இங்கிலாந்து ராணியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளும் தலைவர்கள் யார்?

By Kani Mozhi
September 15, 2022, Updated on : Mon Sep 19 2022 05:29:54 GMT+0000
இங்கிலாந்து ராணியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளும் தலைவர்கள் யார்?
செப்டம்பர் 19ம் தேதி லண்டனில் நடைபெற இங்கிலாண்டு ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் உலகத் தலைவர்கள், அரச குடும்பங்கள் மற்றும் பிரபலமான முக்கியஸ்தர்கள் பங்கேற்க உள்ளனர்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

செப்டம்பர் 19ம் தேதி லண்டனில் நடைபெற இங்கிலாண்டு ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் உலகத் தலைவர்கள், அரசக் குடும்பங்கள் மற்றும் பிரபலமான முக்கியஸ்தர்கள் பங்கேற்க உள்ளனர்.


கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனை ஆட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ம் தேதி தனது 96வது வயதில் காலமானார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து புதிய மன்னராக 73 வயது நிரம்பிய சார்லஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Queen Elizabeth

இங்கிலாந்து ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்கில் அரசக் குடும்ப பங்கேற்பாளர்கள்:

ஜப்பான் பேரரசரான நருஹிட்டோ மற்றும் பேரரசி மசாகோ, நெதர்லாந்து அரசர் வில்லியம் அலெக்சாண்டர் அவரது மனைவி மாக்சிமா, பெல்ஜியத்தின் மன்னர் பிலிப் மற்றும் ராணி மாடில்டே, ஸ்பெயின் நாட்டின் முன்னாள் மன்னரான ஜுவான் கார்லோஸ் I மற்றும் சோபியா, டென்மார்க்கின் ராணி மார்கிரேத் II, பட்டத்து இளவரசர் ஃபிரடெரிக் மற்றும் பட்டத்து இளவரசி மேரி, ஸ்வீடன் மன்னர் கார்ல் XVI குஸ்டாஃப் மற்றும் ராணி சில்வியா, நார்வேயின் மன்னர் ஹரால்ட் V மற்றும் ராணி சோன்ஜா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

Queen Elizabeth

பங்கேற்கும் தேசிய தலைவர்கள்:

- அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பிடன்


- திரௌபதி முர்மு, இந்திய குடியரசுத் தலைவர்


- அலெக்சாண்டர் வான் டெர் பெல்லன், ஆஸ்திரேலியா ஜனாதிபதி


- ஜெசிந்தா ஆர்டெர்ன், நியூசிலாந்து பிரதமர்


- ஆண்டனி அல்பானீஸ், ஆஸ்திரேலிய பிரதமர்


- கிடானாஸ் நௌசேடா, லிதுவேனியாவின் ஜனாதிபதி


- ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை அதிபர்


- பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர், ஜெர்மனியின் அதிபர்


- யூன் சுக்-யோல், தென் கொரிய அதிபர்


- ஜெய்ர் போல்சனாரோ, பிரேசில் அதிபர்


- ஆண்ட்ரிசெஜ் டுட, போலந்து அதிபர்


- செர்ஜியோ மேட்டரெல்லா, இத்தாலி ஜனாதிபதி


- ஜஸ்டின் ட்ரூடோ, கனடா பிரதமர்


- சார்லஸ் மைக்கேல், ஐரோப்பிய கவுன்சில் தலைவர்


- எகில்ஸ் லெவிட்ஸ், லாட்வியாவின் ஜனாதிபதி


- முகமது ஷ்டய்யே, பாலஸ்தீன பிரதமர்


- சவுலி நினிஸ்டோ, பின்லாந்து அதிபர்


- கட்டலின் நோவக், ஹங்கேரி அதிபர்


- மைக்கேல் டி. ஹிக்கின்ஸ், அயர்லாந்து அதிபர்


- மைக்கேல் மார்ட்டின், அயர்லாந்து பிரதமர்


- ஆண்ட்ரூ ஹோல்னஸ், ஜமைக்கா பிரதமர்


- சூசன் டூகன், செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் கவர்னர் ஜெனரல்


- ஷேக் ஹசீனா, வங்கதேச பிரதமர்

அழைக்கப்படாத நாடுகள், காரணங்கள்:

ரஷ்யா, மியான்மர், பெலாரஸ், ​​சிரியா, வெனிசுலா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை இங்கிலாந்து ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை.

  • உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக ரஷ்யாவுக்கு பிரிட்டன் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேபோல், போரின் போது ரஷ்யாவுக்கு துணை நின்றதற்காக பெலாரஸுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
  • ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது இனப்படுகொலையை கட்டவிழ்ந்து விட்ட காரணத்திற்காக ஏற்கனவே மியான்மர் பிரிட்டன் பொருளாதார தடை விதித்துள்ளது. எனவே ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மியான்மருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
  • கடந்த ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி செலுத்தி வருவதால் அந்நாட்டிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
  • சிரிய உள்நாட்டு போரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவான நிலைப்பட்டை பிரிட்டன் எடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே சிரியாவிற்கு அழைப்பு அனுப்பப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற