இனி ‘வாட்ஸ் அப்’ மூலம் மெசேஜ் செய்து JioMart-இல் பொருட்களை சுலபமாக வாங்கலாம்...
உலகிலேயே முதல் முறையாக, மெட்டா மற்றும் ஜியோ சேவைகள் இணைந்து வாட்ஸ் அப்பில் சாட் மூலம் வாடிக்கையாளர்கள் ஜியோமார்ட்டில் இருந்து பொருட்களை வாங்க உதவும் முழுமையான அனுபவத்தை அறிமுகம் செய்துள்ளன.
Meta மற்றும் Jio சேவைகள் இணைந்து வாட்ஸ் அப்பில் சாட் மூலம் வாடிக்கையாளர்கள் ஜியோமார்ட்டில் இருந்து பொருட்களை வாங்க உதவும் முழுமையான அனுபவத்தை முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது.
உலக அளவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படும் இந்த சேவை மூலம், இதுவரை ஆன்லைனில் பொருட்கள் வாங்கியிராதவர்கள் உள்ளிட்ட இந்திய பயனாளிகள், ஜியோமார்ட்டின் மொத்த பொருட்கள் பட்டியலையும் பார்வையிட்டு, வேண்டிய பொருட்களை தேர்வு செய்து, பணம் செலுத்தலாம். இவை அனைத்தையும் வாட்ஸ் அப் சாட்டில் இருந்தே மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தியாவில் ஜியோமார்ட்டுடன் எங்கள் பாட்னர்ஷிப்பை அறிமுகம் செய்வதில் உற்சாகம் அடைகிறோம். வாட்ஸ் அப்பில் எங்களது முதல் ஆரம்பம் முதல் இறுதி வரையான முழுமையான ஷாப்பிங் அனுபவம் இது. மக்கள் Jio Mart-இல் இருந்து சாட் மூலமே பொருட்களை வாங்கலாம். வர்த்தக மெசேஜிங் தான் வேகமாக வளரும் பிரிவாக இருக்கிறது. இத்தகைய சாட் சார்ந்த அனுபவங்கள் மக்கள் மற்றும் வர்த்தகங்களை வரும் ஆண்டுகளில் கவரும்,” என்று இது பற்றி ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் மெட்டா நிறுவனர் மற்றும் சி.இ.ஓ மார்க் ஜக்கர்பர்க் கூறியுள்ளார்.
”இந்தியாவை உலகின் டிஜிட்டல் சமூகமாக முன்னிறுத்துவது தான் எங்கள் நோக்கம். மெட்டா மற்றும் ஜியோ மேடைகள், 2020ல் ஒப்பந்தத்தை அறிவித்த போது, மக்கள் மற்றும் வர்த்தகங்களை ஆன்லைனுக்கு கொண்டு வந்து ஒவ்வொரு இந்தியரின் தினசரி வாழ்க்கையிலும் வசதியை கொண்டு வரும் வகையில் புதுமையான தீர்வுகளை உண்டாக்குவது எனும் ஒரே நோக்கத்தை கொண்டிருந்தோம். புதுமையான வாடிக்கையாளர் அனுபவத்திற்கான உதாரணமாக, வாட்ஸ் அப்பில் ஜியோமார்ட் ஷாப்பிங் அனுபவத்தை அளிக்கிறோம்,” என்று நிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவாக்கி, அனைத்து வகையான மக்கள் மற்றும் வர்த்தகங்களுக்கு தொடர்பு கொள்வதற்கான புதிய வழிகளை உண்டாக்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் நோக்கத்திலான மெட்டா மற்றும் ஜியோ மேடைகள் இடையிலான கூட்டின் ஒரு பகுதியாக இந்த அறிமுகம் அமைந்துள்ளது.
'ஜியோமார்ட் ஆன் வாட்ஸ் அப்' (JioMart On WhatsApp) அனுபவம், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வர்த்தகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும் முறையை மாற்றி, நுகர்வோருக்கு எளிமையான வசதியான ஷாப்பிங் அனுபவத்தை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் வாட்ஸ் அப்பில் (+917977079770) எனும் எண்ணை தொடர்பு கொண்டு ’Hi’ சொல்வதன் மூலம் இந்த வசதியை அணுகலாம்.