பதிப்புகளில்
நியூஸ் வியூஸ்

இந்தியாவில் அதிகபட்ச தனிநபர் வருமானவரி; அமெரிக்கா, சீனாவை விட குறைவானது தெரியுமா?

வருவாய் துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே, செல்வந்தர்களுக்கான கூடுதல் வரியை அதிகரிக்க பட்ஜெட்டில் உத்தேசிக்கப்பட்டிருப்பதை, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவில் அதிகபட்ச தனிநபர் வரி 45 சதவீதமாகவும், அமெரிக்காவில் 50.3 சதவீதமாகவும் இருப்பதை சுட்டிக்காட்டி சரி என வாதிடுகிறார்.

YS TEAM TAMIL
12th Jul 2019
8+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

செல்வந்தர்கள் மீது வரி விதிப்பை அதிகரிப்பது சரியானதே எனக் கூறும் நிதி அமைச்சகம், அதிகபட்ச வரி, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளொடு, இந்தியாவில் குறைவாக இருப்பதாகவும், செல்வந்தர்கள் மீது அதிக வரி விதிப்பது உலக அளவிலான போக்காக இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

2019-20 பட்ஜெட்டில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூ.2-5 கோடி வரையான வரி செலுத்தக்கூடிய வருமானம் மீதான கூடுதல் வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகவும், ரூ.5 கோடிக்கு மேல் வருமானத்திற்கு 15 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாகவும் உயர்த்த இருப்பதாக அறிவித்தார்.

இதனையடுத்து, ரூ.2-5 கோடி வருமானம் உள்ளவர்களின் வரி 390 சதவீதமாக உயரும். ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் வரி 42.7 சதவீதமாக உயரும்.

இந்த உயர்வுக்கு முன் இந்தியாவில் அதிக பட்ச வரி 35.88 சதவீதமாக இருந்ததாக பாண்டே குறிப்பிடுகிறார். யு.கேவில் இது 45 சதவீதமாகவும், ஜப்பானில் 45.9 சதவீதமாகவும். கனடாவில் 54 சதவீதமாகவும், பிரான்சில் 66 சதவீதமாகவும் இருக்கிறது.  

"இந்தியாவில் இது 35 சதவீதமாக இருக்கிறது. (அதிகப்பட்ச தனிநபர் வருமான வரி). எனவே சமநிலையின் படி மற்றும் வரி செலுத்தும் தகுதி படி பார்த்தால், ரூ.பத்து லட்சம் சம்பாதிப்பவர்கள் மற்றும் ரூ.10 கோடி சம்பாதிப்பவர்கள் அதே அளவிலான வரி செலுத்த வேண்டும்,” என்கிறார் அவர்.

"ரூ.11 முதல் 14 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள், கோடிகளில் சம்பாதிப்பவர்களை விட மேலும் கொஞ்சம் பணத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். எனவே, அதிகம் சம்பாதிப்பவர்கள் அதிகம் வரி செலுத்த வேண்டும்,” என்கிறார் அவர்.

தேசத்தை உருவாக்குவதில் வரி செலுத்துபவர் பங்களிப்பு பற்றி குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், வருமானம் அதிகரிக்கும் நிலையில் அதிக வருமானம் பெறுபவர்கள் தேச வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பு செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

"எனவே, ரூ.2 முதல் 5 கோடி வரை மற்றும் ரூ. 5 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மீதான வரியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளேன். இந்த இரண்டு பிரிவினரும், 3 மற்றும் 7 சதவீதம் கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்றும் நிதி அமைச்சர் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.”

பட்ஜெட்

செல்வந்தர்கள் மீது வரி விதிப்பை அதிகரிப்பது சரியானதே எனக் கூறும் நிதி அமைச்சகம், அதிகபட்ச வரி, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளொடு, இந்தியாவில் குறைவாக இருப்பதாகவும், செல்வந்தர்கள் மீது அதிக வரி விதிப்பது உலக அளவிலான போக்காக இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

வருவாய் துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே, செல்வந்தர்களுக்கான கூடுதல் வரியை அதிகரிக்க பட்ஜெட்டில் உத்தேசிக்கப்பட்டிருப்பதை, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவில் அதிகபட்ச தனிநபர் வரி 45 சதவீதமாகவும், அமெரிக்காவில் 50.3 சதவீதமாகவும் இருப்பதை சுட்டிக்காட்டி சரி என வாதிடுகிறார்.

2019-20 பட்ஜெட்டில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூ.2–5 கோடி வரையான வரி செலுத்தக்கூடிய வருமானம் மீதான கூடுதல் வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகவும், ரூ.5 கோடிக்கு மேல் வருமானத்திற்கு 15 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாகவும் உயர்த்த இருப்பதாக அறிவித்தார்.

இதனையடுத்து, ரூ.2-5 கோடி வருமானம் உள்ளவர்களின் வரி 390 சதவீதமாக உயரும். ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் வரி 42.7 சதவீதமாக உயரும்.

இந்த உயர்வுக்கு முன் இந்தியாவில் அதிக பட்ச வரி 35.88 சதவீதமாக இருந்ததாக பாண்டே குறிப்பிடுகிறார். யூ.கேவில் இது 45 சதவீதமாகவும், ஜப்பானில் 45.9 சதவீதமாகவும். கனடாவில் 54 சதவீதமாகவும், பிரான்சில் 66 சதவீதமாகவும் இருக்கிறது.  

"இந்தியாவில் இது 35 சதவீதமாக இருக்கிறது. (அதிகபட்ச தனிநபர் வருமான வரி). எனவே சமநிலையின் படி மற்றும் வரி செலுத்தும் தகுதி படி பார்த்தால், ரூ.பத்து லட்சம் சம்பாதிப்பவர்கள் மற்றும் ரூ.10 கோடி சம்பாதிப்பவர்கள் அதே அளவிலான வரி செலுத்த வேண்டும்,” என்கிறார் அவர்.

"ரூ.11 முதல் 14 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள், கோடிகளில் சம்பாதிப்பவர்களை விட மேலும் கொஞ்சம் பணத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். எனவே, அதிகம் சம்பாதிப்பவர்கள் அதிகம் வரி செலுத்த வேண்டும்,” என்கிறார் அவர்.

தேசத்தை உருவாக்குவதில் வரி செலுத்துபவர் பங்களிப்பு பற்றி குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், வருமானம் அதிகரிக்கும் நிலையில் அதிக வருமானம் பெறுபவர்கள் தேச வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பு செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

"எனவே, ரூ.2 முதல் 5 கோடி வரை மற்றும் ரூ. 5 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மீதான வரியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளேன். இந்த இரண்டு பிரிவினரும், 3 மற்றும் 7 சதவீதம் கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்றும் நிதி அமைச்சர் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

ஆதாரம் :பிடிஐ | தமிழில் சைபர்சிம்மன்

8+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags