தமிழக இளைஞருக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கிய Microsoft: என்ன காரணம்?
இந்திய மதிப்பில் 36 லட்சம் ரூபாய் அள்ளிய லக்ஷ்மண் முத்தையா!
Bug-கை கண்டுபிடித்ததால் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 50 ஆயிரம் அமெரிக்க டாலரை பரிசாக வழங்கியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆன்லைன் சேவைகளில் பக் (BUG) கண்டுபிடித்ததற்காக சென்னையைச் சேர்ந்த இளைஞருக்கு 50,000 அமெரிக்கா டாலரை (தோராயமாக ரூ. 36 லட்சம்) வழங்கியுள்ளது அந்நிறுவனம்.
"எந்தவொரு மைக்ரோசாப்ட் கணக்கையும் அனுமதியின்றி யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும் என்பது தான் அந்த பக் (BUG) அவர் சுட்டிக்காட்டிய பிரச்சனையை மதிப்பிட்ட பிறகு, மைக்ரோசாப்ட் பாதுகாப்புக் குழு இந்த பிரச்சினையை சரிசெய்தது.”
அவர்களின் அடையாள பக் பவுண்டி திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையைச் சேர்ந்த லக்ஷ்மண் முத்தையாவுக்கு 50,000ஆயிரம் அமெரிக்க டாலரை பரிசாக அளித்துள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். இது தொடர்பாக முத்தையா தனது ப்ளாக் ஒன்றில் எழுதியுள்ளார். முத்தையாவுக்கு இது முதன்முறை அல்ல.
முன்னதாக ஃபேஸ்புக் மூலமாக இன்ஸ்டாகிராம் அக்கௌண்ட்டை ஹேக் செய்வதற்கான பக்-கையும் கண்டுபிடித்துக்கொடுத்துள்ளார்.
"மைக்ரோசாப்ட், பயனரின் கடவுச்சொல்லை மீட்டமைக்க ஒரேவகையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்தேன். எனவே அவற்றை சோதிக்க முடிவு செய்தேன்," என்கிறார் முத்தையா.
மேலும், இது தொடர்பாக விரிவாக விளக்கிய அவர், மைக்ரோசாஃப்ட் அக்கௌண்ட் வைத்திருக்கும் பயனாளர் ஒருவர், பாஸ்வார்டை மாற்றியமைக்க வேண்டும் என்றால், மொபைல் நம்பர் அல்லது இ-மெயில் ஐடியை பதிவிட வேண்டும். இதை பதிவிட்ட பின்பு, சம்பந்தப்பட்ட மொபைல் நம்பர் அல்லது இ-மெயிலுக்கு செக்யூரிட்டி கோர்டு அனுப்பப்படும். அந்த 7 இலக்க செக்யூரிட்டி கோர்டை பயன்படுத்தி பாஸ்வார்டை மாற்றியமைக்க முடியும். இதுதான் நடைமுறை.
”இங்கேதான் முக்கியமான சிக்கல் இருக்கிறது. இந்த நிலையில் 7 இலக்க எண்ணை ஹாக்கர் ஒருவரோ அல்லது வேறுயாரோ கலவையின் அடிப்படையில் பதிவிடும்போது, அவரால் எந்த ஒரு பயனரின் கடவுச் சொல்லை அவரின் அனுமதியின்றி மாற்றியமைக்க முடியும்,” என்றார்.
பல நாட்கள் முயற்சிகளுக்குப் பிறகு, கணக்கு கையகப்படுத்தும் குறைபாட்டை அவரால் கண்டுபிடிக்க முடிந்தது.
"உடனடியாக, நான் அனைத்து குறைபாட்டையும், வீடியோவாக பதிவுசெய்து, விரிவாக ஸ்டெப் பை ஸ்டெப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் சமர்ப்பித்தேன். அவர்கள் சிக்கலை புரிந்துகொண்டு விரைவாக நடவடிக்கை எடுத்தனர், என்கிறார் முத்தையா.
தகவல் உதவி- thenewsminute | தமிழில்: மலையரசு