Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

ஆக்ஸ்ஃபர்ட் பல்கலையில் பட்டம் பெற்றார் மலாலா யூசுப்சாய்!

பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்து குண்டடி பட்டு பிழைத்த மலாலா, யூகே ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைகழகத்தில் தன் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

ஆக்ஸ்ஃபர்ட் பல்கலையில் பட்டம் பெற்றார் மலாலா யூசுப்சாய்!

Tuesday June 23, 2020 , 2 min Read

மலாலா யூசுப்சாய், நோபல் அமைதிப் பரிசு வென்ற இளம் பெண் என்ற பெருமையை கொண்டவர். ‘பெண்களின் கல்வி’க்காக பாகிஸ்தானில் பிரச்சாரம் செய்து, குண்டடிப்பட்டு, உலகப் புகழ் பெற்றார். தற்போது அவர், ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைகழகத்தில் இருந்து அரசியல், தத்துவம் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

Malala Yousafzai

Malala Yousafzai

22 வயதாகும் மலாலா, ஆக்ஸ்ஃபர்ட் லேடி மார்கரெட் ஹால் கல்லூரியில் எடுத்த இரு புகைப்படத்தை பகிர்ந்து தான் பட்டம் பெற்ற மகிழ்ச்சித் தகவலை பகிர்ந்தார்.

“என் மகிழ்ச்சி மற்றும் நன்றியை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. நான் எனது பட்டப்படிப்பை ஆக்ஸ்ஃபர்டில் முடித்துள்ளேன். என் குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணம் இது,” என்றார் மலாலா.

அவர் பகிர்ந்த இரு புகைப்படத்தில், ஒன்றில் தன் குடும்பத்துடன் அமர்ந்தவாறு இருக்கிறார், அவர்களின் முன் ஒரு கேக் இருக்கிறது. அதில், ‘ஹேப்பி கிராதுவேஷன் மலாலா’ என்று எழுத்தப்பட்டிருக்கிறது. மற்றொரு போட்டோவில், உடல் முழுதும் கேக்குடன் மலாலா சிரித்தப்படி இருக்கிறார்.

தனது அடுத்த ப்ளான் பற்றியும் பதிவிட்ட மலாலா,

“அடுத்த என்ன இருக்கிறது என்று தெரியவில்லை, தற்போதைக்கு நெட்பிளிக்ஸ், படிப்பு மற்றும் தூக்கம் மட்டும் தான்...” என்றார்.

17 வயதிருக்கையில் நோபல் அமைதிப் பரிசை வென்ற இளம் பெண்ணாக இருந்தார் மலாலா யூசுப்சாய். பெண்களுக்கான கல்வியின் முக்கியத்துவத்தை பிரச்சாரம் செய்த மலாலாவுக்கு, இந்திய சமூக செயற்பாட்டாளர் கைலாஷ் சத்யார்த்தி உடன் இணைந்து 2014ல் நோபல் பரிசு பெற்றார் மலாலா. பாகிஸ்தானின் உயர் விருதான பஷ்துன் என்ற அங்கீகாரத்தையும் பெற்றவர் மலாலா.


நோபல் பரிசு பெற்றபோது பேசிய மலாலா,

“நான் என் கதை வித்தியாசமாக இருப்பதால் உங்களிடம் சொல்ல விரும்பவில்லை, அது என்னைப்போன்று பல பெண்களின் கதை...” என்றார்.

2008ல் மலாலா, பாகிஸ்தானில் தாலிபனின் அதிகரிக்கும் செல்வாக்கு குறித்து பிபிசி உருது-வில் எழுதத் தொடங்கினார். டிசம்பர் மாதம் 2012ல் ஸ்வாட் வேலி என்ற இடத்தில், பெண்களுக்கான கல்வி குறித்து பிரசாரம் செய்தார். அவருக்கு 15 வயதிருக்கையில், பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவரை, தாலிபனைச் சேர்ந்த ஒருவன், மலாலா தலையில் சுட்டான். பெண்கள் கல்வி பற்றி பேசிய மலாலா பயங்கரவாதியாக பார்க்கப்பட்டார்.


கடுமையான காயங்களுடன் மலாலா, பாகிஸ்தான் மிடிலிட்டரி மருத்துவமனைக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் அங்கிருந்து யூகே-வுக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிரச் சிகிச்சைக்குப் பின்னர் மலாலா உயிர் பிழைத்தார். அவரை தாக்கியப் பின்னர் தாலிபன் வெளியிட்ட அறிக்கையில், மலாலா உயிர் பிழைத்தால் அவர் மீண்டும் தாக்கப்படுவார் என்று குறிப்பிட்டனர்.

Malala celebration

பிர்மிங்கம்மில் ஒரு வருடத்துக்குப் பின் உடல் தேறிய மலாலா, தொடர்ந்து பெண்கள் கல்விக்காக குரல் கொடுத்து வருகிறார். அவர் தன் தந்தையுடன் இணைந்து ‘மலாலா ஃபண்ட்’ என்று தொடங்கி உலகமெங்கும் பெண்கள் கல்விக்காக நிதி திரட்டினார்.


மலாலா, சிரியாவைச் சேர்ந்த அகதிப்பெண்களுக்காக பள்ளி ஒன்றை தொடங்கினார். தொடர்ந்து பல மேடைகளில் பெண்கள் கல்வி குறித்து பேசி வருகிறார். ‘ஐ ஆம் மலாலா’ என்ற தனது சுயசரிதை புத்தகத்தையும் எழுதியுள்ளார் அவர். ஜூலை 12ம் தேதி மலாலா பிறந்த தினமான நாளை, ‘மலாலா டே’ என உலகமெங்கும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.