லட்டு கேக், சுகர் ஃப்ரீ மிட்டாய், தாமரை ஸ்வீட் - தேர்தல் வெற்றி கொண்டாட்டத்திற்காக சூடுபிடித்தது பேக்கரி தொழில்!

லட்டுகளால் செய்யப்பட்டு லட்டுகளாலே அலங்கரிக்கப்பட்ட கேக், தாமரை வடிவிலான பர்பி, சுகர் ஃப்ரீ மிட்டாய் என கட்சிகளின் தேர்தல் வெற்றி ட்ரீட் மெனுவில் இடம்பெற்றுள்ள டிஷ்ஷிகளின் ஆர்டரால் திணற திணற உழைத்து வருகின்றனர் பேக்கரிகள் மற்றும் ஸ்வீட் கடை ஊழியர்கள்.

லட்டு கேக், சுகர் ஃப்ரீ மிட்டாய், தாமரை ஸ்வீட் - தேர்தல் 
வெற்றி கொண்டாட்டத்திற்காக சூடுபிடித்தது பேக்கரி தொழில்!

Thursday May 23, 2019,

2 min Read

மீண்டும் நரேந்திர மோடியா? ராகுலா? தமிழகத்தின் நிலை என்ன?...என போன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் தினம் இன்று. ஆனால், இன்றைய வெற்றி கொண்டாட்டத்திற்கு தேவையான இனிப்புக்களுக்கான ஆர்டரை நேற்றே பேக்கரிக்களுக்கும், இனிப்பு தயாரிப்பு கடைகளுக்கும் கொடுத்துவிட்டன நாட்டின் பெரும் கட்சிகள்.


பட உதவி : NDTV


11கிலோ லட்டு, 16.5கிலோ க்ரீம், 16.5கிலோ சர்க்கரை மற்றும் 22 கிலோ மாவு கொண்டு 12 சமையற்கலைஞர்களால் 10கிலோ மற்றும் 5கிலோ எடைகொண்ட 10 லட்டு கேக்குகள் தேர்தல் முடிவுதினத்திற்கு முன்தினத்திலிருந்து தயாரித்து வருகின்றனர் டில்லியில் உள்ள ‘பெங்காலி பேஸ்ட்ரி ஷாப்’ கடையின் ஊழியர்கள்.


“மென்மையான க்ரீம் மற்றும் லட்டுகள் கொண்டு 9 கிலோ எடையில் ஒரு கேக்கும், 5 கிலோ எடையில் 9 கேக்குகளையும் தயாரித்து வருகிறோம். வட்ட வடிவிலான கேக்கின் மேற்பரப்பில் லட்டுகளை கொண்டு அலங்கரித்து கேக்குகளை உருவாக்கியுள்ளோம். லட்டு மற்றும் கேக் தயாரிப்பு முடிந்து இன்று மதியம் 2 மணிக்கு டெலிவரி கொடுத்தோம்” என்று இந்தியன் எக்ஸ்பிரசுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் பெங்காலி பேஸ்ட்ரி ஷாப்பின் உரிமையாளர் உமேஷ் அகர்வால்.


கடந்த செவ்வாய்கிழமையன்று டில்லி பிஜேபி இணை - செய்தி தொடர்பாளர் நீல்காந்த் பக்ஷிக்கு 1/2 கிலோ எடைகொண்ட சாம்பிள் கேக் அனுப்பப்பட்டு, பின்பு புதன்கிழமை மாலையில் ஆர்டர் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.


பட உதவி : NDTV


“ஒரு கிலோ கேக்கின் விலை ரூ900 -ரூ1000”என்றார் உமேஷ்.


இவை தவிர, பிங்க் மற்றும் பச்சை நிறத்திலான தாமரை வடிவ பர்பிகளும் உமேஷிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டன. மேலும், பிஜேபியின் செய்தி தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர், பிஸ்தா மற்றும் பாதாமால் செய்யப்பட்ட 50 கிலோ பர்ஃபிகளை ஆர்டர் கொடுத்துள்ளார். ஒரு கிலோ பர்ஃபியின் விலை ரூ.2000 ஆகும். 


காங்கிரஸ் சார்பில் மும்பையின், வடக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஊர்மிளா மடோன்கரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டி, மும்பையின் போய்ராவலி பகுதியில் உள்ள விவேதம் இனிப்பு தயாரிப்பு கூடத்திற்கு 2,000கிலோ லட்டுகளுக்கான ஆர்டரை கொடுத்துள்ளார். அது குறித்து அக்கடையின் உரிமையாளர் என்டிடிவி-க்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,


“பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டியிடம் இருந்து 2,000 கிலோ லட்டுகளை தயாரிப்பதற்கான ஆர்டர் கிடைத்தது. இதில் உற்சாகமாகிய கடையின் ஊழியர்கள் மோடியின் முகமூடி அணிந்து லட்டுகளை தயாரித்தனர்” என்றார்.


பட உதவி : NDTV


டில்லியின் ஆம் ஆத்மி கட்சி சார்பிலும் குறைந்த அளவிலான மிட்டாய் தயார் செய்யப்பட்டுள்ளன. புதுடில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரும், யோகா ஆசிரியருமான பிரிஜேஷ் கோயல், அவருடைய 

ஆதரவாளர்களுக்கு ஆரோக்கியமான இனிப்புகளை வழங்க முடிவு செய்துள்ளார். அவர் ஹிந்துஸ்தான் டைம்சுக்கு அளித்த இன்டர்வியூவில்,


“நான் 200 கிலோ இனிப்புகளை ஆர்டர் செய்துள்ளேன். ஆரோக்கியமான வாழ்வை ஊக்குவிக்கும் விதத்தில் சுகர்ஃப்ரீ இனிப்புகளை தயார் செய்ய கூறியுள்ளேன்.” என்றுள்ளார்.


டில்லி காங்கிரஸ் அலுவலகமும் 50 கிலோ இனிப்புகளை ஆதரவாளர்களுக்கு வழங்க தயார் செய்து வைத்துள்ளது. நாடே தேர்தல் முடிவுகளால் பரபரப்பாகியுள்ள நிலையில், டில்லியின் பல இனிப்பு தயாரிப்பு கடைகளுக்கு கிலோ கணக்கிலான ஆர்டர்கள் கிடைத்து தொழில் சூடுபிடித்ததில், கடையின் ஊழியர்களும் பரபரவென வேலை செய்து வருகின்றன.


தகவல் உதவி : ஹிந்துஸ்தான் டைம்ஸ்