ஜூன் 23 முதல் 30ம் தேதி வரை மதுரையில் ஊரடங்கு: தடைகள் என்ன?

நாளை நள்ளிரவு முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, மதுரையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

22nd Jun 2020
 • +0
Share on
close
 • +0
Share on
close
Share on
close

மதுரையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தினால் அங்கு ஜூன் 23ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையை அடுத்து, பெரிய நகரமான மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துவருவதை அடுத்து,

“மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் ஜூன் 23 நள்ளிரவு முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, மதுரையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.”

ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிக்கும் நிலையில், இன்று மதுரைக்கும் பொது முடக்கம் அறிவிப்பு வந்துள்ளது.

மதுரை

எவற்றுக்கெல்லாம் தடை? அனுமதி?

 • ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனங்கள் உள்ளிட்டவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 • மத்திய அரசு அலுவலங்கள், வங்கிகள் 33% பணியாளர்களுடன் செயல்படும்.
 • காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை கடைகள் இயங்கும் எனவும், ஞாயிற்றுக் கிழமைகளில் பால் மற்றும் மருந்து கடைகளை தவிர்த்து அனைத்து கடைகள் மூடப்படும்.
 • மேலும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க 1 கிலோமீட்டர் தூரத்திற்குள்ளாவாகவே மட்டுமே நடந்து செல்லவேண்டும்.
 • உணவகங்களில் காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை பார்சல் சேவை வழங்க அனுமதி. தேனீர் கடைகளில் இயங்க அனுமதி இல்லை.
 • ரயில், விமானம் மூலம் வருபவர்கள் இ-பாஸ் மூலம் வர மட்டுமே அனுமதி.
 • தகவல் தொடர்ப்பு அலுவலகம் 5% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.

 • +0
Share on
close
 • +0
Share on
close
Share on
close

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற

Our Partner Events

Hustle across India