கையடக்க செயற்கைக் கோள் உருவாக்கி சாதனை படைத்துள்ள கரூர் மாணவர்கள்!

By YS TEAM TAMIL|16th Oct 2020
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா வழிகாட்டலுடன் கரூரைச் சேர்ந்த மாணவர்கள் உருவாக்கியுள்ள Indian Sat எனும் செயற்கைக்கோளுக்கு நாசா அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கொரோனா எனும் பெருந்தொற்று மக்களை முடக்கியது உண்மைதான் என்றாலும் புத்தாக்க சிந்தனைகளுக்கு எந்தவித இடர்பாடுகளும் தடையாக இருக்க முடியாது என்பதை பல சம்பவங்கள் உணர்த்தி வருகின்றன. இந்தச் சூழலிலும் பலர் பலவிதமான சாதனைகள் படைத்து வருகின்றனர்.


அந்த வகையில் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம் தான் தோன்றிமலை பகுதியைச் சேர்ந்த அத்னான், நாகம்பள்ளியைச் சேர்ந்த கேசவன், தென்னிலையைச் சேர்ந்த அருண் ஆகிய மூன்று மாணவர்களும் இணைந்து செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

1

இந்த மாணவர்கள் செயற்கைக்கோள் மாதிரியை உருவாக்க சென்னையைத் தளமாகக் கொண்ட ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா வழிநடத்தியுள்ளது. இந்த செயற்கைக்கோளுக்கு நாசா அங்கீகாரம் வழங்கியுள்ளது.


அமெரிக்காவைச் சேர்ந்த idoodledu inc என்கிற நிறுவனம் நாசாவுடன் இணைந்து 'க்யூப் இன் ஸ்பேஸ்’ என்கிற மாணவர்களுக்கான போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.


கரூர் மாணவர்கள் ஓராண்டு செலவிட்டு சிறிய செயற்கைக்கோளை உருவாக்கி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். பல நாடுகளில் இருந்து கலந்துகொண்ட போட்டியாளர்களை வென்று இந்த கரூர் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.


கையடக்க செயற்கைகோளான இது 64 கிராம் எடையும் 3 செ.மீ சுற்றளவும் கொண்டுள்ளது. சூரிய ஒளி மூலம் கிடைக்கக்கூடிய 3.3 வோல்ட் மின்சாரத்தில் இந்த சிறிய செயற்கைக்கோள் இயங்கும்.

“Indian Sat என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் அடுத்த வருடம் ஜூன் மாதம் நாசாவிலிருந்து எஸ்ஆர்-7 என்கிற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது,” என்கின்றனர் இந்த இளம் விஞ்ஞானிகள்.

தகவல் உதவி: நியூஸ்18

Get access to select LIVE keynotes and exhibits at TechSparks 2020. In the 11th edition of TechSparks, we bring you best from the startup world to help you scale & succeed. Join now! #TechSparksFromHome

Latest

Updates from around the world