2022: ஸ்விக்கி Instamart-இல் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டது என்ன தெரியுமா?
உணவு ஆர்டர்களைத் தவிர, Swiggy Instamart-யில் மளிகைப் பொருட்கள் மற்றும் தினசரி அத்தியாவசியப் பொருட்களை மக்கள் எவ்வாறு ஆர்டர் செய்துள்ளனர் என்பது பற்றியும் ஸ்விக்கி பட்டியலை வெளியிட்டுள்ளது.
2022ம் ஆண்டு இந்தியர்கள் அதிகமாக ஆர்டர் செய்த உணவுகளின் பட்டியலை ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் 7வது முறையாக பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் செய்த சாதனை:
உணவு ஆர்டர்களைத் தவிர, Swiggy Instamart-யில் மளிகைப் பொருட்கள் மற்றும் தினசரி அத்தியாவசியப் பொருட்களை மக்கள் எவ்வாறு ஆர்டர் செய்துள்ளனர் என்பது பற்றியும் ஸ்விக்கி பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஆர்டர் செய்யப்பட்ட மளிகைப் பொருட்களின் பட்டியலில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் (Instant Noodles) மற்றும் ஃபுல்-க்ரீம் பால் முதலிடத்தில் உள்ளன. பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் இருந்து மட்டும் இன்ஸ்டாமார்ட்டில் ஐந்து கோடி ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளன.
அதிக ஆர்டர் செய்யப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளின் பட்டியலில், வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி, தர்பூசணிகள், வாழைப்பழங்கள் மற்றும் இளநீர் ஆகியவை இடம் பிடித்துள்ளது.
வழக்கத்திற்கு மாறான ஆர்டர்களின் அடிப்படையில்,
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் போது பால் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது, வேறு எந்த நகரத்தையும் விட இன்ஸ்டாமார்ட்டில் இருந்து பெங்களூருவுக்கு அதிக ஐஸ் க்யூப்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டாமார்ட்டில் வழக்கத்திற்கு மாறான தேடல்களில் பெட்ரோல், மம்மி, சோபா, உள்ளாடைகள் மற்றும் படுக்கைகள் போன்றவை சர்ச் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
'ஒரு நிமிடத்திற்கு 137 ஆர்டர்கள்' - 2022ம் ஆண்டு ஸ்விக்கியில் அதிகம் சாப்பிட்ட உணவு எது தெரியுமா?