கோவிட்-19 நோய்த் தொற்றால் 35% மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்!

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக 35 சதவீத மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாக சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

27th Jul 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், சென்னையில் உள்ள மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்க்கும் (ஆர்.ஓ.பி.) பிராந்திய அலுவலகம் மற்றும் பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் கிளை அலுவலகங்கள் இணைந்து, மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்காக, 'நோய்த் தொற்று சூழ்நிலையில் மன ஆரோக்கியம்' என்ற தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கை நடத்தின.

Stress


தற்கொலைகளைத் தடுப்பதற்காக இயங்கும் சென்னையைச் சேர்ந்த ஸ்நேகா (SNEHA) என்ற தன்னார்வ அமைப்பின் நிறுவனர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் உள்ளிட்டோர் இந்த இணையவழிக் கருத்தரங்கில் முக்கிய உரையாற்றினார். அவர் இப்போது சென்னை வி.எச்.எஸ். உளவியல் துறையின் தலைவராக உள்ளார். தற்கொலைகள் குறித்த ஆராய்ச்சி மற்றும் தடுப்புக்கான உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச நெட்வொர்க் உறுப்பினராகவும் உள்ளார்.


திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உளவியல் துறை தலைவராகவும், அசோசியேட் பேராசிரியராகவும் உள்ள டாக்டர் மலர் மோசஸ் இதில் பங்கேற்றுப் பேசினார். உளவியல் மருத்துவத் துறையில் அவருக்கு 15 ஆண்டு கால அனுபவம் உள்ளது. மகளிர் மன ஆரோக்கிய துறையில் இவர் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்.


இணையவழி பயிலரங்கில் பேசிய டாக்டர் லட்சுமி விஜயகுமார்,

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக 35 சதவீத மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாக சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று கூறினார். இதற்கு முன்பு உளவியல் பிரச்சினைகளுக்கு ஆளாகாதவர்களும் இப்போது பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நோய்த் தொற்று காரணமாக உயிரிழப்போர் விகிதம் இந்தியாவில் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய டாக்டர் லட்சுமி, நோய்த் தொற்றுச் சூழ்நிலையை மத்திய, மாநில அரசுகள் சிறப்பாகக் கையாள்வது குறித்து ஆக்கபூர்வமான தோற்றத்தைப் பரப்பிட வேண்டும் என்று கூறினார்.


குடும்பத்திற்குள்ளும், அருகில் உள்ளவர்களுடனும், நேசத்துக்கு உரியவர்களுடனும் தனிப்பட்ட முறையில் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வது, மன ஆரோக்கியத்தை நல்ல முறையில் பராமரிக்க உதவிகரமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

ஒருவருடைய தோல்விகளை வெற்றிகரமாகக் கையாளும் திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம் நேர்மறையான எண்ணங்களின் சக்தி அதிகரிக்கிறது என்று அவர் விளக்கினார். இப்போது ஏற்பட்டுள்ளதைப் போன்ற நோய்த் தொற்று பாதிப்பு, மனிதகுல வரலாற்றில் தற்காலிகப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

உறுதியான நோக்கங்கள் கொண்டவர்கள், இதுபோன்ற எந்தவொரு வெளிப்புறத் தடைகளாலும் முடங்கிப் போவது கிடையாது என்பதை அனுபவ ரீதியில் மக்கள் பார்த்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.


தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பற்றி கவலை தெரிவித்த டாக்டர் லட்சுமி,

நோய்த் தொற்றுச் சூழ்நிலையில் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார்.

எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற நிலை இருப்பதால் பயமும், மன அழுத்தமும் அதிகரிக்கிறது என்றும், அவரிடம் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் நம்பிக்கையை வளர்ப்பது தான் இதற்குத் தீர்வு என்றும் அவர் குறிப்பிட்டார். உலகம் முழுக்க இந்த நோய்த் தொற்றைத் தடுப்பதற்கு அரசாங்கத் துறைகள் ஓய்வின்றி உழைத்து வருகின்றன என அவர் கூறினார்.

1

தற்காலிகமான பொருளாதாரச் சரிவு காரணமாக தற்கொலைகள் அதிகரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அது மன்னிக்க முடியாத விஷயம் என்றும் டாக்டர் லட்சுமி தெரிவித்தார்.

எந்தப் பொருளாதாரத்திலும் பின்னடைவு ஏற்படும் போது அது நீண்ட காலத்துக்கு நீடிப்பதில்லை, எப்போதுமே அது மீண்டு எழுந்திருக்கிறது என்றார் அவர்.

இணையவழிச் செயல்பாடுகளுக்கு குழந்தைகள் பலியாவது பற்றிக் குறிப்பிட்ட அவர், சிறப்பான தகவல் தொடர்புக்கான கருவியாக இருக்கும் மின்னணு சாதனங்களே அவர்களுக்குக் கொடுமைகளை இழைக்கும் சாதனங்களாகவும் இருக்கின்றன என வருத்தம் தெரிவித்தார்.

நவீன சாதனங்களில் மூழ்கிப் போவதைவிட, நேரடியாக, தனிப்பட்ட கருத்துப் பரிமாற்றங்கள் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உணர வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் கூறினார். இந்த விஷயத்தில் சரியான விஷயங்களை பிள்ளைகளுக்குக் கற்றுத் தரும் பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இப்போது ஏற்பட்டிருக்கும் நோய்த் தொற்று ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை ஏற்படக் கூடிய விஷயமாக உள்ளது என்றும், வரக் கூடிய நாட்களில் இந்தச் சவாலை மனிதகுலம் வெற்றி கொள்ளும் என்றும் டாக்டர் மலர் மோசஸ் தனது தொடக்கவுரையில் கூறினார்.


பொது மக்களுக்காக, மன ஆரோக்கியம் என்ற தலைப்பில் முதன்முறையாக இணையவழிக் கருத்தரங்கம் நடத்தப்படுவதை அவர் பாராட்டினார். பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளை முழுமையாகக் கடைபிடித்தால், கோவிட் -19 நோய் பரவல் குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று அவர் கூறினார்.

முடக்கநிலை காரணமாக அதிக மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்ட டாக்டர் மலர், நோய்ப் பரவல் சங்கிலித் தொடரை அறுப்பதற்கு இது தேவைப்படுகிறது என விளக்கினார். கட்டாயமாக வீட்டில் இருக்க வேண்டும் என்பது கவலை தரக் கூடியதாக உள்ளது என்ற நிலையில், ஒரே மாதிரியான  சோம்பலான வாழ்க்கை முறையைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டாம் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மின்னணு சாதனங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால், தூக்கக் கோளாறுகளை ஏற்படுத்தும் வகையிலான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். திட்டமிட்டு பழக்கங்களை உருவாக்கிக் கொள்வதன் மூலமும், ஆரோக்கியமான தூக்கத்தை பின்பற்றுவதன் மூலமும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும் என்று அவர் தெரிவித்தார்.


யோகா, உடற்பயிற்சிகள் செய்வதன் மூலமும், புதிதாக சிலவற்றைக் கற்றுக் கொள்வதன் மூலமும் இந்த மன அழுத்தங்களில் இருந்து எப்படி விடுபட முடியும் என்று அவர் விளக்கினார்.


கோவிட் சுகாதார மையங்கள், டெலி மருத்துவம், கலந்தாய்வு மற்றும் போதை அடிமை மீட்பு மையங்கள் போன்ற பல வகையான வசதிகள் இருப்பதை அவர் பட்டியலிட்டார். மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள், துரிதமாக உதவிகள் பெறுவதற்கு, உடனடியாக உரிய எஸ்.டி.டி. நம்பருடன் சேர்த்து 102 அல்லது 104 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


கோவிட்- 19 பாதிப்புச் சூழ்நிலையில் மாணவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் மன அழுத்தங்களுக்கு ஆளாவதைக் கருத்தில் கொண்டு மன ஆரோக்கியத்துக்கான 'மனோதர்பன்' என்ற முன்முயற்சியை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் எடுத்திருப்பது பற்றியும் அவர் கூறினார்.


தகவல்: பிஐபி

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India