Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

இனிப்பு, ஸ்நாக்ஸ்களை விற்பனை செய்யும் இ-காமர்ஸ் தளம் ஏற்படுத்திய ‘மிர்ச்சி லேடி’

ஹைதராபாத்தைச் சேர்ந்த பூர்ணிமா மிட்டல் இந்திய இனிப்பு, ஸ்நாக்ஸ் வகைகளை வீட்டில் தயாரிக்கும் சிறு விற்பனையாளர்களுக்கு உதவும் வகையில் Mirchi.com என்கிற மின்வணிக சந்தைப்பகுதியை உருவாக்கியுள்ளார்.

இனிப்பு, ஸ்நாக்ஸ்களை விற்பனை செய்யும் இ-காமர்ஸ் தளம் ஏற்படுத்திய ‘மிர்ச்சி லேடி’

Wednesday February 17, 2021 , 4 min Read

பூர்ணிமா மிட்டல் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்து வந்தார். 2008-ம் ஆண்டு ஹைதராபாத் திரும்பினார். ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் இயக்குநராக பணியாற்றிய இவர், இந்தியா திரும்பியதும் இங்கிருந்தே குழுவை நிர்வகித்து வந்தார். ஆனால் அமெரிக்க நேரத்திற்கு ஏற்ப இங்கிருந்து பணிபுரிய வேண்டியிருந்தது.


2011-ம் ஆண்டு இவர் பணிபுரிந்த நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் வாங்கிக்கொண்டது. அந்த சமயத்தில் வேலையை விட்டுவிட்டு இல்லத்தரசியாக இருக்கத் தீர்மானித்தார்.

1

பூர்ணிமாவின் மகன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடவேண்டும் என்கிற எண்ணம் இவருக்குத் தோன்றியுள்ளது.

“நான் அமெரிக்காவில் இருந்தபோது ஹைதராபாத்தில் என்னுடைய பகுதிக்கு அருகில் இருக்கும் சிறிய கடைகளில் இருந்து இனிப்பு, ஸ்நாக்ஸ், ஊறுகாய் போன்ற உணவு வகைகளை வாங்கிச் செல்வேன். இவர்களைப் போல் திறமையுள்ள ஏராளமானோர் தங்களது பகுதியைத் தாண்டி செயல்படுவதில்லை என்பதை இணையம் மூலம் ஆய்வு செய்தபோது தெரிந்துகொண்டேன். இவர்களது பொருளாதாரச் சூழல், குடும்பத்தில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் போன்றவை இதற்குக் காரணமாக இருப்பது தெரிந்தது,” என்றார்.

தங்களது பகுதியைத் தாண்டி மற்ற இடங்களுக்கு வணிகத்தைக் கொண்டு சேர்க்க முடியாத இவர்களைப் போன்றோருக்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பது குறித்து யோசித்தார்.


2017-ம் ஆண்டு Mirchi.com தொடங்கத் தீர்மானித்தார். வீட்டில் தயாரிக்கப்படும் ஊறுகாய், ஸ்நாக் பார், லட்டு, சாக்லேட், பொடிகள், பூஜியா, கட்டியா, கச்சோரி என இந்திய இனிப்பு மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளுக்கான சந்தைப்பகுதியாக இதை உருவாக்க விரும்பினார்.


நான்காண்டுகள் கடந்த நிலையில் இந்தத் தளத்தில் சுமார் 5,000 விற்பனையாளர்கள் இணைந்துள்ளார்கள். இவர்களது தயாரிப்புகள் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, யூகே போன்ற பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

தொழில்முனைவுப் பயணம்

சிறு வயதில் இவரது சுபாவத்தைக் கொண்டே மிர்ச்சி என்கிற பெயர் உருவானதாக பூர்ணிமா கூறுகிறார்.

“சிறு வயதில் நான் அதிக குறும்பு செய்வேன். சோட்டி மிர்ச்சி (சின்ன மிளகாய்) என்றே என்னை அழைப்பார்கள். இந்தப் பெயர் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே பிரபலமாகிவிட்டது. இன்று என்னை ‘மிர்ச்சி லேடி’ என்று அழைக்கிறார்,” என்று புன்னகைத்தவாறே குறிப்பிடுகிறார் பூர்ணிமா.
2

பூர்ணிமா வணிகவியல் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்தார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் டிப்ளமோ படிப்பும் முடித்தார். 1992-ம் ஆண்டு இவருக்கு திருமணம் முடிந்தது. கணவருடன் அமெரிக்கா சென்றார்.


இவரது குடும்பத்தினர் Mirchi.com என்கிற டொமையினை பதிவு செய்து இந்திய ஸ்நாக்ஸ் வகைகளை அமெரிக்காவில் சந்தைப்படுத்தினார்கள்.


பூர்ணிமா 2017-ம் ஆண்டு Mirchi.com டொமெயினை ரீலான்ச் செய்யத் தீர்மானித்தார். முதலில் பல்வேறு பிரிவினருடன் கலந்துரையாடினார். அவர்கள் எதை அதிகம் விரும்புகிறார்கள் என்பதையும் தன்னுடைய மனதில் இருக்கும் திட்டம் எந்த அளவிற்கு பலனளிக்கும் என்பதையும் புரிந்துகொண்டார்.

“என்னுடைய முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பலர் இந்திய இனிப்பு மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளை வழங்குவதாக விளம்பரப்படுத்தும் நிலையில் எங்கள் வணிக மாதிரி தனித்துவமாக இருக்கவேண்டும் என்று விரும்பினோம். வாடிக்கையாளர் இந்தியாவில் தங்களுக்குப் பிடித்த ஸ்டோரில் இருந்து ஆர்டர் செய்யும் வசதியை வழங்கவேண்டும். அதே ஸ்டோரில் இருந்து அவர்களுக்கு ஃப்ரெஷ்ஷாக டெலிவர் செய்யப்படவேண்டும். இதற்கு முன்னுரிமை அளித்தோம்,” என்றார்.

வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்வது, விற்பனையாளர்களுக்கு ஆர்டரை அனுப்புவது, ஷிப்பிங் லேபிள் உருவாக்குவது, கூரியர் பிக்-அப், விற்பனையாளர் கட்டணம் என அனைத்து செயல்முறைகளையும் தானியங்கிமயமாக்குவதே பூர்ணிமாவின் இரண்டாவது திட்டமாக இருந்தது.


ஏனெனில் அனைவரிடமும் ஸ்மார்ட்போன் உள்ளது. மிகச்சிறந்த வாடிக்கையாளர் சேவையையே அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். இதை முறையாக வழங்குவதற்குக் கூடுமானவரை மனிதத் தலையீடுகளைத் தவிர்த்துவிட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதே சரியான தீர்வாகத் தோன்றியது என்கிறார்.


முதல் நிலை நகரங்கள் மட்டுமின்றி இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கும் சேவையளிக்க விரும்பியதால் பல்வேறு இந்திய மொழிகளில் தளத்தை உருவாக்குவது இவரது மூன்றாவது உத்தியாக இருந்தது.


Mirchi.com திருமணம், பிறந்தநாள் போன்ற விழாக்களுக்கு கிஃப்ட் வழங்கும் சேவையையும் வழங்குகிறது.

“வாடிக்கையாளர்கள் எங்கள் தளத்தில் இடம்பெற்றுள்ள எந்த ஒரு விற்பனையாளரிடமும் இனிப்புகளை ஆர்டர் செய்யலாம். அவர்களது தனிப்பட்ட தேவைக்கேற்ப பாக்ஸ் வடிவமைக்கலாம். படங்கள் அல்லது வார்த்தைகளை அதில் சேர்த்து கிரீடிங் கார்டையும் இணைத்துக் கொள்ளலாம்,” என்றார்.

அவர் மேலும் விவரிக்கும்போது,

“சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த பெற்றோர் தங்களது மகளின் திருமண அறிவிப்பை வெளியிட்டனர். இதற்காக அம்ரித்ஸ்டரில் உள்ள பன்சால் ஸ்வீட்ஸ் ஸ்டோரில் இருந்து ஆர்டர் செய்தனர். திருமண அறிவிப்புடன் 240 பாக்ஸை அவர்களது தனித்தேவைக்கேற்ப வடிவமைத்தோம். இவற்றை 120 இடங்களுக்கு டெலிவர் செய்தோம்,” என்றார்.

இந்நிறுவனம் கார்ப்பரேட் கிஃப்ட்களையும் வழங்குகிறது. இதற்காக கிஃப்ட் பாக்ஸ்கள் நிறுவனத்திலேயே வடிவமைக்கப்படுகிறது. இவை எந்தவித வாசனையும் இல்லாமல் சிறந்த தரத்தில் உருவாக்கப்படுகின்றன.

“காக்னிசன்ட் நிறுவனம் தமிழகம் மற்றும் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் ஸ்வீட் பாக்ஸ் செய்ய ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஸ்வீட் பிராண்டை அணுகியுள்ளது. காக்னிசண்ட் நிறுவனத்தின் இந்த கோரிக்கையை அந்த பிராண்டால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே காக்னிசண்ட் Mirchi.com தளத்தைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டது. நாங்கள் பாக்ஸ்களை சரியான நேரத்தில் டெலிவர் செய்ததுடன் உடனடியாக ஒவ்வொருவருக்கும் ட்ராக்கிங் எண்களை வழங்கினோம்,” என்றார்.

தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு தயாரிப்பிற்கும் விற்பனையாளர் வழங்கும் தள்ளுபடி, திருமணங்கள், திருமண அறிவிப்புகள், ரிடர்ன் கிஃப்ட் போன்ற மொத்த ஆர்டர்களுக்கு மொத்தமாக வழங்கப்படும் தள்ளுபடிகள், கார்ப்பரேட் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் மொத்த ஆர்டர்கள் என பல்வேறு வகைகளில் இந்நிறுவனம் வருவாய் ஈட்டுகிறது.

“எங்கள் தளத்தில் இணைந்திருப்பவர்களில் பலர் வீட்டிலிருந்து தயாரித்து விற்பனை செய்கிறார்கள். இவர்கள் தங்கள் குடும்பத்தின் வருவாயில் பங்களிக்கின்றனர். இவர்களது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. குடும்ப சூழல் காரணமாக வெளியில் செல்ல முடியாத எத்தனையோ பெண்கள் வீட்டிலிருந்தே பாதுகாப்பாக தங்கள் திறனை வெளிப்படுத்தி வருவாய் ஈட்டுகிறார்கள்,” என்று விற்பனையாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்டார் பூர்ணிமா.

பிராண்டுகள்

Foodwalas, Dilocious போன்ற தளங்கள் இந்தப் பிரிவில் செயல்பட்டாலும்கூட Mirchi.com முழுமையான சேவையை வழங்குகிறது என்கிறார் இந்தத் தொழில்முனைவர்.

பிராண்ட் பெயர் சிறப்பாக மனதில் பதியும் விதம், குறைந்த விலை, USFDA, ஏற்றுமதி –இறக்குமதி சான்றிதழ்கள் போன்ற பதிவுகள், 6,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் போன்றவையே mirchi தளத்தின் சாதகமான அம்சங்களாக பூர்ணிமா சுட்டிக்காட்டுகிறார்.


குடும்பத்தினரிடமிருந்து திரட்டப்பட்ட நிதித்தொகையான 20 லட்ச ரூபாய் ஆரம்ப முதலீட்டுடன் Mirchi.com தொடங்கப்பட்டது. ஓராண்டில் 1 கோடி ரூபாய் வருவாயை எட்டியுள்ளது.


முதல் நிலை நகரங்களில் உள்ள பல மிகப்பெரிய பிராண்டுகள் இந்தத் தளத்தில் இணைய ஆரம்பத்தில் தயக்கம் காட்டியுள்ளன. ஒருகட்டத்தில் இந்தப் பிரபல பிராண்டுகள் தளத்தைத் தொடர்புகொண்டு தங்கள் தயாரிப்பைப் பட்டியலிட கோரிக்கை வைத்தன. Mirchi.com தளத்துடன் இணைந்தது குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டன. இதுவே Mirchi.com தளத்தின் வெற்றி என்கிறார் பூர்ணிமா.

“பொருட்கள் சேதமடைவதையும் கூடுதல் ஷிப்பிங் கட்டணம் வசூலிக்கப்படுவதையும் தவிர்க்க விற்பனையாளர்களை சரியான பேக்கிங்கில் சரியான அளவில் பயன்படுத்த வைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. சரியான அளவுகளில் ஸ்பெஷல் ஃபுட் கிரேட் பேக்கேஜிங் மற்றும் வெளிப்புற பேக்கேஜிங் நாங்களே உருவாக்கவேண்டியிருந்தது,” என்றார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதால் கூரியர் நிறுவனங்கள் செயல்படவில்லை. இதனால் டெலிவரி தொடர்பான சிக்கல்களை இந்நிறுவனம் சந்தித்துள்ளது. செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது.


மற்றொருபுறம் விழாக்களில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு இனிப்பு மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளை தனித்தேவைக்கேற்ற பாக்ஸ்களில் டெலிவர் செய்ய மக்கள் Mirchi தளத்தை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

“வருங்காலத்தில் கிஃப்ட் பொருட்களின் வகைகளை அதிகரிக்கவும் தற்போது 600-ஆக உள்ள விற்பனையாளர்களின் எண்ணிக்கையை மும்மடங்காக அதிகப்படுத்தவும் விரும்புகிறோம்,” என்றார் பூர்ணிமா.

ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா