Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் தொழில்கள் லாபமடைய உதவும் கோவை நிறுவனம்!

ForceSight பிளக்-இன் SaaS பிராடக்டை வழங்குகிறது. இந்த பிராடக்ட் நுண்ணறிவைப் பெறுவதற்காக பல்வேறு சந்தைப்பகுதிகளிலிருந்து தகவல்களைத் திரட்டுவதால், இதைக்கொண்டு எஸ்.எம்.பி நிறுவனங்கள் சிறப்பாக தீர்மானங்கள் எடுக்கலாம்.

ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் தொழில்கள் லாபமடைய உதவும் கோவை நிறுவனம்!

Saturday July 23, 2022 , 3 min Read

ராமகிருஷ்ணா ஹைதராபாத்தைச் சேர்ந்த Hometrade நிறுவனத்தின் நிறுவனர். இவர் ஹோமியோபதி மருந்துகள், சப்ளிமெண்ட், ஹெல்த்கேர் தயாரிப்புகள், காஸ்மெடிக்ஸ் போன்றவற்றை Amazon, Flipkart, Meesho போன்ற ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்து வருகிறார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக கிட்டத்தட்ட 3,000 SKU-க்களுடன் விற்பனை செய்து வருகிறார். அப்படியிருந்தும் அதிகம் விற்பனையாகும் தயாரிப்புகள் எவை, விற்பனை மந்தமாக இருக்கும் தயாரிப்பு என்னென்ன, கீவேர்ட் ஸ்ட்ராடெஜி வகுப்பது எப்படி, வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் கார்ட்டில் பொருட்களை சேர்க்கும் Buy Box பகுதியைத் தக்கவைத்துக்கொள்வது எப்படி போன்றவற்றை இவர் அறிந்திருக்கவில்லை.

1

ராஜா சித்தரஞ்சன்- சிஇஓ, ForceSight

கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன்பு Facebook Ad மூலம் Forcesight பற்றித் தெரிந்துகொண்டார். அதன் பிறகு எல்லாம் மாறிப்போனது.

கோயமுத்தூரைச் சேர்ந்த Forcesight ராஜா சித்தரஞ்சன், வெள்ளையன் லக்‌ஷ்மனன் ஆகிய இருவரால் 2019-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

ஆன்லைன் சந்தைப்பகுதியில் விற்பனை செய்து வருபவர்கள் தங்கள் விற்பனையை அதிகரிக்கச் செய்ய இந்நிறுவனத்தின் மென்பொருள் உதவுகிறது.

Forcesight விற்பனையை அதிகரிப்பது, நிர்வாகச் செலவுகளைக் குறைப்பது, கணக்குகளை சரிபார்ப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் லாபம் ஈட்ட உதவுகிறது. முழுமையான, ஒருங்கிணைப்பட்ட, தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்கி இதை சாத்தியப்படுத்துகிறது.

திருப்புமுனையாக மாறிய தருணம்

வெள்ளையன் பல வகையான தொழில் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இவர் Altius Technologies நிறுவனத்தின் நிறுவனர். இந்நிறுவனம் தயாரிப்பு, பொறியியல், பிளம்பிங், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், சேஃப்டி சப்ளைஸ் என பல்வேறு துறைகளில் தயாரிப்பு தகவல் மேலாண்மை சேவையளிக்கிறது.

2

ராஜா சித்தரஞ்சன் மற்றும் வெள்ளையன் லக்‌ஷ்மனன்

கடந்த 15 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் விற்பனை அதிகரிக்க Altius உதவியிருக்கிறது. இண்டஸ்ட்ரியல் பிராண்டக்ஸ்கான தரவுகள் மற்றும் பிராடக்ட் ஸ்பெஷலைசேஷனில் இந்நிறுவனம் நிபுணத்துவம் பெற்றுள்ளது.

வெள்ளையனின் அமெரிக்க கிளையண்ட் ஒருவர் இந்தியாவில் ஆன்லைன் சந்தைப்பகுதியில் வணிகத்தை நிறுவ திட்டமிட்டிருந்தார். டேட்டா இண்டெலிஜென்ஸ் மூலம் விற்பனையை அதிகரிக்கச் செய்ய உதவி கேட்டார். அதுதான் ForceSight தொடங்குவதற்கான ஆரம்பப்புள்ளியாக அமைந்தது.

இந்தப் பகுதியில் வணிகத்தைத் தொடங்கத் தீர்மானித்த வெள்ளையன் அவரது உறவினர் ராஜாவைத் தொடர்பு கொண்டார். ராஜா, Lafargeholcim நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றி வந்தார். வெள்ளையனுடன் இணைந்து செயல்படுவதற்காக வேலை விட்டு விலகி கோயமுத்தூர் மாற்றலானார்.

”இந்தப் பிரிவில் நிறைய சிக்கல்கள் இருப்பதையும் அதேசமயம் தீர்வுகாண வாய்ப்புகள் இருப்பதைப் புரிந்துகொண்டோம். அடுத்த மூன்று அல்லது நான்காண்டுகளில் இந்தத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை நம்மால் பார்க்கமுடியும். இதில் பிரம்மாண்ட வளர்ச்சி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை,” என்கிறார்.

எத்தனையோ நிறுவனங்கள் இந்தத் துறையில் செயல்பட்டு வந்தாலும்கூட சில சிக்கல்கள் தீர்வு காணப்படாமலேயே இருந்து வருகின்றன.

3

தீர்வு காணவேண்டிய சிக்கல்கள்

ForeSight மூன்று முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

  1. ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்ய சரியான தயாரிப்பு எது என்பதை அடையாளம் காண்பது.
  2. தயாரிப்பை விற்பனை செய்ய சரியான சந்தைப்பகுதியைக் கண்டறிவது.
  3. தற்போதுள்ள சந்தைப்பகுதிகளில் தற்போதுள்ள தயாரிப்புகளை எப்படித் திறம்பட விற்பனை செய்வது.

இந்த மூன்று பிரச்சனைகளுக்கும் ForeSight தீர்வளிக்க முற்படுகிறது.

”அதிக ஆர்டர்களைப் பெறுவது எப்படி?” – தயாரிப்புகளை விற்பனை செய்யும் ஒவ்வொருவர் மனதிலும் மையமாக இருக்கும் கேள்வி இதுதான்.

ForceSight பிளக்-இன் SaaS பிராடக்டை வழங்குகிறது. இந்த பிராடக்ட் நுண்ணறிவைப் பெறுவதற்காக பல்வேறு சந்தைப்பகுதிகளிலிருந்து தகவல்களைத் திரட்டுகிறது. எஸ்.எம்.பி நிறுவனங்கள் இந்த நுண்ணறிவைக் கொண்டு சிறப்பாக தீர்மானங்கள் எடுக்கலாம்.

ராமகிருஷ்ணா, அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்களில் விற்பனை செய்து வந்ததில் 700க்கும் மேற்பட்ட SKU-க்கள் நஷ்டத்தில் இருந்து வந்த விவரவே அவருக்குத் தெரியவில்லை. விளம்பரங்களுக்காக அதிகத் தொகையை முதலீடு செய்தது, சந்தையில் நிலவும் போட்டிகளை சமாளிக்க விலை குறைப்பு நடவடிக்கை என பல்வேறு காரணங்களால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

“ForceSight மென்பொருளைப் பயன்படுத்திய பிறகு மூன்றே மாதங்களில் நஷ்டத்தில் இருந்த எஸ்கேயூ-க்களின் எண்ணிக்கை 400-ஆக குறைந்தது,” என்கிறார்.
4

சந்தைப்பகுதிகளின் கட்டணம், விளம்பரங்களுக்கான செலவு, முதலீடு மீதான வருவாய், ஷிப்பிங், SKU-க்களின் ஜிஎஸ்டி போன்ற விரிவான தகவல்களை வணிக உரிமையாளர்கள் ஒரே டேஷ்போர்டில் தெரிந்துகொள்ள ForceSight உதவுகிறது.

செயல்திறன்

ForceSight தற்போது இந்தியா முழுவதும் 500 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இதில், 100 வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தி இணைந்துள்ள நிலையில் மற்றவர்கள் ட்ரையல் அடிப்படையில் இணைந்திருக்கின்றனர்.

இந்நிறுவனம் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதன் மென்பொருளை அறிமுகப்படுத்திய நிலையில், 2022 ஏப்ரல் மாதம் இறுதி தயாரிப்பு சந்தையில் அறிமுகப்படுத்தத் தயாரானது.

ஐந்து வகையான சந்தா திட்டங்களை இந்நிறுவனம் வழங்குகிறது. ஆரம்பகட்ட திட்டத்தில் இணைந்தால் 4,500 ருபாய் செலுத்தவேண்டியிருக்கும்.

25 பேர் கொண்ட குழுவாக இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. Unicommerce, SellerApp, ChannelEngine போன்ற நிறுவனங்களுடன் ForceSight சந்தையில் போட்டியிடுகிறது. சமீபத்தில் Newchip என்கிற அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆக்சலரேட்டர் திட்டத்தில் ForceSight ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newchip, பிராடக்ட் துணைத்தலைவர் அர்மாண்டோ வேரா கார்வஜல் கூறும்போது,

“Newchip உலகம் முழுவதும் வெவ்வேறு துறைகளில் உள்ள நிறுவனங்களை மதிப்பாய்வு செய்கிறது. எங்கள் ஆக்சலரேடராக இணைந்துகொள்ள குறிப்பிட்ட சில மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர். நிறுவனங்கள் கடுமையான செயல்முறைகளுக்குப் பிறகே தேர்வு செய்யப்படுவதால் இந்த ஸ்டார்ட் அப்கள் மீது முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். நிதியும் சரியான வழிகாட்டலும் கிடைத்தால் ForceSight போன்ற ஸ்டார்ட் அப்கள் விரைவாக வளர்ச்சியடையலாம். ForceSight செயல்பாடுகள் சிறப்பாக வெற்றியடையும் என எங்களுக்கு நம்பிக்கை உள்ளது,” என்று தெரிவித்திருக்கிறார்.

ஆங்கில கட்டுரையாளர்: ஐஸ்வர்யா லஷ்மி | தமிழில்: ஸ்ரீவித்யா