குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்கள்: TRAI அதிரடி திருத்தம்!

கேபிள் இணைப்பு விதிமுறைகளை டிராய் திருத்தி அறிவித்துள்ளதுபடி, இனி கேபிள் மாதச்சந்தா எவ்வளவு, அதில் எத்தனை சேனல்கள் கிடைக்கும் தெரியுமா?

4th Jan 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

கேபிள் இணைப்பு  மூலம் தொலைக்காட்சி சேனல்களை பார்க்கும் வாடிக்கையாளர்கள் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களை பார்க்கும் வகையில் விதிமுறைகளை திருத்தி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.


இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, நுகர்வோர் நலன் காக்கும் வகையில், கேபிள் மற்றும் ஒளிபரப்புச் சேவைகளுக்கான புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பில் திருத்தங்கள் செய்துள்ளது.

டிராய்

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“கேபிள் வாடிக்கையாளர்களுக்கு மாதந்தோறும் அதிகபட்சமாக ரூ.160க்குள் சேனல்களை வழங்க வேண்டும் என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளை பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் கூடுதல் இணைப்புகளுக்கு அதிகபட்சமாக 40 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும்,” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், நெட்வொர்க் திறன் கட்டணமாக 200 சேனல்களுக்கு ரூ.130 (வரி நீங்கலாக) நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மத்திய தகவல், ஒளிபரப்புத்துறையால் கட்டாய சேனலாக அறிவிக்கப்பட்டுள்ள சேனல்கள் இந்த பட்டியலில் அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது.


6 மாதம் அல்லது அதற்கு மேலான நீண்டகால சந்தாதாரர்களுக்கு தள்ளுபடி வழங்குவதற்கு வினியோக தள ஆபரேட்டர்களுக்கு டிராய் அனுமதி அளித்து உள்ளது. வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து வாங்கும் சேனல்களின் கட்டணம், மொத்த தொகுப்பு சேனல்களின் கட்டணத்தைவிட ஒன்றரை மடங்குக்கு மேல் இருக்கக்கூடாது என டிராய் குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய விதிகள் ஆனது ஒளிபரப்பு மற்றும் கேபிள் டிவி சேவைகளுக்கான அதன் 2017 கட்டண வரிசையில் கட்டுப்பாட்டாளர் செய்த மாற்றங்களின் ஒரு பகுதியாகும்.


இந்த விதிமுறைகள் அனைத்தும் மார்ச் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொகுப்பு: சைபர்சிம்மன்


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India