிஃபை வணிகர்களுக்கு பிரத்யேகமாக இன்டராக்ட் ஆப்பை டவுன்லோடு செய்ய முடியும். இன்டராக்ட், ஜியோ ஹாப்டிக் மூலம் ஒரு தனி சுயாதீன வணிகமாக இயங்க இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது.

தமிழில்: மலையரசு