Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

யூனைட்டட் பிசினஸ் சர்க்கிள் அமைப்பின் ’கிக்-ஸ்டார்ட்டர் 2019’ விருது விழா!

8 துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவர்களுக்கு விருது வழங்கி கெளரவித்தனர் யூபிசி அமைப்பினர்.

யூனைட்டட் பிசினஸ் சர்க்கிள் அமைப்பின் ’கிக்-ஸ்டார்ட்டர் 2019’ விருது விழா!

Wednesday January 09, 2019 , 2 min Read

சென்னை வடபழனியில் உள்ள ராதா ரீஜன்ட்ஸ் நட்சத்திர விடுதியில் ஜனவர் 4ம் தேதி யூனைட்டட் பிசினஸ் சர்க்கிள் (UBC) அமைப்பின் சார்பாக கிக்-ஸ்டார்ட்டர் 2019 (KICK-STARTER 2019) விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு துறைசார்ந்த தொழில்முனைவோருக்கு இந்த நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது. தொழில் வல்லுநர்கள் அவரவர் தொழிலில் சந்தித்த சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்தனர். இது அங்கு வந்திருந்த பல இளம் தொழில்முனைவோருக்கு உற்சாகம் மற்றும் உந்துதலை அளித்தது.

இந்த நிகழ்ச்சியில்,  2018 ஆண்டுக்கான சிறந்த யுபிசி ’டிஜிட்டல் மீடியா இன்ப்ளுயென்சர்’ (Digital Media Influencer) விருதை யுவர் ஸ்டோரியின் எடிட்டர் ஷ்ரத்தா சர்மாவுக்கு வழங்கப்பட்டது. அவரின் சார்பாக இந்த விருதை, யுவர்ஸ்டோரி தமிழ்நாடு பிசினஸ் ஹெட் ஹனி பெங்கானி பாலசந்தர் மற்றும் யுவர் ஸ்டோரி தமிழ் ஆசிரியர் இந்துஜா ரகுனாதன் பெற்றுகொண்டனர்.

யுவர்ஸ்டோரி ஷ்ரத்தா சர்மா சார்பில் விருது பெறும் ஹனி மற்றும் இந்துஜா

இதைப்போல தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் Rev.ஜெகத் காஸ்பர் ராஜ் ’சோசியல் இன்ப்ளுயென்சர்’, நேச்சுரல் நிறுவனர் சி.கே.குமரவேல் ’ரீடெய்ல் இன்ப்ளுயென்சர்’, ஏவம் என்டர்டைன்மென்ட் நிறுவத்தின் நிறுவனர் கார்த்திக் குமார், ’என்டர்டைன்மென்ட் பிசினஸ்’, flintobox நிறுவனர் அருண் பிரசாத் துரைராஜன் ’கிரியேட்டி பிசினஸ்’, விக்காரா நிறுவனத்தின் சார்பாக ஆதர்ஷ் மற்றும் அபிஷேக் ’இன்னோவேசன் பிசினஸ்’, மற்றும் ஆரஞ்ச்ஸ்கேப் நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் ’டெக்னாலஜி பிசினஸ்’ ஆகியோருக்கு 8 பிரிவுகளில் முறையே விருதுகள் வழங்கப்பட்டது.


இது சம்பந்தமாக யுபிசி அமைப்பின் நிறுவனர் ஆஷிக் அஹமத் பேசியபோது,

இந்த அமைப்பு 2018 ஜூன் மாதம் காப்பி, மியூசிக் மீட்அப், என்று ஒரு நபருடன் தொடங்கப்பட்டது பிறகு இந்த அமைப்பு தொழில்முனைவோருக்கான ஒரு வழிகாட்டும் அமைப்பாக தற்போது பெரிய அளவில் வளர்ந்துள்ளது.

2018  கிக்ஸ்டார்ட்டர் நிகழ்ச்சியில் இதே போன்று பலதுறையைச் சேர்ந்த வெற்றியாளர்கள் கெளரவிக்கப்பட்டனர். அதேபோல் 2019 ஆண்டுக்கான கிக்-ஸ்டார்ட்டர் நிகழ்விலும், பலதுறை சார்ந்த தொழில் முனைவர்களை அழைத்து அவரவர்கள் துறையில் எப்படி சாதித்தனர் என்பதனை இளம் தொழில்முனைவோருக்கு பறைசாற்றும் விதமாக நிகழ்ச்சி அமைத்தோம் என்றார்.

யூபிசி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆஷிக் மற்றும் தாஸ்

இன்று புதிதாக வருகின்ற தொழில்முனைவோர் எப்படியான சவால்களை சந்திக்க வேண்டியது இருக்கும் அதில் வரக்கூடிய பிரச்சனைகளை எப்படி அணுக முடியும் என பல ஆலோசனைகளை இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

இந்த அமைப்பில் பல நூறு உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவக்கூடிய பல நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம் என்றும் ஆஷிக் தெரிவித்தார். மேலும் இந்த அமைப்பு மூலம்  தொழில் தொடங்குவதற்கு வசதியாக பல திட்டங்களை வைத்துள்ளதாகவும், அதன் மூலம் அவர்கள் நிச்சயம் பயன் பெறுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.


கட்டுரை உதவி: ஆ.லட்சுமி காந்த் பாரதி