அரசுப் பள்ளிகளுக்கு டேப்லெட், கணினி: 4 லட்சம் நிதி திரட்டிய 5 மாணவர்கள்!

கேரள நெகிழ்ச்சி!
1 CLAP
0

கொரோனா தொற்றுநோய் இந்திய நாட்டில் நிலவி வந்த கல்விச் சமத்துவமின்மை வெளிப்படுத்தி இருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி இப்போதைய காலகட்டங்களில் அதிகமாக இருந்தாலும், அதன்மூலம் கல்விக்கான அணுகலை மிகச் சிலருக்கு மட்டுமே கிடைக்கக் கூடியதாக இருந்தது.

ஆன்லைன் கற்றல் பல மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புறங்களில் பெரும் பின்னடைவாக இருந்த நிலையில், கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் நிதி நிலைமைகள் டிஜிட்டல் கற்றலை அணுக முடியாத ஒன்றாக மாற்றியுள்ளன. கொரோனா ஏற்படுத்திய இந்த நெருக்கடியை திறம்பட சமாளிக்க சில நல்ல உள்ளங்கள் உதவி வருகின்றனர்.

அப்படிப்பட்டவர்களில் சிலர் தான், கோட்டயம் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர்கள். அந்தப் பகுதியில் நிதி நிலைமை காரணமாக மொபைல் போன் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் ஆன்லைன் கற்றலை மேற்கொள்ள முடியாமல் இருந்த பள்ளி மாணவர்களுக்கு உதவும் விதமாக இந்த 12ம் வகுப்பு மாணவர்கள் ஐந்து பேர், ஒன்றிணைந்து நிதி திரட்டி டேப்லெட் கணினி வாங்கி கொடுத்துள்ளனர்.

நிஹால் மேத்யூ, நிரஞ்சன் மேனன், விநாயக் தினேஷ், குரியன் ஜார்ஜ் கலரிகல், மற்றும் குரியன் கலரிகல் ஆகியோர் இந்த முயற்சியை மேற்கொண்ட ஐந்து 2ம் வகுப்பு மாணவர்கள் ஆவர்.

இவர்களின் முயற்சியைப் பாராட்டிய பள்ளி கல்வி அதிகாரிகள்,

“பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிதி திரட்டுவதற்கான ஒரு சுவாரஸ்யமான முயற்சியை இந்த ஐந்து மாணவர்களும் மேற்கொண்டு, வெற்றி கண்டுள்ளனர். ஜூன் 12 அன்று மாணவர்கள் ஆன்லைன் கிரவுட் ஃபண்டிங் பிரச்சாரத்தைத் தொடங்கினர். அதன்மூலம்,

”அவர்கள் ரூ.4 லட்சத்துக்கு மேல் திரட்டினர். அந்தப் பணத்தை கொண்டு கன்னம், குமரோகம் பகுதியில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளுக்கு 40 டேப்லெட் கணினிகளை வாங்கி கொடுத்தனர்," என்று தெரிவித்துள்ளனர்.

’தி டைனி ஸீட்' என்ற தொண்டு நிறுவனங்களின் வழியாக நிதி திரட்டுவதற்கான ஆன்லைன் முயற்சியை இந்த மாணவர்கள் மேற்கொண்டுள்ளனர். தங்களின் பள்ளிகளை சிறந்த கற்றல் இடங்களாக மாற்றுவதன் மூலம் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை சிறந்த முறையில் மாற்ற முடியும் என்பது அந்த மாணவர்களின் நம்பிக்கை. அதற்கேற்பவே இந்த முயற்சியை அவர்கள் செய்துள்ளனர். இதற்காக மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய நிதியளிப்பு பக்கத்தில்,

”கொரோனா தொற்றுநோய் சமூக இடைவெளியை, குறிப்பாக எல்லாமே டிஜிட்டலுக்கு செல்வதை உறுதிப்படுத்தியுள்ளது.”

துரதிர்ஷ்டவசமாக, அரசுப் பள்ளிகளின் பல மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டுக்கான வசதிகள் இல்லை. இது அவர்களுக்கு மிகவும் பாதகத்தை ஏற்படுத்துகிறது. அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது, என்று குறிப்பிட்டு நிதி திரட்டியுள்ளனர்.

தகவல்: Think Change India |தமிழில்: மலையரசு

Latest

Updates from around the world