பொருளாதாரத்தை மேம்படுத்த UPI சேவையை அறிமுகப்படுத்துகிறது மாலத்தீவுகள்!
பொருளாதார முன்னேற்றத்திற்காக யூனிஃபைடு பேமெண்ட்ஸ் இண்டெர்பேஸ் எனப்படும் யுபிஐ பணப்பரிமாற்ற முறையை மாலத்தீவுகள் அறிமுகம் செய்யவுள்ளது.
பொருளாதார முன்னேற்றத்திற்காக யூனிஃபைடு பேமெண்ட்ஸ் இண்டெர்பேஸ் எனப்படும் யுபிஐ பணப்பரிமாற்ற முறையை மாலத்தீவுகள் அறிமுகம் செய்யவுள்ளது.
நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) உருவாக்கிய இந்த யுபிஐ தளம் மூலம் மொபைல் போன்கள் மூலம் வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கான உடனடி நிகழ்நேர கட்டண முறையை அறிமுகம் செய்கிறது.
UPI-ஐ அறிமுகப்படுத்த ஒரு கூட்டமைப்பை அமைத்தார் மாலத்தீவு ஜனாதிபதி தலைவர் முகமது முய்ஸூ. மேலும், டிரேட்நெட் மாலத்தீவுகள் கார்ப்பரேஷன் லிமிடெட்டை அதன் முன்னணி முகமையாக நியமித்துள்ளது மாலத்தீவு அரசு.
இந்தக் கூட்டமைப்பில் நாட்டின் வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும் என்றும் நாட்டின் ஜனாதிபதி பரிந்துரைத்தார்.
இது குறித்து வெளியிடப்பட்டச் செய்திக் குறிப்பில்,
“இந்த நடவடிக்கை மாலத்தீவு பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க நன்மைகளைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் நிதியளவில் அனைவரையும் உள்ளடக்கும் இன்க்ளூஷன், நிதி பரிவர்த்தனைகளில் மேம்பட்ட செயல்திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும்.“
உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் மற்றும் நாட்டின் நாணய ஆணையம் ஆகியவை மாலத்தீவில் UPI ஐ நிறுவுவதை மேற்பார்வை செய்வதில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தக அமைச்சகத்தை வழிநடத்தவிருக்கிறது. மாலத்தீவில் UPI ஐ அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஆகஸ்ட் மாதம் அங்கு சென்ற வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணத்தின் போது கையெழுத்தானது.
சுற்றுலா; மாலத்தீவின் பொருளாதார நடவடிக்கையின் முக்கிய ஆதாரமாக உள்ளது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 30 சதவீதத்தை பங்களிக்கிறது மற்றும் 60 சதவீதத்திற்கும் அதிகமான அந்நிய செலாவணியை உருவாக்குகிறது.