சென்னையில் அதிகரிக்கும் ‘மெட்ராஸ் ஐ’ ; சுய மருத்துவம் வேண்டாம் - எச்சரிக்கும் கண் மருத்துவர்!

By YS TEAM TAMIL
November 21, 2022, Updated on : Mon Nov 21 2022 11:01:32 GMT+0000
சென்னையில் அதிகரிக்கும் ‘மெட்ராஸ் ஐ’ ; சுய மருத்துவம் வேண்டாம் - எச்சரிக்கும் கண் மருத்துவர்!
'Madras Eye' 'மெட்ராஸ் ஐ' என்று பிரபலமாக அழைக்கப்படும் 'கண் வெண்படல அழற்சி' சென்னையில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. அதன் அறிகுறிகள் என்ன? சிகிச்சை பற்றி மருத்துவர் தரும் ஆலோசனை இதோ!
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

'Madras Eye' 'மெட்ராஸ் ஐ' என்று பிரபலமாக அழைக்கப்படும் 'கண் வெண்படல அழற்சி' சென்னையில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறார்கள் மத்தியில் இது வேகமாக பரவி வருகிறது.


ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்காலம் முடிவுக்கு வரும்போது இந்த மெட் பாதிப்பு நேர்வுகள் சற்றே மிதமான அளவு அதிகரிக்கும். இந்த ஆண்டு சென்னை மாநகரில் மழைப்பொழிவு காலம் நீடித்திருப்பது மெட்ராஸ் ஐ பாதிப்பு எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கிறது.

சமீப வாரங்களில் சிகிச்சைக்காக வருகை தந்த எமது நோயாளிகளுள் 20% -க்கும் அதிகமான நபர்களுக்கு கண் வெண்படல அழற்சி (மெட்ராஸ் ஐ) இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது,” என்று சென்னை, டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் பிரிவின் மண்டல தலைவரும், முதுநிலை கண் மருத்துவருமான டாக்டர். ஆர். கலா தேவி கூறினார்.
Madras eye

Madras Eye பரவுவது எப்படி?

மெட்ராஸ் ஐ என்பது, ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு அதிவேகமாக பரவுகின்ற ஒரு பொதுவான நோய் பாதிப்பாகும். இது பெரும்பாலும் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படுகிறது.


கண்ணிலிருந்து சுரக்கும் திரவங்களின் வழியாக கண் வெண்படல அழற்சி பரவுகிறது. ஒரு நபர் அவரது / அவளது கண்ணை தொட்டுவிட்டு, தொற்று பரவக்கூடிய வைரஸ் அல்லது பாக்டீரியாவை கண் சுரப்போடு தொடர்பு கொள்ளக்கூடிய வேறொரு நபருக்கு அல்லது பொருளுக்கு பரப்பி விடுவார்.


ஆனால், ஒவ்வாமையினால் ஏற்படும் கண் வெண்படல அழற்சி மற்றும் வேதிப்பொருட்கள் அல்லது எரிச்சலூட்டிகளினால் வரக்கூடிய கண் அழற்சி ஒரு நபரிடமிருந்து, மற்றொரு நபருக்குப் பரவுவதில்லை.

Dr. kaladevi

Dr.கலா தேவி, கண் மருத்துவர்

மெட்ராஸ் ஐ அறிகுறிகள் என்ன?

மெட்ராஸ் ஐ பாதிப்பில் காணப்படும் பொதுவான அறிகுறிகளாக கண் எரிச்சல், நீர் வடிதல், கண் சிவத்தல், ஒட்டிக்கொள்கிறவாறு கண்ணிலிருந்து அழுக்கு வெளியேற்றம் மற்றும் வெளிச்சத்தைப் பார்க்க கூச்சம் ஆகியவையாகும்.

ஆனால், கண்ணின் கருப்பு நிற படலத்தின் மீதான அடுக்கான கருவிழியில் தொற்று இருக்குமானால், அதன் காரணமாக மங்கலான பார்வை ஏற்படக்கூடும். தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்ட இந்த வைரல் தொற்று, சில நோயாளிகள் மத்தியில் கண் வீக்கம் மற்றும் அழற்சியை ஏற்படுத்துகிறது. இப்பாதிப்புகள் குணமாவதற்கு அவர்களுக்கு நீண்டகாலம் எடுக்கிறது.

கண் வெண்படல அழற்சி என்பது, பொதுவாக ஒரு சிறிய கண் தொற்றாக இருக்கிறபோதிலும்

அதை சரியாக பரிசோதனையில் உறுதிசெய்து உடனடியாக சிகிச்சையளிக்காவிட்டால் அதிக

தீவிரமான பிரச்சனையாக அது மாறக்கூடும்.

மெட்ராஸ்-ஐ பிரச்சனைக்கு மருந்து என்ன?

பக்கத்திலிலுள்ள மருந்து கடையிலிருந்து ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை மெட்ராஸ் ஐ பிரச்சனைக்காக வாங்கி பயன்படுத்திப் பார்த்துவிட்டு பல நோயாளிகள் எங்களிடம் சிகிச்சைக்கு வருகின்றனர்.

“சுயமாக மருந்துகளைப் பயன்படுத்துவதையும் ஓடிசி மருந்து என அழைக்கப்படும் கண் சொட்டு மருந்துகளை உபயோகிப்பதை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். உரிய பரிசோதனை மற்றும் நோய் உறுதி செய்யப்பட்ட பிறகு கண் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் கண் சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்,” என மருத்துவர் அறிவுரைக்கிறார்.

ஏறக்குறைய 90% கண் வெண்படல அழற்சிகள் அடினோவைரஸ் என்பதனால் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் கண் சிவந்து, அரிப்பும், எரிச்சல் தன்மையும் உள்ளதாக மாறுகிறது.

கண்ணீரைப் போன்ற நீர்த்த சுரப்பு வெளியேற்றத்தை இது உருவாக்குகிறது.


சில நபர்களிடம், ஒரு கண்ணிலிருந்து மற்றொரு கண்ணுக்கும் இது விரைவாகப் பரவுகிறது; ஒவ்வொரு நாளும் ஒரு பிரச்சனையாக குறைந்தபட்சம் 5 புதிய நோயாளிகள் என்னிடம் சிகிச்சைக்காக வருகின்றனர்.

Eye drops

மெட்ராஸ் ஐ வந்தால் செய்யக்கூடியது; செய்யக்கூடாதது என்ன?

மெட்ராஸ் ஐ என்பது, மிக அதிகமாகவும், வேகமாகவும் பரவக்கூடிய ஒரு தொற்றாகும். டவல்கள், தலையணை உறைகள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் போன்ற தனிப்பட்ட பொருட்களின் வழியாகத்தான் ஒரு நபரிடமிருந்து, மற்றொரு நபருக்கு இது எளிதாகப் பரவக்கூடியது. ஆகவே, இத்தொற்று பாதிப்புள்ள நபரை தனிமைப்படுத்துதல் முக்கியமானது.


இக்கண் தொற்றுள்ள நோயாளிகள், அவர்களது கண்களிலிருந்து வரும் திரவ வெளியேற்றத்தை துடைக்க பேப்பர் நாப்கின்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்றும் அவ்வாறு பயன்படுத்திய நேப்கின்களை உடனடியாக பத்திரமாக அகற்றிவிட வேண்டும்.


தொற்று ஏற்படும்போது பயன்படுத்திய பழைய கான்டாக்ட் லென்ஸ்களை அகற்றிவிட்டு அவர்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு புதிய கான்டாக்ட் லென்ஸ்களை அணியவேண்டும்.

வழக்கமாக பயன்படுத்துகின்ற, திரும்பத்திரும்ப பயன்படுத்தக்கூடிய கைக்குட்டைகளை இந்நோயாளிகள் பயன்படுத்தக்கூடாது. தங்களது கைகளை இவர்கள் அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும்; மற்றும் தொற்றுப் பரவாமல் தடுக்க, தங்களது தனிப்பட்ட பயன்பாட்டுப் பொருட்களை பிறர் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.

பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற அடைபட்ட அமைவிடச் சூழல்களில் கண் வெண்படல அழற்சி வேகமாக பரவக்கூடியது என்பதால், கண்களிலிருந்து அழற்சியின் காரணமாக தண்ணீர் போன்ற திரவச்சுரப்பு முற்றிலுமாக நின்றுவிடும் வரை வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டிலேயே தனித்திருப்பது நல்லது.

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற