Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

உயிர் காக்கும் மருந்துகளை இந்தியா முழுதும் கொண்டு செல்லும் தனியார் விமான நிறுவனங்கள்!

132 உயிர்காக்கும் உடான் விமான சேவைகள் இதுவரையில் இயக்கப்பட்டு 184 டன்களுக்கும் அதிகமான சரக்குகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உயிர் காக்கும் மருந்துகளை இந்தியா முழுதும் கொண்டு செல்லும் தனியார் விமான நிறுவனங்கள்!

Thursday April 09, 2020 , 1 min Read

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உயிர்காக்கும் உடான் முன்முயற்சியின் அங்கமாக, நாடு முழுக்க இதுவரையில் 132 சரக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. நாட்டில் எளிதில் அணுக முடியாத பகுதிகள் மற்றும் மலைப் பகுதிகளுக்கும் இந்த சேவைகள் இயக்கப்பட்டுள்ளன.


ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப் படை மற்றும் தனியார் விமான நிறுவனங்களின் உதவியுடன், முடக்க நிலை அமலில் உள்ள இந்த சமயத்தில் 184 டன்களுக்கும் அதிகமான மருந்துப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

airlines

File photo

லடாக், கார்கில், திம்ப்பூர், இம்பால், குவாஹாட்டி, சென்னை, அகமதாபாத், ஜம்மு, கார்கில் லே, ஸ்ரீநகர், சண்டீகர், போர்ட்பிளேர் ஆகிய இடங்களுக்கு ஏர் இந்தியா மற்றும் இந்திய விமானப் படை விமானங்கள் இயக்கப்பட்டன.

 

மொத்த பயண தூரம் : 1,21,878 கிலோ மீட்டர்கள்


05.04.2020ல் கையாளப்பட்ட சரக்கு அளவு : 13.70 டன்கள்


05.04.2020 வரையில் கையாளப்பட்ட சரக்கு : 160.96 + 23.70 = 184.66 டன்கள்

மொத்த அளவு


ப்ளூ டார்ட், ஸ்பைஸ்ஜெட் மற்றும் இன்டிகோ போன்ற உள்நாட்டு சரக்கு கையாளும் நிறுவனங்களும், வணிக அடிப்படையில் சரக்குகளை அனுப்பி வருகின்றன. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மார்ச் 24 - ஏப்ரல் 5 காலகட்டத்தில் 174 சரக்கு விமான சேவைகளை இயக்கி மொத்தம் 2,35,386 கிலோமீட்டர் பயணத்தைப் பதிவு செய்துள்ளது.


அந்த நிறுவனம் 1382.94 டன்கள் சரக்குகளைக் கையாண்டுள்ளது. இதில் 49 சேவைகள் சர்வதேச சரக்கு விமான சேவைகள். ப்ளூடார்ட் நிறுவனம் மார்ச் 25 - ஏப்ரல் 4 வரையிலான காலத்தில், 52 உள்நாட்டு சரக்கு விமான சேவைகளை இயக்கி 5,00,86 கிலோமீட்டர் பயணத் தொலைவைப் பதிவு செய்துள்ளது. இன்டிகோ நிறுவனம் ஏப்ரல் 3 - 4 தேதிகளில் 8 சரக்கு விமான சேவைகள் மூலம் 6103 கிலோ மீட்டர் பயண தூரத்தைப் பதிவு செய்து, 3.14 டன்கள் சரக்குகளைக் கையாண்டுள்ளது.


தகவல்: பிஐபி