‘மேட் இன் (சீனா) சென்னை’; iphone11 உற்பத்தியை சென்னையில் தொடங்கிய ஆப்பிள்!

சென்னையில் அமைந்திருக்கும் Foxconn நிறுவன பளான்டில் ஐபோன்11 மாடல் போன்கள் உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியுள்ளது.

25th Jul 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

ஐ-போன் என்றாலே அதற்கு ஒரு தனி எதிர்ப்பார்ப்பு உண்டு. ஒவ்வொரு முறை புதிதாக ஐ-போன் மாடல் வெளியிடப்படும் போது உலகம் முழுவதும் மக்கள் அதை கூர்ந்து கவனிப்பார்கள், பலர் அதை உடனே வாங்கிடக் காத்திருப்பார்கள்.


iPhone 7, iPhone XR, iPhone SE மற்றும் iPhone 6S ஆகிய பழைய மாடல்களின் உற்பத்தி, மற்றும் புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் ஐ-போன்11 மாடல் உட்பட அனைத்து மாடல்களும் இங்கே இந்தியாவில் உற்பத்தி செய்யப்படப் போகிறது என்ற செய்தியை தகவல் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது ‘ஆத்மநிர்பர்’ திட்டத்தின் ஒரு முயற்சி என்றும் பார்க்கப்படுகிறது.

iphone

இதில் கூடுதல் ஹேப்பி நியூஸ் என்னவென்றால், ஐ-போன்11 நம்ம சென்னையில் அசெம்பிள் செய்யப்பட உள்ளது என்பதே ஆகும்.

“சென்னையில் அமைந்திருக்கும் Foxconn நிறுவன பளான்டில் ஐ-போன்11 மாடல் போன்கள் உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதுவே இந்தியாவில் முதன்முறை தயாராக இருக்கும் ஆப்பிளின் ப்ராடக்ட் என்று பதிவிட்டார்.”

உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட உள்ளதால், ஆப்பிள் நிறுவனம் மற்ற சர்வதேச உற்பத்தியாளர்களிடம் இருந்து இறக்குமதி செய்வதற்கு நிறுவனம் செலுத்த வேண்டிய 20 சதவீத வரியைத் தவிர்க்க உதவும்.


அவரைத் தொடர்ந்த மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், மற்றும் பலர் இந்த செய்தியை ட்விட்டரில் பதிவிட்டனர். மேக் இன் இந்தியா என்ற கனவுத்திட்டத்தின் வெற்றியாக இதை வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.

“2020- ஐ-போன் 11, 20ஃ9- ஐபோன்7 மற்றும் XR, 2018 - ஐபோன்6S, 2017 – ஐபோன்SE . இது இந்தியாவில் உற்பத்தி ஆகும் ஆப்பிளின் மாடல் போன்கள். இது தொடக்கமே...” என்ற ரவிசங்கர் பிரசாத் ட்விட்டரில் பதிவிட்டார்.

கடந்த 9 மாதங்களுக்கு முன் ஆப்பிள் நிறுவனம் iPhone XR மாடலின் அசெம்பிளியை இந்தியாவில் தொடங்கியது, அதைத் தொடர்ந்து தற்போது சென்னையில் அமைந்துள்ள Foxconn நிறுவனத்தில் தனது புதிய மாடலை உற்பத்தி செய்ய பணிகளை துவக்கியுள்ளது.


ஆப்பிள் நிறுவனத்துக்கு Foxconn, Wistron, மற்றும் Pegatron முக்கிய போன் பாகங்கள் சப்ளையர்கள் ஆகும். இந்தியாவில், சென்னையில் ஏற்கனவே ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிற்சாலையில் இனி ஐ-போன் மாடல்களின் பாகங்கள் அசெம்பிள் செய்யப்பட்டு உற்பத்தி தொடங்கும். மேலும் Foxconn இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுப்படுத்த $1 பில்லியன் முதலீடு செய்ய இருப்பதாக லைவ்மிண்ட் தெரிவித்துள்ளது.


தகவல் உதவி: லைவ்மின்ட்

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India