Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

LIC IPO: பங்குகளை வாங்க 3 மடங்கு அதிகமாக குவிந்த விண்ணப்பங்கள்!

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் மெகா ஐபிஓ-வை வாங்க அதன் ஏற்கனவே ஆர்வம் அதிகரித்து வந்த நிலையில், 3 நாட்களில் கடைசி நாளான இன்று கடைசி நாளில் கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

LIC IPO: பங்குகளை வாங்க 3 மடங்கு அதிகமாக குவிந்த விண்ணப்பங்கள்!

Monday May 09, 2022 , 2 min Read

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் மெகா ஐபிஓ-வை வாங்க அதன் ஏற்கனவே ஆர்வம் அதிகரித்து வந்த நிலையில், 3 நாட்களில் கடைசி நாளான இன்று கடைசி நாளில் கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது

எல்ஐசி ஐபிஓ குறித்த தகவல் சமீபத்திய தினங்களில் பெரும் பேசு பொருளாக இருக்கிறது. எல்ஐசியின் 100 சதவீத பங்குகளும் மத்திய அரசு வசம் இருந்த நிலையில், இதில் இருந்து 5 சதவீத பங்குகளை பொதுவெளியில் விற்பனை செய்ய அரசு முடிவு செய்தது. ஆனால் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக 3.5 சதவீத பங்குகளை மட்டுமே விற்க முடியும் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்தது.

3.5 சதவீத பங்குகள் என்றாலும் கூட எல்.ஐ.சி பங்கு வெளியீடு வரலாற்று சிறப்பு பெறுகிறது. 2021 நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட பேடிஎம் தாய் நிறுவனமான ஒன்97 கம்ப்யூனிகேஷன்ஸ் பங்கு வெளியீடு மதிப்பான ரூ.18,300 கோடியை விட இது அதிகம்.

LIC

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களை சமாளிக்கும் நோக்குடன் நிதி திரட்டும் நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது. இதன் மூலம் சுமார் ரூ.21 ஆயிரம் கோடி வரை நிதி திரட்ட முடியும் என கணிக்கப்பட்டிருக்கிறது. எல்ஐசி பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் பெருமளவு ஆர்வம் காட்டி வந்தனர்.

எல்.ஐ.சி., நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு புதன் கிழமை (மே 5) துவங்கியது. உள்நாட்டு மியூச்சுவல் பண்ட்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று. அவற்றுக்கு மொத்த அளவில் 71.12 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. மே 4 (இன்று) முதல் மே 9 ஆம் தேதி வரை பொது முதலீட்டாளர்களுக்கு ஐபிஓ ஓபன் செய்யப்பட்டது.

பங்கு விற்பனையில் எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு 10%, ஊழியர்களுக்கு 5% ஒதுக்கப்பட்டிருக்கிறது. 5.93 கோடி பங்குகள் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட நிலையில், இதன் 71% சதவீத பங்குகளை உள்நாட்டைச் சேர்ந்த 15 நிதி நிறுவனங்கள் வாங்கியதாக எல்ஐசி தெரிவித்துள்ளது.

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் மெகா ஐபிஓ-வை வாங்க அதன் ஏற்கனவே ஆர்வம் அதிகரித்து வந்த நிலையில், கடைசி நாளான இன்று கடைசி நாளில் பங்குகளை வாங்க கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாக முன்பதிவு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

பட்டியலிடப்படாத சந்தைகளில் ஏற்கனவே பிரீமியத்தில் வர்த்தகம் செய்து வரும் 162 மில்லியன் ஐபிஓ பங்குகளின் வெளியீட்டிற்கு காப்பீட்டு நிறுவனமான ரூ.902 மற்றும் ரூ.949 விலை வரம்பை நிர்ணயித்துள்ளது. 13 லட்சத்துக்கும் மேற்பட்ட முகவர்களைக் கொண்ட அரசுக்குச் சொந்தமான காப்பீட்டு நிறுவனம், சமீபத்திய புதுப்பிப்பின்படி, சுமார் 473.5 மில்லியன் பங்குகளுக்கான விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.

அதன் QIB (தகுதிபெற்ற நிறுவன வாங்குபவர்கள்) பகுதி 2.8 மடங்கும், பாலிசிதாரர் 6 மடங்கும் மற்றும் ஊழியர்கள் 4.36 மடங்கு சந்தா செலுத்தியுள்ளனர். முன்பதிவு செய்யப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையை விட சில்லறை முதலீட்டாளர்கள் சந்தா மீதான ஆர்வம் கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த வாரம், எல்ஐசி கிட்டத்தட்ட 7 சதவீதம் அல்லது ரூ.80-ரூ. 85 பிரீமியத்தில் வர்த்தகம் செய்து கொண்டிருந்தது, ஆனால் இந்தியாவில் பணவீக்கம் பற்றிய கவலைகளால் மூலதனச் சந்தையில் ஏற்பட்ட விரைவான சரிவு, அதன் பிரீமியத்தின் பெரும்பகுதியைக் குறைத்தது.

இதே போன்ற காரணங்களுக்காக எல்ஐசியின் ஐபிஓ அளவு குறைக்கப்பட்டது. முன்னதாக, அரசாங்கம் காப்பீட்டு நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டது.

ஆனால், உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக அதனை குறைக்க முடிவெடுத்தது. தற்போதைய வெளியீட்டு அளவு எல்ஐசியில் அரசாங்கத்தின் பங்குகளில் 3.5 சதவீதத்தை விற்பனைக்காக வெளியிட்டுள்ளது. நிகர வருவாய் ரூ.21,000 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்ஐசி மே 17, 2022 அன்று பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ இரண்டிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் - அபராஜிதா சக்சேனா | தமிழில் - கனிமொழி