Fortune 500 பட்டியலில் இடம்பெற்றது நம்ம எல்.ஐ.சி.

உலகின் முன்னணி நிறுவனங்களுக்கான ஃபார்டியூன் 500 பட்டியலில் இந்தியாவில் எல்.ஐ.சி நிறுவனம் இடம் பெற்றுள்ளது.
0 CLAPS
0

அண்மையில் பங்குச்சந்தையில் நுழைந்த இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எல்.ஐ.சி., உலகின் முன்னணி நிறுவனங்களுக்கான ஃபார்டியூன் 500 (Fortune 500) பட்டியலில் இந்தியாவில் LIC நிறுவனம் இடம் பெற்றுள்ளது.

தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இந்தப் பட்டியலில் 51 இடங்கள் முன்னேறியுள்ளது.

அமெரிக்காவின் பிரபல வர்த்தக பத்திரிகையான ஃபார்டியூன், உலகின் முன்னணி நிறுவனங்களின் பட்டியலை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. வர்த்தக உலகில் ஃபார்டியூன் 500 என இந்த பட்டியலில் பிரபலமாகக் குறிப்பிடப்படுகிறது.

Fortune 500 பட்டியலில் இடம்பெறுவது ஒரு நிறுவனத்தின் செல்வாக்கின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. நிறுவனங்களின் விற்பனை அடிப்படையில் இந்த பட்டியல் அமைகிறது.

இந்நிலையில், அண்மையில் வெளியிடப்பட்டுள்ள உலகின் முன்னணி நிறுவனங்களுக்கான ஃபார்டியூன் 500 பட்டியலில் இந்தியாவில் எல்.ஐ.சி நிறுவனம் இடம் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனம் முன்னிலை வகிக்கும் இந்த பட்டியலில் 9 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் ஐந்து பொதுத்துறை நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்.ஐ.சி., நிறுவனம் அண்மையில் பங்குச்சந்தையில் நுழைந்து பங்குகளை வெளியிட்டது. 97.26 பில்லியன் டாலர் விற்றுமுதல் மற்றும் 553.8 டாலர் லாபம் கொண்ட எல்.ஐ.சி. 98வது இடத்தில் உள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனம் 142வது இடத்தில் உள்ளது. ஓ.என்.ஜி.சி நிறுவனம் 190வது இடத்தில் உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 370 து இடத்திலும் டாடா ஸ்டீல் நிறுவனம் 435வது இடத்திலும் உள்ளன.

தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் 54 இடங்கள் முன்னேறி 104வது இடத்தில் உள்ளது. ஸ்டேட் பாங்க் 236வது இடத்தில் உள்ளது. பாரத் பெரோலியம் நிறுவனம் இந்த பட்டியலில் 295வது இடத்தில் உள்ளது.

தொகுப்பு: சைபர் சிம்மன்