Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

‘2025ல் 1 லட்சம் கோடி மதிப்பில் 1 லட்சம் ஸ்டார்ட் அப்'கள் இந்தியாவில் இருக்கும்’ - மோகன்தாஸ் பை

ஆரின் கேபில் (Aarin Capital ) இணை நிறுவனர் மோகன்தாஸ் பை, இந்திய ஸ்டார்ட் அப் சூழல் குறித்து நம்பிக்கை கொண்டுள்ளவர், 2025 ல், இந்தியா ஒரு லட்சம் கோடி டாலர் மதிப்பீட்டில் ஒரு லட்சம் ஸ்டார்ட் அப்களை கொண்டிருக்கும் என்கிறார்.

‘2025ல் 1 லட்சம் கோடி மதிப்பில் 1 லட்சம் ஸ்டார்ட் அப்'கள் இந்தியாவில் இருக்கும்’  - மோகன்தாஸ் பை

Saturday December 18, 2021 , 5 min Read

பொதுப் பங்குகளை வெளியிட்டுள்ள ஸ்டார்ட் அப்களுக்கு பங்குச்சந்தையிலும் நல்ல ஆதரவு கிடைத்து வரும் நிலையில், இந்திய ஸ்டார்ட் அப் சூழலுக்கான நிதி வரத்து உச்சத்தில் இருக்கிறது. இந்த ஊற்சாகத்திற்கு மத்தியில் ஸ்டார்ட் அப்’களின் மதிப்பீடு தொடர்பான எச்சரிக்கை உணர்வும் இருக்கிறது.


இருப்பினும், ’ஆரின் கேபில்’ (Aarin Capital) இணை நிறுவனர் மோகன்தாஸ் பை, இந்திய ஸ்டார்ட் அப் சூழல் குறித்து நம்பிக்கைக் கொண்டுள்ளவர்,

2025ல், இந்தியா ஒரு லட்சம் கோடி டாலர் மதிப்பீட்டில் ஒரு லட்சம் ஸ்டார்ட் அப்களை கொண்டிருக்கும் என்கிறார்.
பை

யுவர்ஸ்டோரியுடனான நேர்காணலில், மோகன்தாஸ் பை, முதலீட்டாளர்கள் வெளியேறி புதிய மூலதனம் திரட்ட வழி செய்திருப்பதால், அடுத்த சில ஆண்டுகளில் மேலும் பல யூனிகார்ன் நிறுவனங்களின் பொது பங்கு வெளியீடு நிகழும் என்கிறார். ஸ்டார்ட் அப்கள் பொது பங்குகளை வெளியிடுவது, இந்தச் சூழலுக்கு, மதிப்பை உருவாக்கும் விவாதத்திற்கு எல்லாம் என்ன பொருள் தருகின்றன என்பது பற்றி அவர் பேசினார்.


நேர்காணலில் இருந்து:


யுவர்ஸ்டோரி: இந்திய ஸ்டார்ட் அப் சூழலில் தற்போதியை நிதி சூழலை எப்படி பார்க்கிறீர்கள்?


மோகன்தாஸ் பை: 60,000க்கு மேலான ஸ்டார்ட் அப்களுடன் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி கண்டு வருகிறது. இவை 42 யூனிகார்ன் மற்றும் 400 பில்லியன் டாலர் மதிப்பை உருவாக்கியுள்ளன.  2014 முதல் 2020 வரை இந்திய ஸ்டார்ட் அப்கள் 30 பில்லியன் டாலர் நிதி பெற்றன. இந்த ஆண்டு டிசம்பருக்குள் 30 பில்லியன் டாலர் நிதி கிடைத்துள்ளது.


மேலும், 45 யூனிகார்ன்கள் உருவாகும் என எதிர்பார்க்கிறேன். மொத்த எண்ணிக்கை 85 ஆகும்.

2025ல் இந்தியா ஒரு லட்சத்திற்கு மேல் ஸ்டார்ட் அப்’களைக் கொண்டிருக்கும். இவற்றின் மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலர்களாக இருக்கும், 200 யூனிகார்ன்கள் உருவாக்கப்பட்டு, 35 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகப்பட்டிருக்கும்.

இன்று இவை 15 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் மிகப்பெரிய வளர்ச்சியை காண்கிறோம். உலகை இப்போது டிஜிட்டல் புரட்சி தான் வழிநடத்துகிறது. புதுமையாக்கம், மூலதனம், தொழில்முனைவோரின் உற்சாகம் ஆகியவற்றின் தாக்கத்தையும் பார்க்கிறோம்.


ஒய்.எஸ்: இந்த ஆண்டு இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கும் சாதனை அளவு யூனிகார்ன்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?


எம்பி: வெளிநாடுகளில் இருந்து நிதி வரத்து மற்றும் புதுமையாக்கம் காரணமாக யூனிகார்ன்கள் உருவாக்க வேகம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை வந்துள்ள 70 பில்லியன் டாலர் முதலீட்டில் 10 சதவீதம் தான் இந்தியாவில் இருந்து வந்துள்ளது. 2025ல் டிஜிட்டல் காலனியாக விளங்கும் நிலையில் உள்ளோம். அப்போது 200 யூனிகார்ன்களுக்கு மேல் இருக்கும். ஒரு லட்சம் கோடி டாலருக்கு மேல் மதிப்பு இருக்கும்.


யூனிகார்ன்கள் மற்றும் இந்திய ஸ்டார்ட் அப்களில் மேலும் இந்திய மூலதனம் தேவை. மதிப்பீடு உயர்வு மற்றும் பொது பங்கு வெளியீடுகளை அடுத்து முதலாளித்துவ வர்கம் விழித்துக் கொண்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் மேலும் பல யூனிகார்ன்கள் பங்குகளை வெளியிடும். ஏனெனில் இது முதலீட்டாளர்கள் வெளியேறவும், புதிய மூலதனம் வரவும் வழி செய்துள்ளது.


பல ஆண்டுகளாக ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் பணமாக்கல் இல்லை என்று சொல்லி வந்தனர். ஆனால் அண்மை பங்கு வெளியீடுகள் மூலம் இந்தியாவில் போதிய பணமாக்கல் இருப்பதை உணர்ந்துள்ளனர்.


நல்ல வர்த்தக மாதிரி இருந்து அதை தெளிவாக விளக்க முடிந்தால், முலதன சந்தை ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்ய தயாராக உள்ளது.

பை

ஒய்.எஸ்: யூனிகார்ன் அந்தஸ்து பெறுவதற்கான காலம் குறைந்திருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?


எம்பி: தெளிவாக புருந்து கொள்வோம். டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பை உணர்ந்திருப்பதால் பெரிய விசி நிதிகள் மூலதனம் அளிக்க முன் வருகின்றன. பெரிய அளவில் முதலீடு செய்தவன் மூலம் வளர்ச்சியை விரைவாக்கி, போட்டி ஏற்படுவதற்கு முன் ஆதிக்கம் செலுத்தலாம் என அவை நினைக்கின்றன. இந்தியாவுக்குள் நிகழ்வது புதிய எண்ணம்.


யூனிகார்ன் மதிப்பீடு மிகவும் அதிகரித்திருப்பது கண்டு கவலை கொள்ளத்தேவையில்லை. முதலீடு என்பது, முதலீட்டாளர் மற்றும் நிறுவனம் இடையிலான நம்பிக்கை செயல்பாடாகும். இந்த பரிவர்த்தனையில் இரு தரப்பினரும் இணைந்து செயல்பட ஒப்புக்கொள்கின்றனர். வெளியே இருப்பவர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என நினைக்கிறேன்.


மதிப்பீடு நிறைவேறவில்லை எனில் அது இரு தரப்பினரின் பிரச்சனை. இதில் பொது பணத்திற்கு தொடர்பில்லை.


ஒய்.எஸ்: பல நிறுவனர்கள் மதிப்பு உருவாக்கத்தைவிட மதிப்பீட்டில் தான் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளதாக சொல்லப்படுவது பற்றி?


எம்பி: சரி தான். நிறுவனர்கள் மதிப்பு உருவாக்கத்தைவிட மதிப்பீட்டில் தான் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளதாக பலரும் கூறியுள்ளனர். பல நிறுவனர்கள் முதலீட்டாளர்களுக்காக உருவாக்கும் மதிப்பை கொண்டு தாங்கள் மதிப்பிடப்படுவதாக நம்புகின்றனர். இது மூலதனம் ஈட்டும் ஆற்றலாக அமைகிறது. இது மறையாது. பங்குச்சந்தை வரலாற்றில் பங்கு வெளியீட்டில் மதிப்பீடு முக்கிய அம்சமாக இருப்பதைப் பார்க்கலாம்.

கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பட்டியலிடப்பட்ட பின் அது ஏறுகிறதா அல்லது இறங்குகிறதா என்பது தான். பங்கு வெளியீட்டிற்கு பின் சந்தையில் பங்குகளுக்கு அதிகத் தேவை இருப்பதை உறுதி செய்யும் வகையில் இது அமைய வேண்டும். பணத்தை மேஜையில் விட்டுச்செல்வதால் எந்த பயனும் இல்லை. இதன் மூலம் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களுக்கே மதிப்பை உருவாக்குகிறீர்கள்.

பங்கு வெளியீட்டிற்கு பின், புதிய முதலீட்டாளர்கள் பணமீட்டும் வகையில் பங்கு விலையை தீர்மானிக்க வேண்டும் என்பதே நிறுவனர்களுககு எனது அறிவுரையாகும். வெளியீட்டிற்கு பிந்தைய செயல்பாடே பட்டியலிடப்படும் விலையை விட முக்கியம் என உணர வேண்டும்.


ஒய்.எஸ்:  ஸ்டார்ட் அப்கள் பங்கு வெளியிடுவது இந்திய ஸ்டார்ட் அப் சூழலில் முதிர்ச்சியை காட்டுகிறதா?


எம்பி: இது முதிர்ச்சியின் அறிகுறி தான். தனியார் சந்தையில், தனிநபர்களிடையே ஒப்பந்தம் நிகழ்கிறது. பங்கு வெளியீட்டில் பொருளாதாரம் மற்றும் முதலீட்டாளர்கள் நிறுவனத்தை எவ்வாறு பார்க்கின்றனர் என்பதாக அமைகிறது.


மதிப்பு உருவாக்கத்தைவிட மதிப்பீடு அதிகரிக்கும் சுழற்சிகள் இருக்கலாம். மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் சுழற்சி இருக்கலாம். தனியார் சந்தையில் இது 12 முதல் 18 மாதங்களாக இருக்கலாம்.


ஆனால், பொது சந்தையில் எல்லாமே மாறுகிறது. மதிப்பீடு தொடர்பாக பார்ப்பது யாருக்கும் புதிதல்ல. இந்திய தொழில்நுட்ப சூழலை இதற்கு முன் ஆய்வு செய்திராதவர்களுக்கு தான் புதிது.


ஒய்.எஸ்: மிகையான உற்சாகத்தில் இருந்து நிறுவனர்கள், முதலீட்டாளர்கள் தங்களைக் தற்காப்பது எப்படி?


எம்பி: அதிக மதிப்பீட்டிற்கு வழி வகுக்கும் தேவையில்லாத உற்சாகத்திற்கு எதிராக காத்துக்கொள்ள வேண்டும். பொருளாதாரம் அனைவரையும் விட மேம்பட்டது எனும் யதார்தத்தை புரிந்து கொண்டு வளர்ச்சி தொடர்பாக மிகை உற்சாகம் கொள்வதை தவிர்க்க வேண்டும். மூலதன சந்தை அல்லது பொருளாதாரத்தை விட யாரும் உயர்ந்தவர் இல்லை.


நீடித்த மதிப்பு உருவாக்கத்தில் நிறுவனர்கள், முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். வளர்ச்சி இருந்தால் மட்டுமே இது சாத்தியம். மேலும், இந்த ஸ்டார்ட் அப்’கள் காலப்போக்கில் ரொக்கப்புழக்கத்தை காண்பிக்க வேண்டும். ஸ்டார்ட் அப்கள் வளர்வதற்கு அவகாசம் அளிக்க முதலீட்டாளர்கள் தயாராக உள்ளனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து நிதி அளித்துக்கொண்டிருக்க மாட்டார்கள், பலனை எதிர்பார்ப்பார்கள்.


ஒய்.எஸ்: ஸ்டார்ட் அப்களில் மதிப்பீடு செயல்பாட்டை எப்படி பார்க்கிறிர்கள்?


எம்பி: மாதிரிகளைக் கொள்வது கடினமானது. மதிப்பீடு என்பது முதலீட்டாளர்கள் வாங்க தயாராக இருக்கும், மற்றும் விற்பவர் கொடுக்க தயாராக உள்ள விலை. பட்டியலிடுவது என்பது ஒரு முறை நிகழ்வு அல்ல. மதிப்பு உருவாக்க செயல்முறையின் அங்கம். நிறுவனத்திற்கு வெளியே உள்ள அம்சங்கள் விலையை கீழே கொண்டு வரலாம் என்றாலும், இவற்றுடன் எந்த தொடர்பும் இல்லை.


பங்கு வெளியீடு விலை, மதிப்பு உருவாக்கம், நல்ல நிர்வாகம், வெளிப்படையான தன்மை ஆகியவையே கட்டுப்பாட்டில் உள்ள அம்சங்கள். வரம்பில்லா மூலதனம் என்பது இல்லை என்பதால் இஷ்டம் போல செயல்பட முடியாது.


ஒய்.எஸ்: ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் அல்லது முதலீட்டாளர்கள் வெளியேற பங்கு வெளியீடு தான் ஒரே வழியா?


எம்பி: பங்கு வெளியீடுவதா வேண்டாமா என்பதை முதலீட்டாளர்கள் தீர்மானிக்க வேண்டும். நிறுவனங்கள் பணமாக்கும் தன்மை வேண்டி சந்தைக்கு வருகின்றன. மேலும் அதிக, மூலதனம் திரட்ட பங்குச்சந்தை சிறந்த வழி. மூன்றாவதாக ஊழியர்கள் பங்கு மூலம் மதிப்பு உருவாக்க வேண்டும். பங்கு வெளியீட்டில் நிறைய சாதகங்கள் உள்ளன.


ஒய்.எஸ்:  சந்தையில் ஒருவித குமிழ் நிலவுகிறதா?  


எம்பி:  இது மதிப்பீடு மற்றும் விலை சார்ந்தது. மதிப்பு மற்றும் விலை இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். விலை நீங்கள் கேட்பது. மதிப்பு நீங்கள் உருவாக்குவது. ஸ்டார்ட் அப்களுக்கு பங்கு வெளியீட்டிற்கு பிறகு விலை நீடித்து நிறுவனம் மீது நம்பிக்கை வலுப்பெற வேண்டும்.


நிறுவனர்களுக்கு பணிவு இருப்பது அவசியம். வெற்றிகரமாக விளங்கும் போது இந்த குணமும் அதிகரிக்கும். ஏனெனில் மதிப்பை அளிக்கும் சக்திகள் மிகவும் பெரியவை ஆகும். லட்சக்கணக்கான முதலீட்ட்டாளர்களுக்கான பொறுப்பையும் மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் நம்புவதை விட வேகமாக மூலதன சந்தை முதிர்ச்சியை கொண்டு வரும்.


ஆங்கிலத்தில்: திம்மையா புஜாரி | தமிழில்: சைபர் சிம்மன்