மக்கானா-வில் தயாரிக்கப்படும் ஸ்னாக்சை உலகப் பிரசித்தம் ஆக்கிய பீஹார் பொறியாளர்!

அமன் தொடங்கியுள்ள வெள்ளைத்தாமரையில் இருந்து செய்யப்படும் 'வால்ஷ் ஸ்நாக்ஸ்' அமெரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர் வரை பிரபலமடைந்துள்ளது!

4th May 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

அமன் வர்ன்வால்; பீஹாரில் உள்ள பூர்னியாவை பூர்வீகமாகக் கொண்ட இவர்,  தனது அதிக வருமானம் தந்த பொறியியல் வேலையை விட்டுவிட்டு, நீண்ட நாள் கனவான தன் சுய தொழில் முயற்சியில் ஈடுபட தீர்மானித்தார்.


‘மக்கானா’ (தாமரை மலர் குடும்பத்தைச் சேர்ந்த பயிர்) கொண்டு தயாரிக்கப்படும் ஸ்னாக்ஸ் தொழிலை தொடங்கினார். 'வால்ஷ் ஸ்நாக்ஸ்' என்ற பெயரில் பீஹாரில் தொடங்கி தற்போது, பாட்னா, பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கும், சிங்கப்பூர், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற வெளி நாடுகளுக்கும் இந்த மக்கானா வால்ஷ் ஸ்நாக்ஸைகளை அமன் சப்ளை செய்கிறார்.


சமீபத்தில் அவரது ஸ்னாக்ஸ்கள் சிங்கப்பூர், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளின் சோதனைக் கட்டத்தில் தேர்வாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1

பீஹாரில் பிரசித்தி பெற்ற மக்கானா உலகம் முழுவதும் பிரபலமானது. மக்கானா உற்பத்தி மற்றும் அதன் வணிகம் பல ஆண்டுகளாக வியக்கத்தக்க வகையில் இருந்துள்ளன. உலகின் பலநாடுகளில் இது வணிக ரீதியாகப் பயிர் செய்யப்படுகிறது.


இந்தியாவில் பீஹார் மாநிலத்தில்தான் அதிகளவில் மக்கானா சாகுபடி செய்யப்படுகிறது. பூர்னியாவைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோரும் பொறியாளருமான அமன் வர்ன்வால், 2018 ஆம் ஆண்டு தனது பொறியியல் வேலையை விட்டார். மக்கானா பிசினஸை மேற்கொள்ளும் பொருட்டு அவரது  ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்கு 'வால்ஷ் ஸ்நாக்ஸ்' என்ற பெயர் வைத்தார். சமீபத்திய தகவல்களின்படி, இப்போது அவர் உலகின் பல நாடுகளில் வாழும் மக்கள் சுவைக்கும் மக்கானா, அமனின் தயாரிப்பில் இருந்து செல்வதாகும்.


அமன் வர்ன்வாலுடைய இந்த தயாரிப்பு, உடலுக்கு ஆரோக்கியமான ஹெல்தி ஸ்நாக்ஸ் ஆகும். இது இந்தியா மட்டுமல்லாது மற்ற மூன்று நாடுகளிலும் ஆரோக்கியத் தின்பண்டமாக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 500 ஸ்டார்ட்-அப் களில் 'வால்ஷ் ஸ்நாக்ஸும் ஒன்றாகும். இவர் உலகம் முழுதும் மக்கானாவை, கார்ன்ஃபிளாக்ஸ் போன்று உடனடியாக தயார் செய்யக்கூடிய ஒரு உணவாக கொண்டு சேர்க்க விரும்புகிறார். மக்கானா சாகுபடியை வணிகம் மற்றும் வேளாண்மை ஆகிய இரு துறைகளிலும் பயன்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்க முயற்சிக்கிறார் அமன்.

பீஹார் அதனுடைய தனித்துவமான பாரம்பரிய விவசாய முறைக்கு பிரபலமானதால், அமன், அவருடைய தனி அணுகுமுறையுடன் விவசாயிகளுக்கு புது நம்பிக்கை கொடுத்து மக்கானா விளைச்சலை உள்நாட்டில் மட்டுமில்லாது, சர்வதேச சந்தையில் விரிவாக்கியுள்ளார். இந்த ஆரோக்கிய உணவை உலகமெங்கும் கொண்டு செல்வதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.


தற்போது, பாட்னா, பெங்களூரு, சிங்கப்பூர், ஜெர்மனி மற்றும் அமெரிக்காவிற்கு 'வால்ஷ் ஸ்நாக்ஸ்' வழியாக மக்கானா புராடக்ட்டுகள் சப்ளை செய்யப்படுகின்றன. வர்ன்வால் தனது நிறுவனத்தை இயக்குவதற்குத் தேவையான அனைத்து உதவி மற்றும் ஒத்துழைப்பையும் குடும்பத்தினரிடமிருந்து பெறுகிறார்.


தந்தை விஜய்கர்ணா வர்ன்வாலும் தனது மகனின் வெற்றியில் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைவதாக தெரிவுத்துள்ளார்.

அமன், ஆரம்பத்தில் வேலையை விட்டுவிட்டு ஸ்டார்ட் -அப்  பற்றி பேசியபோது, அவருடைய அப்பாவாக கொஞ்சம் தயங்கினேன், ஆனால் கடின உழைப்பின் மூலம் அவன் நினைத்ததை சாதித்துக் காட்டியபோது, அவனுடைய அப்பாவாக பெருமைப்படுகிறேன் என்று அவர் கூறுகிறார்.

வர்ன்வால்-ன் ஸ்நாக்ஸ் வெளிநாட்டில் தேர்வாகியபோது பீஹாரின் பெயர் உலகம் முழுவதும் பிரகாசமானதாகவும், பீஹாரின் அந்தப் பகுதியில் வாழும் விவசாயிகளின் பொருளாதார நிலையும் மேம்பட்டு உள்ளதாகவும் மக்கானா தயாரிப்பாளர் விவசாயி பிரதீப் குமார் சஹா கூறுகிறார்.


பார்ப்பதற்கு மிகவும் தனித்துவம் வாய்ந்த வெள்ளைப் பூக்களாகவும், அதே சமயத்தில் சுவையில் அதற்கென்றே உரித்தான மக்கானே பயிர், பீஹாரின் கோஸி என்னுமிடத்தில் சீமஞ்சல் மிதிலாவில் அதிகம் பயிரிடப்படுகிறது. விவசாயிகள் அதன் சாகுபடி மற்றும் கடைநிலை பயிரைப் பிரித்தெடுப்பதில் கடுமையாக உழைக்க வேண்டும். இருந்த போதிலும், இது சந்தையில் அவர்களது கையால் விற்பனை செய்யப்படுகிறது.


வர்ன்வால், அவருடைய மக்கானாக்கள் ஒவ்வொரு வீட்டையும் ஏதாவதொரு வழியில் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறார். அவர் தனது ஸ்டார்ட்-அப்பிற்கும் அதே நம்பிக்கையுடன் உலகத் தரம் வாய்ந்த பரிமாணத்தை அளிப்பதில் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறார். 


சிங்கப்பூர், ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் மக்கானா மற்றும் அதன் சார்ந்த புராடக்ட்டுகள் சமீபத்தில் சோதனைக் கட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் அவரது பொறியியல் வேலையை விட்டுவிட்டு இந்த ஸ்டார்ட் -அப்  தொடங்கியபோது அவரது குடும்ப உறுப்பினர்கள் கொஞ்சம் பதட்டமாக இருந்ததாகவும் பின்னர் அந்த நிறுவனம் பெற்ற வெற்றியை பார்த்தபிறகு இப்போது அனைவரும் அவருக்கு முழுமனதுடன் துணை நிற்பதாக வர்ன்வால் கூறுகிறார்.


மக்கானா சாகுபடி முதலில் பீஹார் மாநிலத்தின் மதுபானியில் தொடங்கியதாக 1954 பீகார் கெஜட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். மேலும் மக்கானா சாகுபடி மதுபானியிலிருந்து தொடங்கி நாட்டின் பிற இடங்களுக்கும் பரவியுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.


வேளாண்துறை விஞ்ஞானிகள் மக்கானை ஒரு ஈரநிலப் பயிராக கருதுகின்றனர், அதாவது, நதி-கால்வாய்களின் கரையில் அமைந்துள்ள ஒரு ஏக்கர் வெற்று நிலத்தில் 8 முதல் 12 குவிண்டால் வரை இது விளைச்சல் அளிக்கக்கூடியது. இது தற்போது சந்தையில் ஒரு குவிண்டாலுக்கு ரூ.10,000 வரை தாராளமாக விற்பனை செய்யலாம் என்று அதன் சந்தைத்தன்மையை விவரிக்கின்றனர்.


விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் மற்றும் அதன் விளைச்சலுக்கென்று ஆகும் செலவு வெறும் இருபத்தைந்தாயிரம் ரூபாய் மட்டுமே. குறிப்பாக, நம் நாட்டில், சத்தீஸ்கர் மாநிலம் சிறந்த மக்கானாவை உற்பத்தி செய்வதில் சிறந்த இடம் பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.

தற்சமயம் மக்கானா சாகுபடி தம்தாரி மாவட்டத்தில் அதிகமாகவும், இதனால் மக்கானாவின் தேவை மாநிலத்திற்கு வெளியே அதிகரித்து வருகிறதாகவும் கூறுகிறார்.

லூதியானா மற்றும் கொல்கத்தா வரை இங்கு விளையும் மக்கானாவுக்கு பெரும் தேவை உள்ளதாக கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு முதல் மக்கானா  செயலாக்க ஆலையை அங்கு அமைக்கவுள்ளதாக மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது மக்கானா விளைச்சலை கண்டிப்பாக அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று நாம் அனைவரும் நம்பலாம்.

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding and Startup Course. Learn from India's top investors and entrepreneurs. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close