169 கோடி ரூபாய் நஷ்டத்தை கண்ட Dunzo நிறுவனம்!

பெங்களூருவைச் சேர்ந்த உள்ளூர் டெலிவரி சேவை நிறுவனம் Dunzo, டி சுற்று நிதியாக லைட்பாக்ஸ் வென்சர்ஸ், கூகுள், 3எல்கேபிடல் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து ரூ.45 மில்லியன் டாலர் திரட்டியுள்ளது.

5th Nov 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

உள்ளுர் சேவை மற்றும் டெலிவரி ஸ்டார்ட் அப் நிறுவனமான 'டன்சோ', (Dunzo) நிறுவனத்தின் நஷ்டம், 2019 நிதியாண்டில், ரூ.169 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் ரூ.21.9 கோடி நஷ்டத்துடன் ஒப்பிடும் போது இது 671 சதவீதம் அதிகமாகும். கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்தில் நிறுவனம் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் மூலம் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது.

டன்சோ

டன்சோ நிறுவனர்கள்

2019 நிதியாண்டில் ரூ.3.5 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ரூ.76 லட்சம் செயல்பாடுகள் மூலமான வருவாயாகவும், எஞ்சிய ரூ.2.7 கோடி இதர வருமானமாகவும் அமைந்துள்ளது.


இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள நிதி செலவிடப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. வணிகர்கள் மற்றும் டெலிவரி பங்குதாரர்கள் சேவையை தனது மேடையில் ஒருங்கிணைக்கும் அதே நேரத்தில், எங்கும் எதையும் செய்து தரக்கூடிய லாஜிஸ்டிக்ஸ் சேவை நிறுவனமாக திகழ் வேண்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனம், கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ள மதிப்பீடு அறிக்கையில், 2019 செப்டம்பரில் 56.4 மில்லியன் டாலர் மதிப்பீடு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்நிறுவனம் மாதம் 2 மில்லியன் டெலிவரி சேவைகளை வழங்கி வருகிறது. சராசரியாக ஒரு டெலிவரிக்கு 28 நிமிடங்கள் ஆகின்றன. 2015ல் கபீர் பிஸ்வாஸ், முகுந்த ஜா, அன்கூர் அகர்வால் ஆகியோரால் நிறுவனப்பட்ட டன்சோ; வணிகர்கள், பார்ட்னர்கள் மற்றும் பயனாளிகளை இணைத்து, கூரியர், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகிறது.


தற்போது, பெங்களூரு, மும்பை, தில்லி, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட 9 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும், குருகிராம், ஐதராபாத் மற்றும் நொய்டாவில் நிறுவனம் பைக் டாக்சி சேவையையும் கொண்டுள்ளது.


இந்த ஆண்டு துவக்கத்தில் ஸ்விக்கி நிறுவனம், இந்த பிரிவில அடியெடுத்து வைத்தது. சென்னையைச் சேர்ந்த ஜெனி மற்றும் ஐதராபாத்தின் விஸ்ஸி (Whizzy ) ஆகிய நிறுவனங்களும் இதே போன்ற சேவையை அளிக்கின்றன. கோப்புகள், ஆவணங்களை கொண்டு சேர்ப்பது, மதிய உணவு அளிப்பது, மருந்துகளை வாங்கித்தருவது போன்ற சேவைகளை இந்நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.


ஆங்கில கட்டுரையாளர்: சமீர் ரஞ்சன் | தமிழில்: சைபர்சிம்மன்  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
Report an issue
Authors

Related Tags

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக

Our Partner Events

Hustle across India