3 லட்சத்துடன் தொடங்கி 500 கோடி ரூபாய் மதிப்பு மெத்தை பிராண்டை உருவாக்கிய கேரள பொறியாளர்!

By YS TEAM TAMIL|3rd Sep 2020
1963-ம் ஆண்டு ஆலப்புழாவில் தொடங்கப்பட்ட Duroflex இன்று 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் மூன்று தொழிற்சாலைகளுடன் முன்னணி மெத்தை பிராண்டாக வளர்ந்துள்ளது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

பிசி மேத்யூ தொழில்துறை வேதியியல் பொறியாளர். இவர் 1960-களில் ஜெர்மனி சென்றபோது ரப்பரைஸ் செய்யப்பட்ட தென்னை நார்களை கார் இருக்கைகளுக்குப் பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதன் நிலைத்தன்மையையும் குஷன் போன்ற தன்மையையும் கண்டு வியந்த அவர் மெத்தை தயாரிப்பில் ரப்பரைஸ் செய்யப்பட்ட தென்னை நார்களைப் பயன்படுத்துவது குறித்து பரிசோதனை மேற்கொண்டார்.   


மேத்யூ கேரளாவின் ஆலப்புழாவில் மெத்தை உற்பத்தி வணிகத்தை சிறியளவில் நடத்தி வந்தார். 1963ம் ஆண்டு 3 லட்ச ரூபாய் ஆரம்ப முதலீடுடன் Duroflex தொடங்கினார்.


இந்திய சந்தைக்கு தென்னை நார் புதிது என்பதால் அதன் ஏற்புத்தன்மை குறித்த சந்தேகம் மேத்யூவிற்கு இருந்தது. மிகுந்த நம்பிக்கையுடன் ஆஸ்ட்ரியாவில் இருந்து தென்னை நார் மெத்தை இயந்திரத்தை ஆலப்புழாவில் உள்ள தனது தொழிற்சாலைக்கு இறக்குமதி செய்யத் தொடங்கினார்.


எனினும் 60-களில் தொழில்முனைவில் ஈடுபடுவது கடினமானவே இருந்தது. வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் தயாரிப்புகள் குறித்த புரிதல் மக்களிடையே அதிகம் இல்லை. இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படுவதில் கட்டுப்பாடுகள் அதிகம் இருந்தன. இது மேத்யூவிற்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது.

இயந்திரத்தின் பெரிய உதிரிப் பாகங்கள் சிலவற்றை இறக்குமதி செய்யத் தீர்மானித்தார். ஜெர்மனியில் அவர் பார்த்தவற்றை அடிப்படையாகக் கொண்டு உள்ளூரில் இயந்திரங்களை மறுகட்டமைப்பு செய்தார். இயந்திரமும் பாகங்களும் ஆலப்புழா கால்வாய் வழியாக சரக்கு படகுகளில் கொண்டு வரப்பட்டது,” என்றார் மேத்யூ ஜார்ஜ்.

மூன்றாம் தலைமுறை தொழில்முனைவரான இவர் தற்போது Duroflex நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் புதிய தயாரிப்பு உருவாக்கம் பிரிவின் இயக்குநராக உள்ளார்.

1

மருத்துவமனை கட்டில்கள், ராணுவப் போர் வாகனங்களுக்கான இருக்கை, ரயில் பெட்டிகள் போன்றவற்றிற்காக இந்திய அரசாங்கம் மிகப்பெரிய ஆர்டர் கொடுத்தது. இது கேரளாவைச் சேர்ந்த மெத்தை பிராண்டின் புதிய தயாரிப்பான தென்னை நார் மெத்தைகளுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

கால்வாயின் அருகே சிறியளவில் தொடங்கப்பட்ட மெத்தை தொழிற்சாலையானது தற்போது படுக்தை தொடர்பான தயாரிப்புகள் பிரிவில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. இன்று இந்நிறுவனம் 500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, பெங்களூருவில் தலைமையகத்துடன் 500-க்கும் அதிகமான ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது.

தென்னிந்தியாவில் இந்நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. 2018-ம் ஆண்டு Duroflex லைட்ஹவுஸ் ஃபண்ட் நிறுவனத்திடமிருந்து தனியார் சமபங்கு மூலம் 22 மில்லியன் டாலர் உயர்த்தியது.

சந்தை நிலவரம்

கடந்த சில ஆண்டுகளாகவே உயர்தர மெத்தைகளுக்கான தேவை இந்தியாவில் அதிகரித்துள்ளது. மக்களின் வருமான அளவு அதிகரித்துள்ளது. மேலும் சிறந்த தயாரிப்புகள் குறித்தும் நல்ல தூக்கத்தால் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் மக்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதும். இவையே தேவை அதிகரிப்பதற்கான முக்கியக் காரணங்கள்.


ஒழுங்குபடுத்தப்படாத மெத்தை துறையில் செயல்படும் நிறுவனங்கள் மெத்தைகளில் விலை மலிவான காட்டனை நிரப்பினார்கள். இந்தப் பிரிவே சந்தையில் ஆதிக்கம் செலுத்தியது. எனினும் ஒழுங்குபடுத்தப்பட்ட துறை கடந்த ஐந்தாண்டுகளில் 17 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் வளர்ச்சியடைந்துள்ளதாக ResearchandMarkets தரவுகள் தெரிவிக்கிறது. Duroflex இந்தத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக உருவாகியுள்ளது.

“எங்கள் பிராண்ட் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. எங்களது பிரபல தயாரிப்பான Duropedic இந்தியாவின் சான்றிதழ் பெற்ற ஒரே ஆர்த்தோ மெத்தை வகை. இது தேசிய சுகாதார அகாடெமி நிபுணர்களால் பரிசோதிக்கபப்ட்டு பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்பு. சுற்றுச்சூழலுக்கு உகந்த நேச்சுரல் லிவிங் ரேன்ஞ், எனர்ஜைஸ் ரேன்ஞ், எசென்ஷியல் ரேன்ஞ் ஆகிய மூன்றும் எங்களது புதுமையான மெத்தை வகைகள்,” என்றார் ஜார்ஜ் மேத்யூ.

தொழிற்சாலை

Duroflex மெத்தைகள் ஓசூர், கரிமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிறது. ஹைதராபாத் மற்றும் பிவாண்டியில் இரண்டு சாட்டிலைட் யூனிட்களும் உள்ளன.


இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் தென்னை நார் மட்டுமின்றி ஸ்பிரிங், ஃபோம் ஆகியவற்றைக் கொண்டும் மெத்தைகள் தயாரிக்கப்படுகின்றன. ஸ்பிரிங் மற்றும் ஃபோம் வகைகளையும் இணைத்துக்கொண்டது சவால் நிறைந்ததாக இருந்தது என்கிறார் ஜார்ஜ். ஆனால் பல வகையான படுக்கை தயாரிப்புகளுடன் வளர்ச்சியடைந்தது என்றும் தெரிவிக்கிறார். அத்துடன் பல வகையான தலையணைகளையும் இந்நிறுவனம் தயாரிக்கத் தொடங்கியது.


ஒழுங்குபடுத்தப்பட்ட மெத்தைத் துறையில் Duroflex நிறுவனம் ஆதிக்கம் செலுத்துவதற்கு ஸ்பிரிங் மற்றும் ஃபோம் மெத்தை வகைகளை இணைத்துக்கொண்டது முக்கியப் பங்கு வகித்துள்ளது.


தென்னை நார் வகையைக் காட்டிலும் ஸ்பிரிங் மற்றும் ஃபோம் மெத்தை வகைகள் விலை குறைவானதாகவும் அதிக நன்மைகள் கொண்டதாகவும் இருந்தன. Duroflex ஃபோம் வகைகளைத் தயாரிக்கத் தொடங்கியதும் உள்நாட்டு மற்றும் சர்வதேச பிராண்டுகளுக்கும் விநியோகிக்கத் தொடங்கியது.

“மெத்தைகள் தொடர்ந்து எங்களது முக்கிய வணிகமாக இருந்தாலும் மூலப்பொருட்களைக் காட்டிலும் வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயப்பதை அடிப்படையாகக் கொண்டே எங்களது தயாரிப்பு வகைகள் அமைந்துள்ளன. வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். அவர்களது தனித்துவமான தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் நான்கு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்,” என்றார் ஜார்ஜ்.
2

சில்லறை வர்த்தக மாதிரி

Duroflex அதன் மெத்தைகளை விற்பனையாளர் நெட்வொர்க் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் சில்லறை வர்த்தகம் செய்கிறது. முக்கிய நகரங்களில் ஸ்டோர்களையும் அனுபவ மையங்களையும் அமைத்துள்ளது.


ஊரடங்கு சமயத்தில் அமேசான், ஃப்ளிப்கார்ட், Pepperfry போன்ற வலைதளங்கள் மூலம் ஆன்லைன் விற்பனை அதிகரித்துள்ளதாக ஜார்ஜ் தெரிவிக்கிறார்.

“பெரும்பாலான வணிகங்கள் போன்றே நிதியாண்டு 21-ன் முதல் காலாண்டில் பாதிப்பு இருந்தது. நாங்கள் எங்கள் கவனத்தை திசை திருப்பி விற்பனைக்கும் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்கவும் ஆன்லைன் தளங்களை பயன்படுத்திக் கொண்டோம். நாங்கள் மெய்நிகர் விற்பனை மாதிரியை உருவாக்கினோம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் நிபுணர்களின் உதவியுடன் தேர்வு செய்துகொள்ளலாம். இந்தத் தயாரிப்புகள் பின்னர் வாடிக்கையாளர்களின் வீடுகளில் டெலிவர் செய்யப்படும். ஆன்லைன் கொள்முதல் அதிகரித்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. அதற்கேற்ப எங்களது தளத்தை மேம்படுத்தியுள்ளோம்,” என்றார்.

கோவிட்-19 நெருக்கடி சமயத்தில் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தும் மையங்களிலும் மெத்தைகள் அவசியமாகிறது. எனவே Duroflex 1,273 மெத்தைகளை வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி டாடா ஹவுசிங் பிராஜெக்ட் தனிமைப்படுத்தும் மையத்திற்கு 300 மெத்தைகளையும் கிருஷ்ணகிரி மாவட்ட தொழில்துறை மையத்திற்கு 600 மெத்தைகளையும் இந்நிறுவனம் வழங்கியுள்ளது.

வருங்காலத் திட்டம்

வரும் நாட்களில் வணிகத்தில் தொழில்நுட்பத்தை இணைப்பதிலும் ஆன்லைன் வணிகத்தை ஊக்குவிப்பதிலும் Duroflex கவனம் செலுத்த உள்ளது.

“எங்கள் வாடிக்கையாளர்களுடன் இணைந்திருக்கவும் சில்லறை வர்த்தக நெட்வொர்க்கை ஒன்றிணைக்கவும் டிஜிட்டல் ரீதியாக செயல்பட்டு வருகிறோம். எங்கள் டீலர்களுக்கு சக்தியளிக்கவும் டிஜிட்டல் சார்ந்த எதிர்காலத்திற்கு அவர்கள் தயார்படுத்திக்கொள்ள உதவவும் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தியுள்ளோம். தடையற்ற ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இணைப்பிற்கு பல்வேறு டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்தியுள்ளோம்,” என்றார்.

Kurlon, Peps, Springwell, Coirfoam போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் மற்றும் Wakefit, Housefull போன்ற ஸ்டார்ட் அப்’களுடன் பிராண்டட் மெத்தை சந்தை விரைவாக வளர்ந்து வருகிறது. இந்த வணிகங்களிடமிருந்து போட்டி இருப்பதை ஜார்ஜ் உணர்ந்தபோதும் இதுதவிர தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் கண்டெண்ட் ஸ்ட்ரீமிங் மற்றும் ஓடிடி தளங்கள் போன்றவை மிகப்பெரிய சவாலாக இருப்பதாக தெரிவிக்கிறார்.

“தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் பிரிவையே நாங்கள் எப்போதும் போட்டியாகக் கருதுகிறோம். தூக்கத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியும் தூக்கம் தொடர்பான புதுமையான தீர்வுகளை வழங்கியும் இதை சமாளித்து வருகிறோம்,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா