ஐபிஓ வெளியிட்டுள்ள LIC-யின் வரலாற்று மைல்கல்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி., மக்களிடம் பாலிசிகளை கொண்டு செல்ல 13 லட்சத்திற்கும் மேலான முகவர்களை கொண்டுள்ளது. நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்த 240 க்கும் மேற்பட்ட தனியார் காப்பீடு நிறுவனங்களை அரசு எடுத்துக்கொண்ட போது எல்.ஐ.சி உருவனாது.
0 CLAPS
0

மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட எல்.ஐ.சி., நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு புதன் கிழமை துவங்கியது. உள்நாட்டு மியூச்சுவல் பண்ட்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, அவற்றுக்கு மொத்த அளவில் 71.12 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ வெளியீடாக கருதப்படும் எல்.ஐ.சி. பங்குகள் கள்ளச்சந்தையில் அதன் ஐபிஐ மதிப்பான ரூ.901- 949 –ஐ விட ரூ.60-65 பிரிமியம் மதிப்பு கொண்டிருந்த்தாக கூறப்படுகிறது.

அரசு இந்நிறுவனத்தின் 3.5 சதவீத பங்குகளை விற்று, ரூ.21,000 கோடி திரட்ட உள்ளது. நிறுவனப் பங்குகள் சந்தையில் வரும் 17 ம் தேதி பட்டியலிடப்படுகின்றன.

முன்னதாக, அரசு 5 சதவீத பங்குகளை வெளியிடத் திட்டமிட்டிருந்தது. எனினும் உக்ரைன் நெருக்கடி உள்ளிட்ட சர்வதேசப் பிரச்சனைகள் தாக்கம் காரணமாக இது குறைக்கப்பட்டது.

3.5 சதவீத பங்குகள் என்றாலும் கூட எல்.ஐ.சி பங்கு வெளியீடு வரலாற்று சிறப்பு பெறுகிறது.

2021 நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட பேடிஎம் தாய் நிறுவனமான ஒன்97 கம்ப்யூனிகேஷன்ஸ் பங்கு வெளியீடு மதிப்பான ரூ.18,300 கோடையை விட இது அதிகம். எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சலுகையை அறிவித்திருந்தது.

பங்கு வெளியீட்டின் பின்னணியில் எல்.ஐ.சி நிறுவனத்தின் 66 கால வரலாற்றில் மைல்கற்களை ஒரு பார்வை பார்க்கலாம்.

ஆயுள் காப்பீடு கழகம் (எல்.ஐ.சி.) கால வரிசை

 • 1956 – இந்திய நாடாளுமன்றம் ஆயுள் காப்பீடு கழகம் சட்டத்தை நிறைவேற்றுகிறது.
 • செப் 1- ரூ.5 கோடி மூலதனத்துடன் ஆயுள் காப்பீடு கழகம் (எல்.ஐ.சி.) நிறுவப்படுகிறது.
 • 1962- எல்.ஐ.சி சார்பாக அஞ்சலகங்கள் பாலிசி பிரிமியம் தொகையை பெறத்துவங்குகின்றன.
 • 1963-64 – மும்பை, கொல்கத்தா அலுவலகத்தில் இரண்டு கம்ப்யூட்டர்கள் நிறுவப்படுகின்றன.
 • 1964 – ஆயுள் காப்பீடு பாலிசியுடன் பொது காப்பீடு பால்சிகளையும் வழங்கத் துவங்குகிறது.
 • 1969-70- புதிய வர்த்தகத்தில் ரூ.1,000 கோடியை கடக்கிறது.
 • 1971-78 – பேராசிரியர் ஈஸ்வர் தயாளின் சீரமைப்பு கொள்கை அமல் செய்யப்படுகிறது. கிளை அலுவலகங்கள் முதன்மை சேவை மையங்கள் ஆகின்றன.
 • 1971 – முகவர்கள் கிளப் அறிமுகம்
 • 1972- எல்.ஐ.சி முகவர்களுக்கான விதிகள் அறிமுகம்- எல்.ஐ.சி ஆல் இந்தியா கட்டுப்பாடுகள் (முகவர்கள்) .
 • 1980 – எல்.ஐ.சி மூலதனத்துடன் இந்திய அரசின் நிதி துறை புனேவில் தேசிய காப்பீடு அகாடமியை துவக்குகிறது.
 • 1985-86 – புதிய பாலிசிகளில் ரூ.7,000 கோடி சம் அஷ்யூர்ட் தொகை.
 • 1989 – எல்.ஐ.சி- மியூச்சுவல் பண்ட் பிரிவு துவக்கம்.
 • 1995- பாலிசிதாரகள் தங்கள் நிலைத்தகவல்களை அறிய, பிரிமியம்கள் விரைவாக ஏற்கப்பட, கடன் கோரிக்கை தகவல்கள் பெற ஆன்லைன் சேவை துவக்கம்.
 • 1999 – காப்பீடு கட்டுப்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ அமைக்கப்பட இந்திய நாடாளுமன்றம் சட்டம் இயற்றியது.
 • 2004- மின்னணி கிளியரிங் சேவை மற்றும் தகவல் மையங்கள் மூலம் பிரிமியம் செலுத்தும் சேவை அறிமுகம்.
 • 2007 – பென்ஷன் பண்ட் அறிமுகம்
 • 2009- மேலாளர்களுக்கான ஐஐஎம் அகமதாபாத் எம்பிஏ பாடத்தை ஸ்பான்சர் செய்கிறது.
 • 2012- ஆன்லைன் விற்பனைக்கான முதல் பாலிசி ஜீவன் அக்‌ஷய் 6 அறிமுகம்.
 • 2017- 29 கோடி பாலிசிதாரர்களின் பாலிசி ஆவணங்கள் டிஜிட்டல்மயம்.
 • 2019- ஐடிபி.ஐ –ல் 51 சதவீத பங்குகள்.
 • 2020- பிராண்ட் மதிப்பு 8.1 பில்லியன் டாலருக்கு அதிகம் என லண்டனின் பிராண்ட் பைனான்ஸ் தகவல்.
 • 2022 – பொது பங்கு வெளியீட்டிற்கான ஆவணம் வெளியீடு.

ஆங்கிலத்தில்: அபராஜிதா சக்சேனா | தமிழில்: சைபர் சிம்மன்

Latest

Updates from around the world